Community

காட்சி பிழைதானோ...!!!

காட்சி பிழைதானோ…!!!

வாகனங்கள் முன்னும் பின்னனும் சென்று கொண்டு இருக்க… ஹார்ன் சத்தமும்… மனிதர்களின் சத்தமும் அந்த இடத்தையே பேரிரைச்சலாகி கொண்டு இருந்தது…

தனக்கும் அதற்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் அந்த பரபரப்பான நெடுஞசாலையில் இருந்து ஒரு சிறிய ரோடு பிரிந்தது…

இருபுறமும் மரங்கள் சூழ… அங்கங்கே ஒரு சில வண்டிகள் நின்று மரத்தின் நிழலில் இளைப்பாறி கொண்டு இருந்தது… பெரும்பாலும் காவல் துறை வண்டிகளே இருந்தன…

இவைகளை கடந்து ஒரு காவல் துறை வாகனம் சென்று கொண்டு இருந்தது… அதில் ஒரு ஓட்டுநர்… ஒரு constable அவர்கள் பின்னால் ஒரு இளைஞன் அமர்ந்து சென்று கொண்டு இருந்தனர்…

மாநில ஆலோசனை மையம்… (counseling center) என்ற ஒரு பெரிய பெயர் பலகை அதை தாண்டி சென்ற வண்டி ஒரு கட்டிடத்தின் அருகில் நின்றது…

Constable இறங்கி ஏதோ விசாரித்துவிட்டு அந்த இளைஞனிடம் :“வா… வா… இங்க தான்… இறங்கு சீக்கிரம்…” என்று அதட்டி கொண்டு இருந்தார்…

அவன் மௌனமாக இறங்கி அங்கு இருந்த காத்திருப்போர் அமரும் இடத்தில் இருந்த ஒரு நார்காலியில் அமர்ந்தான்…

Driver:“என்ன ஆச்சு sir…”

Constable :“என்ன சொல்ல… police வேலை ன பெருசா வெளியே பேசிக்குறாங்க… இவனுங்க கூட குப்பை கொட்டுற கொடுமை நமக்கு தானே தெரியும்…” என்று சலித்து கொண்டார்…

Driver :“ஆமாம் inspector வேற கோவமா இருந்தாரு என்ன case…”

Constable :“இது ஒண்ணுத்துக்கும் உதவாத suicide case யா… இதுக்கு நாம தான் counseling கூட்டிட்டு வரணுமா… வேற வண்டி இல்லை அதான் அவர் வண்டியை கொடுத்தாரு… அதுக்கு தான் அவ்வளவு tension அவருக்கு…”

Driver :“oh… பார்த்தா சின்ன பையன் மாதிரி இருக்கான்…”

Constable :“சாகனும் னு முடிவு எடுத்தா என்ன வயசு வேண்டி இருக்கு… ஆனா ஒழுங்கா சாக தெரியாம… பாதில காப்பாத்தி இப்படி நம்ம தலைல வந்து விடியுது… சாகனும் ன ஏதாவது மலை உச்சில இருந்து குதிச்சு இருக்கலாம்… ஒரு நாள் வேலையோடு போய் இருக்கோம்… இப்ப பாரு ஒரு வாரம் இழுத்து அடிக்கும்…”

Driver :“அது சரி தான்… ஆமாம் இப்ப இங்க யாரை பார்க்க வந்து இருக்கோம்…”

Constable :“இவன் counseling க்கு மணிமேகலை னு ஒரு madam…” என்று இவர்கள் பேசிக்கொண்டு இருக்க…

அங்கு இருந்த ஒரு அறையில் இருந்து ஒருவர் வந்து :“madam வந்துட்டாங்க உங்கள கூப்புடுறாங்க…” என்று சொல்ல…

Constable அவனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்…

இஸ்திரி போட்டு கட்டி இருந்த காட்டன் புடவை… முடியை தூக்கி போட்டு ஒரு கொண்டை… மெலிதாக frame இல்லாத கண்ணாடி… புருவங்கள் நடுவே ஒரு சின்ன போட்டு… ரெண்டு கையிலும் ஒரு வளையல்… பார்க்கும் போதே முகத்தில் தெரிந்த சாந்தம்…

Constable :“மேடம்… case sheet…” என்று அவள் முன் இருந்த table மீது மணிமேகலை என்று இருந்த அவளின் பெயர் பலகை அருகில் வைத்தார்…

மணிமேகலை :“ok… வெளியே wait பண்ணுங்க…” என்று அனுப்பினாள்…

அவள் முன் பரட்டை தலையும் தடியுமாய் அமர்ந்து இருந்த அவனை ஏற இறங்க பார்த்தாள்… கசங்கிய சட்டை… அழுக்கு pant… முகத்தில் கையிலும் சிறு சிறு காயங்கள் அதற்கு மறுத்து போட்டு இருந்தது…

மணிமேகலை :“helo…”

" "

மணிமேகலை :“helo Mr. அறிவழகன்…” என்று கை நீட்டினாள்…

அறிவழகன் பதில் பேசாமல் அமர்ந்து இருந்தான்…

மணிமேகலை :“சொல்லுங்க இப்ப தான் உங்க case sheet பார்த்தேன்… வயசு 26 தான் ஆகுது… bsc வரைக்கும் படிச்சு இருக்கீங்க… அப்புறம் ஏன் இந்த sucide…”

அறிவழகன் :" "

மணிமேகலை :“நீங்க ஏதாவது சொன்னா தான் நான் report prepare பண்ண முடியும்… இல்லனா இன்னைக்கும் நீங்க ஜெயில்ல தான் இருக்கனும்…”

அறிவழகன் :" "

மணிமேகலை :“ஏதாவது பேசுங்க…”

அறிவழகன் :“எதுவேனும்னாலும் பேசலாமா…” என்ற குரலில் ஒரு வெறுமை இருந்தது.

மணிமேகலை :“ம்ம்ம்…”

அறிவழகன் :“i love you னு சொன்னா… என்ன பண்ணுவீங்க… கன்னத்தில அடிச்சு jail க்கு தானே அனுப்புவீங்க… அதை பண்ணுங்க…” என்று அவன் பேசிக்கொண்டு இருக்கும் போதே…

மணிமேகலை :“i love you too…” என்றால்…

அறிவழகன் பேசுவதை நிறுத்தி அவளை பார்த்தான்…

மணிமேகலை மீண்டும் ஒரு சிரிப்போடு :“i love you னு சொல்லுறது அவ்வளவு பெரிய தப்பான வார்த்தை இல்லையே… யார் கிட்ட வேணும்னாலும் சொல்லலாம்… அம்மா… அப்பா… அக்கா… தம்பி… தங்கச்சி… அண்ணா… friend… இப்படி யார் கிட்ட வேணும்னாலும் சொல்லாம்… நாம பார்க்குற பார்வைல தான் இருக்கு சரியும் தப்பும்…”

அறிவழகன் மீண்டும் மௌனமானான்…

மணிமேகலை :“என்ன love failure ஹ…”

அறிவழகன் :“love ஹ…” என்று விரக்தியாக சிரித்தான்…

மணிமேகலை :“அப்புறம்…”

அறிவழகன் :“மேடம் pls… இந்த form ல கையெழுத்து மட்டும் போட்டு தாங்க… நான் எப்படியும் sucide தான் பண்ணிக்க போறேன்… எதுக்கு வீனா உங்க நேரத்தையும் waste பண்ணிட்டு இருக்கீங்க…”

மணிமேகலை :“oh… அப்புடியா… சரி ok… என் கூட வாங்க…” என்று எழுந்தாள்

அறிவழகன் :“எங்க…”

மணிமேகலை :“எப்புடியும் சாக போறீங்க… கொஞ்சம் என்கூட வாங்களேன்… என்ன ஆக போகுது…”

அறிவழகன் :“என்ன என் எண்ணத்தை மாற்றிடலாம் னு நினைக்குறிங்களா…”

மணிமேகலை :“கண்டிப்பா இல்லை… வாங்க உங்களுக்கு வேற choice இல்லை…” என்று வெளியே சென்றாள்…

அவன் வந்த அதே வாகனத்தில் ஏறி சென்றனர்…

எதுவும் பேசாமல் அனைவரும் வர… comstable மட்டும் ஒன்னும் புரியாமல் முழித்தார்…

Car சற்று தூரம் சென்ற கடற்கரையில் நின்றது…

மணிமேகலை :“ம்ம்ம்… வாங்க…” என்று கூப்பிட தயங்கிய படி இறங்கினான் அறிவழகன்…

Constable மற்றும் driver ஐ அங்கேயே நிற்கும் படி செய்கை செய்துவிட்டு சென்றாள்…

சிறிது தூரம் நடந்து மணலில் அமர்ந்தாள்…

மணிமேகலை :“ம்ம்ம்… உட்காருங்க…” என்று கடலை பார்த்தபடி சொன்னாள்…

அறிவழகன் ஒன்றும் புரியாமல் அமர்ந்தான்… எதிரில் இருந்த கடல் அலையின் சத்தம்… பக்கத்தில் ஒரு குழந்தை அழும் சத்தம்… சற்று தள்ளி இருந்த வயது முதிர்ந்த தம்பதியினர் சண்டை போடும் சத்தம்… சுண்டல் விற்கும் சிறுவனின் சத்தம் என அவன் காதில் பேரிரைச்சலை கொடுத்தது… காதுகளை மூடிக்கொண்டு கத்த வேணும் போல் இருந்தது…

மணிமேகலையின் அமைதி வேறு ஒரு பக்கம் அவனுக்கு அவஸ்தையை தந்தது… ஒரு கையெதுக்கு எவ்வளவு போராட்டம்… அதை பெற்று கொண்டு வாழ போவது என்றால் கூட பரவாயில்ல… சாக கூட இவ்வளவு போராட வேணுமா என்று சலித்து கொண்டான்…

அறிவழகன் பொறுமை இழந்து :“மேடம்… இங்க எதுக்கு கூட்டிட்டு வந்திங்க… சீக்கிரம் சொல்லுங்க எனக்கு நேரம் இல்லை…” என்றான் எரிச்சலாக

மணிமேகலை அவனின் பேச்சை கேட்டு சிரித்துவிட்டு :“சாக தானா போற… அதுக்கு எதுக்கு இவ்வளவு அவசரம்… மனசு மாறிடும் னு பயப்படுறியா…” என்றால்…

அறிவழகன் :“எனக்கு பரவாயில்ல… என்னால பாவம் அந்த ரெண்டு பேரும் இப்படி சம்மந்தமே இல்லாம நின்னுட்டு இருகாங்க…” என்று constable & driver ஐ காட்டினான்…

மணிமேகலை :“அது அவங்க வேலை நிக்கட்டும்…”

அறிவழகன் :“இப்ப உங்களுக்கு என்ன தான் வேணும்…”

மணிமேகலை :“நீ இன்னும் காரணத்தை சொல்லவே இல்லையே… அதை தெரிச்சிக்கணும் அது என்னோட வேலையாச்சே…”

அறிவழகன் :"என்ன சொல்ல சொல்லுறீங்க… என்னை இந்த சமூகம் வேண்டாத பொருளா பார்க்குதே அதை பற்றியா… தீண்ட தகதவன் மாதிரி தள்ளி வைக்குதே அதை பற்றியா… எனக்கு பத்து வயசு இருக்கும் போது என்கூட விளையாடுன பையனை கோவத்துல பிடிச்சு தள்ளிட்டேன்… அவன் சுவர்ல மோதி இறந்துட்டான்… எனக்கு தெரியாது அப்புடி தள்ளினா அவன் செத்து போவான் னு…

ஜெயிலில் போட்டுட்டாங்க… சிறுவர் சீர் திருத்த பள்ளி… அங்க தான் படிச்சேன்… தெரியாத வயசுல தெரியாம செஞ்ச தப்புக்கு இன்னைக்கு வரைக்கும் ஓடிட்டு இருக்கேன்… +2 ல 1130 மதிப்பெண்… என்ன பிரயோஜனம் மேல் படிப்பு படிக்க கேட்ட seat கிடைக்கல… ஏதோ கிடைச்சதை படிச்சு வெளியே வந்தா… வேலை கிடைக்கல…

எப்ப பாரு நான் படிச்ச சிறுவர் சீர் திருத்த பள்ளியை வச்சே என்னை கணக்கு போட்டா எப்புடி… சுற்றி முழுவதும் வெறுமை… போதும் 26 வயசு வரைக்கும் ஓடியது… இதுக்கு மேல முடியல… அதான்… நீங்க என்ன சொன்னாலும் கேக்க மாட்டேன்…" என்று படபடவென பொரிந்து தள்ளினான்…

மணிமேகலை :“எனக்கு புரியுது உங்க கஷ்டம்…”

அறிவழகன் :“உங்களுக்கு புரியாது என் நிலைமை… எல்லாம் கிடைச்சவங்களுக்கு இல்லாதவங்க நிலைமை நிச்சயம் புரியாது…”

மணிமேகலை :“எதை வச்சு எனக்கு எல்லாம் கிடைச்சிடுச்சு னு சொல்லுறீங்க… நான் போட்டு இருக்க இந்த புடவை வச்சா… இல்லை பார்க்குற வேலை வச்சா… இல்லை நான் சொன்னதும் மறு வரத்தை பேசாமல் வந்த constable அந்த அதிகாரத்தை வச்சா…”

அறிவழகன் :“எல்லாம் தான்…”

மணிமேகலை :“தப்பு… நம்ம பார்க்குறது வச்சு எதையும் முடிவு பண்ண கூடாது… நான் ஏன் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன் தெரியுமா… ஒரு 10 வருஷம் முன்னாடி… நான் இங்க தான் தற்கொலை பண்ணிக்க முயற்சி செய்தேன்…”

அறிவழகன் அவளை வியப்பாக பார்த்தான்…

மணிமேகலை :"ம்ம்ம்… என்னை 3 பேர் சேர்த்து கற்பழிச்சிட்டாங்க… அதை விட பெரிய கொடுமை எனக்கு நியாயம் வாங்கி தரேன் னு daily daily அதை சொல்லியே நிறைய பேர் பெயர் சம்மதிக்க பார்த்தாங்க… எங்க போனாலும் யாரை பார்த்தாலும் கேட்டு போனா பொண்ணு னு என்னை தான் சொன்னாங்க… முடியல… இங்க சாகலாம் னு வந்தேன்…

ஆனா காப்பாத்தி ஒரு ஹாஸ்பிடல் சேர்த்து கஷ்டப்பட்டு பிழைக்க வச்சுட்டாங்க… ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டாங்க னு தெரியல… அப்போ எனக்கு மருத்தவம் பார்த்த ஒரு dr… அவங்க தான் எனக்கு தைரியம் சொன்னாங்க…

யார் என்ன சொன்னாலும் காதை மூடாத… நீ காதை மூடிக்கிட்டா அதை பிடுங்கி உன்னை பற்றி குறை சொல்ல ஆளுங்க நிறைய பேர் இருகாங்க… அதுக்கு பதில் அப்புடி சொல்லுறவங்கள கொஞ்சம் நின்னு திரும்பி பாரு உன்னை நேருக்கு நேர் எதிர்த்து பேச யாருமே இருக்க மாட்டாங்க னு…

அவங்க சொன்னது உண்மை… அன்னைல இருந்து இப்ப வரை… என்னை பற்றி பேசுறவங்கல ஒரு பார்வை பார்த்தா போதும்… எல்லாமே மாறிடும்… எல்லாமே நாம எடுத்துக்குறதுல தான் இருக்கு…"

அறிவழகன் தன் வாழ்வில் நடந்ததை நினைத்து கொண்டான்

மணிமேகலை :"மத்தவங்களுக்கு நிறைய வேலை இருக்கு… நம்ம பற்றி கவலை பட அவங்களுக்கு நேரம் இல்லை… அவங்க பேசுறாங்க நமக்கு எதுவுமே கிடைக்காது னு பார்த்தீங்க ன எதுவுமே கிடைக்காது…

அவங்க பேசுன பேசிட்டு போகட்டும் நான் என் வேலைய பார்க்குறேன் னு ஒரு பிரச்சனையை பார்த்தீங்க ன எல்லாமே மாறும்…

எல்லாமே நாம பார்க்குற பார்வையில் தான் இருக்கு… இது எல்லாமே நம்மோட காட்சி பிழைத்தான்…

நான் பேசுனது சரி னு பட்டுச்சுனா… எழுந்து போய் உங்க வேலைய பாருங்க… இல்லை ன எதிர்க்கவே கடல் இருக்கு… உங்க உயிரை விட்டிடுங்க… all the best…" என்று எழுந்து சென்றாள்…

Costable :“மேடம்…”

மணிமேகலை :“அவர் இனி suicide பண்ண மாட்டாரு…” என்று அந்த form ல் sign போட்டு ஒரு ஆட்டோவில் ஏறி சென்றாள்…

அறிவழகன் மணிமேகலை சொன்னதை நினைத்து பார்த்தான்… தன்னை சுற்றி இருந்ததை இப்போ பார்த்தான்…

கடல் அலை இப்போது அவனுக்கு வாழ்த்து சொல்வது போல் இருந்ததை பார்த்தான்…

அருகில் அழுதுகொண்டு இருந்த குழந்தை அம்மாவிற்கு தெரியாமல் அப்பாவிடம் பொம்மை வாங்க செய்த குறும்பு தனத்தை பார்த்தான்…

வயது முதிர்ந்த காலத்திலும் சண்டை போட்ட படி அவள் கணவனுக்கு போர்வை போட்டு விட்டதையும்… மனைவிக்கு tea ஊற்றி கொடுப்பதிலும் இருந்த அழகான காதலை பார்த்தான்…

சுண்டல் விற்ற கலைத்து போய் இருந்தாலும் அவன் கையில் ஒரு புத்தகம் படித்து முடித்து ஏதாவது செய்ய வேண்டும் என்று இருந்த அந்த சிறுவனின் தன்னம்பிக்கையை பார்த்தான்…

பேரிரைச்சலாய் இருந்தவை இப்போது அவனுக்கு மெல்லிசையாய் தெரிந்தது ரசிக்க தான் தோண்றியது இப்போது

அறிவழகன் தனக்குள் சிரித்துக்கொண்டு :“உண்மை தான் வெறும் காட்சி பிழைக்காக உயிரை விடுவதா…” என்று நினைத்து எழுந்தவன் தனக்குள் இருந்த மாற்றத்தை உணர்த்தவனாய் நடந்தான்…


ஒரு வருடம் கழித்து…

அதே கட்டிடம்… அதே மேஜை… அதே நாற்காலி… ஆனால் வேறு வேறு மனிதர்கள் என்று தன் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தாள் மணிமேகலை…

“மேடம்… உங்களுக்கு courier…” என்று அவளின் உதவியாளர் கொண்டு வந்து கொடுக்க…

அதை பிரித்து பார்த்தாள் கல்யாண பத்திரிகை அறிவழகன் weds சுஜாதா…

அதை பார்த்து சிரித்தவளாய் கல்யாண தேடியினை தன் நாள் கட்டியில் குறித்துக்கொண்டு :“அடுத்து வர சொல்லுங்க…” என்று தன் வேலையில் மூழ்கி போனாள்…

முற்றும்