Community

வாழ்க்கை துணை

 கீர்த்தனா வீட்டிற்கு முதல் பிள்ளை,

அம்மா நீலா, முதல் தங்கை கவிதா,
இரண்டாம் தங்கை ப்ரியா,

கீர்த்தனா ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவள்

வீட்டில் பணம் இருப்பதே சொர்பம்,
ஆளிர்க்கு 4 துணி இருப்பதே அதிகம்
12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தாள்
இனி கல்லூரி கு போக வேண்டும்.
அப்பா! நினைத்து கூட பார்க்க முடியாத
தூரத்தில் வேறு ஒரு பெண் உடன்,
பழைய நினைவுகள் வந்து கண்களை நினைதது

அப்போது கீர்த்தனா 10ம் வகுப்பு

படித்து வந்தாள், கவிதா 8ம் வகுப்பு,
ப்ரியா 6ம் வகுப்பு, ஒரு நாள் அப்பா
கணேசன், அம்மா நீலா உடன் சத்தம்
போட்டு கொண்டு இருந்தார், இனி
என்னை எதிர்பார்க்காதே , நான் எனக்கு
பிடித்த வாழ்க்கையை தேடி போறேன்,
என்று கத்த, அம்மா காலை பிடித்து
கொண்டு அழுது கொண்டு இருந்தாள்,
எங்க பிள்ளைகளை கொஞ்சம் நினைத்து
பாருங்க, வேணாம்ங்க pogaathinga என்று
கதறினாள், சிறிதும் பொருட்படுத்தாமல்
காலை உதறி விட்டுவிடு சென்று விட்டார்,
இதனை பார்த்து அழுது கொண்டு இருந்த
கீர்த்தனா ஒடி சென்று அம்மாவை கட்டி
பிடித்து கொண்டு, அம்மா அழாத அம்மா
நான் வேணும்னா வேலைக்கு போறேன்
அம்மா என்று அழுக, பிள்ளையை கட்டி
பிடித்து கொண்டாள் , அதே நேரம் கவிதா
ப்ரியா வீளயாடீ விட்டு வீட்டுக்கு வர,
கண்களை துடைத்து கொண்டு அவர்களுக்கு சாப்பாடு போட்டு தூங்க
வைத்தாள் நீலா

அடுத்த நாள் காலை அருகில் இருந்த ஆஸ்ரமதில் சென்று நிலமையை கூறி
வேலை கேட்கவே வேலை கிடைத்தது,
அதில் வரும் வருமானத்தை வைத்து
பிள்ளைகளை வளர்த்து வந்தாள்.

 தற்போது கீர்த்தனா பள்ளி கல்வி 

முடித்து விட்டாள் , இனி கல்லூரி படிக்க
வைத்து விட்டால், அவள் வேலைக்கு சென்று மற்ற பிள்ளைகளை படிக்க வைக்க
உடவுவாள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது,
எனவே ஆஸ்றமம் நடத்தி வந்த கமலம்
அம்மா விடம் உதவி கேட்டு இருக்கிறாள்
நீலா.

உதவி செய்வதாக கமலம் ஒத்துக்கொள்ளவே , நீலா மன

நிறைவு அடைந்தாள்.

ஒரு வழியாக கீர்த்தனா கல்லூரிக்கு

செல்ல தயார் ஆனாள். முதல் நாள்
கல்லூரியில் பல தரப்பட்ட மாணவ மாணவியர் இருந்தனர், இதற்கு இடையில்
மிகவும் எளிமையான தோற்றத்தில்
கீர்த்தனா, ஆனாலும் அழகாகவும்
அறிவாகவும் இருந்தாள்

அதே வகுப்பில் செல்வாக்கு படைத்தவரீன்
மகளான காவியாவும் படித்து வந்தாள்,
அவளுக்கு கீர்தனாவை பார்த்தாலே
பிடிக்கவில்லை.

மதன், அவனும் கீர்த்தனா வின் வகுப்பில்

படிக்கும் நடுத்தர குடும்பதை
சேர்ந்தவன், யாரையும் ஏர் எதுத்தே
பார்க்காத கீர்தனாவை எப்படியாவது
தன்னை பார்க்க வைக்க வேண்டும்
பேச வைக்க வேண்டும் என்று
நினைத்து கொண்டு இருந்தான்.

கீர்த்தனாவோ கடிவாளம் போட்ட

குதிரையை போல படிப்பிலயே
முழு கவனம் கொண்டு இருந்தாள்,
உண்மையை சொல்ல போனால்
கீர்த்தனாவுக்க்கும் மதன் மேல் இஸ்ட்டம்
தான். ஆனால், மதன்உடன் பேச மனம்
வர வில்லை, அம்மா கண் முன் வந்து
போனாள், மேலும் காவியா மதனை விரும்புவது போல் தெரியவே,
அவளுடன் போட்டி போடவும் விரும்ப
வில்லை.

இப்படியே மூன்றாம் ஆண்டின் இறுதியை
நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
ஆனால் மதனால் கீர்தனாவை அவனுடன்
பேச வைக்க முடிய வில்லை, இந்நிலையில்
கல்லூரியில் சுற்றுலா திட்டமிட்டு
இருந்தனர், ஆனால், கீர்த்தனா வை
தவிர அனைவரும் பெயர் கொடுத்து
இருந்தனர். கீர்த்தனா பெயர் கொடுக்காததை
பார்த்த ஆசிரியர், அனைத்து செலவுகளயும்
தான் பார்த்து கொல்வதாக சொல்லி
கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்தார்.
கீர்த்தனாவும் அம்மாவிடம் அனுமதி
பெற்று சுற்றுலா வுக்கு தயார் ஆகி
கல்லூரிக்கு வந்தாள்.

கல்லூரியில் அனைத்து மாணவர்களும்
பேருந்திர்காக காத்து கொண்டு
இருந்தனர், இந்நிலையில் கீர்த்தனா
கல்லூரிக்கு அதே பழைய துணியை
போட்டு கொண்டு வரவும், காவியா தன்
நண்பர்களுடன் கீர்தனாவை கிண்டல்
செய்து கொண்டு இருந்தாள்.

இதை கேட்டு மதன் கோபமாக காவியாவை
பார்த்தான். கீர்த்தனா சென்று ஆசிரியருடன்
அமர்ந்து கொண்டாள்.
சுற்றுலா வில் அனைவரும் சந்தோசமாக
சுற்றி பார்க்க கீர்த்தனா மட்டும்
ஆசிரியர் மற்றும் ஆசிரியை களையே
பின்தொடர்ந்தாள்.

எப்படியாவது கீர்த்தனாவுடன் பேசியே
ஆக வேண்டும் என எண்ணி மதன்
ஒரு சீட்டில் உன்னுடன் பேச வேண்டும்
என்று எழுதி போட்டான். அதை சற்றும்
கண்டு கொள்ளாமல் கீர்த்தனா ஆசிரியர் ஐ பின் தொடர்ந்தாள்.

சுற்றுலா முடிவடையும் நிலையில்

அனைவரும் கோவிலுக்கு சென்றனர்.
அனைவரும் கண்களை மூடி சாமியை
வணங்கி கொண்டு இருக்கும் போது
யாருக்கும் தெரியாமல் மதன்
கீர்த்தனாவின் கையை பிடித்து
கோவிலுக்கு பின் புறம் இழுத்து வந்தான்.

என்ன? என்றாள் கீர்த்தனா
உன்னுடன் பேச வேண்டும் என்றான்
மதன்.
என்ன? என்றாள் கீர்த்தனா
எனக்கு உன்னை பிடிக்கும், ஐ லவ்
u என்றான் மதன்.
எனக்கு காதல் பிடிக்காது என்றாள்
கீர்த்தனா
காதல் பிடிக்காதா? இல்லை என்னை
பிடிக்காதா? என்றான் மதன்
இரண்டும் தான் என்றாள் கீர்த்தனா.
சரி அப்படினா உனக்கு என்னை
பிடிக்காது னு நிரூபி.
எப்படி நிரூபணம் செய்றது என்றாள்
கீர்த்தனா.
இப்ப்பவே போய் என்னை பற்றி ஆசிரியர்
இடம் புகார் செய் என்றான் மதன்.
என்ன்னால் நீ தண்டனை அனுபவிக்க
கூடாது என்று போக முற்பட்டாள்.
கையை பிடித்து நிறுத்தினாண் மதன்.

இதற்கு இடையில் கோவில் பூசாரி
என்ன அங்க pratchanai? என்று கேட்டார்.
யார் மா இவன் என்று கேட்டார்.

இல்லை அண்ணா ஒன்றும் இல்லை
இவர் என் friend தான் என்றாள்.

நீங்க அந்த பஸ் இல் வந்தவர்களா?
என்றார்.
ஆம் என இருவரும் தலை அசைக்க
பஸ் poiduchi , போய் பிடிங்க என்று
சொன்னார்.
இருவரும் ஒட பஸ் சென்று விட்டது.
ஆசிரியர், ஆசிரியை உடன் இருக்கிறாள்
என்று எண்ண, ஆசிறியைஉம் அப்படியே
நினைத்தார்.

 கீர்த்தனா பஸ் poiruchi, உன்னால

தான் என அழுக ஆரம்பிக்க,
மதன் என்னிடம் moneypurse இருக்கு
வா போய் பேருந்து நிலயம் எங்க இருக்கு
னு கேட்டு போவோம் னு சொன்னான்.

வேறு வழியின்றி கீர்த்தனாவும் பின் தொடர பேருந்து னிலயத்தை அடைந்தனர்.

பேருந்து நிலயத்தை அடைந்த பின் சிறிது
நேரம் பேசாமல் கழிய, மதன் ஆரம்பித்தான்.

கீர்த்து; எனக்கு உன்னை என்று முதல் முதலாக
ப்பார்த்தேனோ அன்றில் இருந்தே
உன்னை ரொம்ப பிடிக்கும்.
உன் எளிமை, அமைதி, ரொம்ப ரொம்ப
பிடிக்கும்.
உன் கிட்ட பேச ரொம்ப நாளா ட்ரை
பண்ணிடு இருக்கேன். என்று தொடர

கீர்த்தனா போதும். பேசாதே என தடுத்தாள்.

ஏன்? ஏன்? பேச கூடாது? என் மனதில்
இவ்வளவு நாளாக சொல்ல நினைததை
சொல்லியே ஆக வேண்டும். என்று
தொடர்ந்தான் மதன்.

முகத்தை வேறு புறம் கீர்த்தனா திருப்பி
கொள்ள, மதன் அவள் கையை எடுத்து
தன் மார்பில் வைத்து, கேள் என் இதயம்
உன்னை பார்த்ததில் இருந்து உனக்காக
துடித்து கொண்டு இருக்கிறது என்று
சொல்ல, கீர்த்தனா கையை எடுக்க
முயற்சி செய்து தோர்த்து போனாள்.

அவள் இதயம் துடிப்பது மட்டும் இன்றி
avan இதய சத்தமும் கேட்டது. கையை
பட் என எடுத்து கொண்டு, வந்து நின்ற
பேருந்தில் குடு குடு வென ஒடி சென்று அமர்ந்தாள்.

ஜன்னல் வழியே அவனை பார்த்தாள்,

பாவமாக இருந்தது.

avan பார்க்கவே வேறு புறம் தலையை

திருப்பி கொண்டாள்.

 எழுந்து போய் தண்ணீர் பாட்டில் வாங்கி

கொண்ட்உ வந்து கொடுத்து விட்டு, வேறு
என்ன சாப்பிட வேண்டும் என்று கேட்டான்.

வேண்டாம் என தலை அசைதாள். சரி
போ எனக்கும் வேண்டாம் என்று சொல்லி
விட்டு பேருந்தில் ஏரி அவள் சீட் irku பின்
சீட் இல் அமர்ந்து கொண்டான்.

டிக்கெட் எடுத்து கொண்டான் மதன்,
பஸ் புறப்பட்டது.

ஒரு வழியாக கல்லூரிக்கு வந்து சேர்ந்தனர். இவர்களை ஒன்றாக பார்த்த
காவியா விற்கு ஆத்திரம் தாங்கவில்லை.
ஆசிரியர் வந்து என்னம்மா ஆயிற்று? என்று
கேட்டார்.

என் காதில் போட்டு இருந்த தோடு
காணவில்லை என கோவிலில்
தேடி கொண்டு இருந்தேன் sir
பஸ் புறபட்டுவிட்டது sir என்றாள்
கீர்த்தனா.

சரி கிடைத்ததா மா, என்றார் ஆசிரியர்

கிடைத்தது sir என்றாள்.

நீ எங்க டா இருந்த மதன் என்று ஆசிரியர் கேட்க

sir கோவிலை சுத்தி பார்த்து கொண்டு

இருந்தேன் sir. பஸ் கிளம்பிடுச்சீ sir என்றான்.

சரி போய் பேக் எல்லாம் எடுத்துகிடு
கிளம்புங்க என்றார். அனைவரும் வீட்டிற்கு
கிளம்பினர்.

வீட்டிற்கு வந்த உடன் மதன் வாங்கி தந்த
தண்ணீர் பாட்டில் ஐ பத்திர படுத்தினால்
கீர்த்தனா.

ஒரு வழியாக கல்லூரி படிப்பு முடிய

ஒரு நல்ல கம்பெனி இல் வேலை
கிடைத்தது கீர்த்தனா விற்கு, அதே
க்
கம்பெனி இல் kastapattu வேலை வாங்கினான் மதன்.
மதனுகாக காவியாவும் அதே
companyil சேர்ந்தால்

கவிதா வும் கல்லூரி யில் சேர்ந்தால் ,
ப்ரியா 11ம் வகுப்பு படித்து கொண்டு
இருந்தாள்.

இதற்கிடயில் கீர்த்தனா வின் திறமையை பார்த்து வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்தது, ஆனால் கீர்த்தனா
ஏற்கவில்லை.

ஒரு நாள் கீர்த்தனா உடன் மதன் பேச
முற்படும் போது காவியா இடை
மறித்து, மதன் ஐ லவ் u என்றாள்.
அதற்கு மதன் sorry, நான் கீர்தனாவை
காதலிக்கிறேன் என்று சொல்லி விட்டு
சென்று விட்டான்.

உடனே அழுகை உடன் வீட்டுக்கு சென்று
அப்பா விடம் கூறி, மதன் வீட்டில் சென்று
பேச சொன்னாள்.உடனேய் காவியாவின்
அப்பா வும் சென்று பேசி மதன்
பெற்றோரிடம் சம்மதமே வாங்கி விட்டார்.

மதன் மறுக்கவே பெற்றோர் கட்டாயப்படுத்தி
தர்க்கொலை செய்ய போவதாக
மிரட்டி ஒத்து கொள்ள வைத்தனர்.

திருமண ஏற்பாடு வேகமாக நடக்க
மதன் தடுக்க முயற்சி செய்து கொண்டு
இருந்தான்.

இந்நிலையில் கீர்தனாவிடம் பத்திறிக்கையை கொண்டு
வந்த காவியா, கல்யாணத்திற்கு வராதே
என்று பத்திரிகையை வைத்து விட்டு
சென்று விட்டாள்.

பத்திரிக்கையை பார்த்த கீர்த்தனா
செய்வது அறியாமல், வெளி நாடு
செல்ல 5 வருட contractல் கைஎழுத்து
போட்டு ஆபீஸ் ல் கொடுத்து விட்டாள்.

கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன்பே
வெளிநாடு புறப்பட்டு சென்று விட்டாள்
கீர்த்தனா.

அக்கா வெளிநாட்டில் இருக்க, கவிதா
படித்து முடித்து வேலைக்கு சேர்ந்த உடனே
யாரயோ திருமணம் செய்து கொண்டு வந்து நின்றாள். நீலா விற்கு நெஞ்சேய்
நின்று விடும் போல் ஆயிற்று.

அந்த கஸ்டதில் இருந்து மீள் வதற்குள்

ப்ரியா 12ம் வகுப்பு முடிப்பதற்குள்
மாலயும் கழுத்தும் ஆக வந்து நின்றாள்.

நீலா எப்ப டா 5 வருடம் முடியும், கீர்த்தனா

வந்தால், அவளுக்கு ஆவது நல்ல முறையில்
திருமணம் செய்து பார்க்க வேண்டும்
என்று காத்து கொண்டு இருந்தாள்.

5 வருடம் கழித்து வந்த கீர்த்தனா

நடந்ததை எல்லாம் கேட்டு அதிர்ந்தாள்.

அம்மா என்று கூப்பிட்டு கொண்டு
வீட்டில் நுழைந்தால். கீர்த்தனா என்று
ஒடி வந்து கட்டி கொண்டாள் neelaa.
இரு உனக்கு பிடித்த அனைத்தயும்
சமைத்து இருக்கிறேன் என்று சொல்லி
சாப்பிட வைத்து, மடியில் படுக்க
வைத்து 5 வருடமாக நடந்த அனைத்தயும்
சொல்லி விட்டு, இறுதியாக உனக்கு
ஒரு கல்யாணத்தை பண்ணி பார்க்க
வேண்டும், நல்ல பொண்ணு மா நீ, உன்
கல்யாணத்தை பார்பெனா? என்று தெரியவில்லை
என்று கலங்க, அம்மா, நான் இருக்கேன்
மா உனக்கு, நீ அழுகாத, தூங்கு என்று
கால் அழுத்தி தூங்க வைத்து போர்வையை
போத்தி விட்டு விட்டு தானும் படுத்து
கொண்டாள்.

காலை எழுந்து , அம்மா tea வைகடுமா?
என்று கேட்ட வாறு அருகில் சென்றாள்.

எந்த ஒரு அசைவும் இல்லாமல் கிடந்தாள்
நீலா.

கீர்த்தனா அழுத அழுகையில் ஊறே
அதிர்ந்தது.கவிதா, ப்ரியா வந்து விட
இரண்டு நாளில் அனைத்து சடங்கும்
முடிந்தது.

ப்ரியா பேச ஆரம்பித்தாள், அக்கா

அடுத்து என்ன? கல்யாணம் பண்ணிகோ
என்றாள்

இல்லை, கல்யாணம் பற்றி எதுவும்
தோன்ற வில்லை என்றாள் கீர்த்தனா

சரி, நீ வெளி நாடு போற அளவுக்கு
படிட்சி இறுக்க, கவிதா வும் வேலைக்கு
போறா, நான் தான் சீக்கிரமா
கல்யாணம் ப்பண்ணிகிடேன், என்
கணவர் ஒண்ணும் பெரிய வேலைக்கு
போகறது இல்ல, வாங்கற சம்பளம்
போதல. நீ கொஞ்சம் help பண்ணு என்றாள்.

கவிதா வும் எனக்கும் help பண்ணு அக்கா
என் கணவர் குடிக்கிறார், நாளை எனக்கு
என்று ஒரு குழந்தை பிறந்தால் பணம்
பத்தாது, என்றாள்.

சரி என்றாள் கீர்த்தனா.


 2 வருடம் கழித்து இருவருக்கும் உதவியது போக, தனக்கு என்று ஒரு சிறிய வீடு ஒன்றை வாங்கினாள், கீர்த்தனா.

கவிதா, பிரியா இருவரும் அடிகடி
வந்து பார்த்து விட்டு சென்றனர்.

ஒரு நாள் கவிதா, ஆபீஸ் கு வந்து அக்கா
உனக்காக நான் சமைத்து வைக்கிறேன்
என்று சாவி வாங்கி கொண்டு போனாள்.

வேலையை முடித்து வீட்டுக்கு வரும் போது
சத்தம் காதை பிளந்தது.
கவிதா வும், ப்றியாவும் சண்டை போட்டு
கொண்டு இருந்தனர்.

ப்ரியா: yen டி சமைத்து கொடுத்து இந்த
வீட்டை நீ எழுதி வாங்கலாம் என்று
பார்கிறாயா?

கவிதா; ஆமாம் டி, உனக்கு விட்டு
க்கொடுப்பேன் னு பாத்தியா?

ப்ரியா; அவளுக்கு தான் புரூஸனும்
இல்லை, பிள்ளையும் இல்லை, அது
நால உனக்கும் உரிமை இருக்க்கூ
எனக்கும் உரிமை இருக்கு, 2ஆக
தானே பிறிய்னும், நீயே சமைத்து
கொடுத்து நல்ல பேர் எடுத்து, உன்
perukkku எழுதி வாங்கலாம் னு
பாக்கறியா?

கீர்த்தனா; போதும் நிறுத்துங்க, வீட்டை
விட்டு வெளிய போங்க, என்று கத்த
இருவரும் வெளியேறினர்.

இரவு முழுவதும் அம்மா போட்டோ விண்
அடியில் அமர்ந்து அழுது விட்டு சிவந்த
கண்களுடன் அம்மா வேலை பார்த்த
ஆஸ்ரமதிர்கு வந்தாள்.

குழந்தைகள் வீளயாடீ கொண்டு இருந்தார்கள்.கீர்த்தனா வை பார்த்த உடன்
ஆஸ்ரமதின் உரிமை யாளர் கமலத்து
அம்மா வந்து விட்டார். யாரிடம்
கொட்டுவது என்று தெரியாமல் க்கமலாதிடம்
கொட்டி விட்டாள்.

அம்மா, என் அம்மா, தங்கைகள்
நல்லா இருக்கணும் னு நினைத்து
உழைத்தேன், என் அம்மா மட்டும்
தான் எனக்கு என யோசிக்கும்,
இப்ப எங்க அம்மா வும் இல்லாமல்
நான் அனாதை ஆகி விட்டேன் என்று
அழுதாள்.

இந்த உலகில் யாருமே அனாதை இல்லை
அம்மா, உனக்கான வாழ்க்கை
துனையை நீ தேடி கொள் அம்மா, அந்த
குழந்தை களை பார் , அப்பா வும் இல்லை
அம்மாவும் இல்லை, எவ்வளவு
சந்தோசமாக வீளயாடீ கொண்டு
இருக்கிறார்கள், நீயும் யாரும்
இல்லை என்று கலங்காதே, கடவுள்
இருக்கிறான் என்று கூறி விட்டு
சென்று விட்டார்.

வாழ்க்கை துனையை தேடி கொள்வதா?
என்னால் மதனை தவிர yaarayum
நினைத்து கூட பார்க்க முடியாதே!
என மறுபடியும் அழுதாள்.

சிறிது நேரம் அப்படியே உறைந்து போய்
விட்டாள். குழந்தைகளின் கூச்சல் சத்தம்
எழுப்பியது.

பட்டென்று எழுந்தாள், வேக வேகமாக
கமலத்து அம்மா விடம் போனாள்.

கீர்த்தனா;, எனக்கு ஒரு உதவி வேண்டும்,

கமலம்; சொல் கீர்த்தனா

கீர்த்தனா; அம்மா, எனக்கு இப்போது
யாரும் இல்லை, இந்த குழந்தைகளுல்
ஒருவருக்கு நான் தாயாக வேண்டும்.

கமலம்; கீர்த்தனா உனக்கு வயசு கம்மி,
நீ உனக்கான வாழ்க்கை துனையை
தேடி கொள்

கீர்த்தனா; கணவன் மட்டும் தான் வாழ்க்கை
துணையா? நான் எப்படி எல்லாம்
வாழ ஆசை ப்படேனோ அப்படி அந்த
குழந்தையை வாழ வைக்கிறேன், இனி
எனக்கு துணை அந்த குழந்தை, அந்த
குழந்தைக்கு துணை நான் என்று
sonaal

கமலம்; சரி அம்மா, நீ நான்றாக வாழ
என் ஆசிர்வாதங்கள்

நெறாய் வீளயாடீ கொண்டு இருந்த குழந்தைகளிடம் சென்றாள், ஒரு பையனை த்தூக்கினால், யாரு டா ராஜா
உன்னை த்தூக்குறாங்க? என்று
குழந்தைகள் கூச்சல் இட
கீர்த்தனா குழந்தை இடம்; நான்
தான் பா உன் அம்மா, இவ்வளவு
நாள் நான் வெளி நாட்டில் வேலை
பார்த்து வந்தேன், இப்போது
வீட்டுக்கு வந்து விட்டேன், வா
தம்பி வீட்டுக்கு போகலாம்,
என்று sonaal.

ஐஐ எங்க அம்மா வந்துடாங்க,
நான் வீட்டுக்கு போறேன் என்று மாறி
மாறி கீர்த்தனா வின் முகத்தில் முத்தம்
களை கொடுத்து விட்டு,bye bye
என்று சொல்லி ராஜா அனைவரிடமும்
விடை பெற்று கொண்டான்.:heart::heart::heart::heart::heart::heart::heart::heart::heart::heart::heart::heart::heart::heart:

1 Like

Aangila sorkal niraiyaa irukku… vaazhthukkal…