Community

சோப்பு பேசினால்

சிறுகதை - போட்டி

26-07-2020

சோப்பு பேசினால்

இயற்கை அழகு கொஞ்சும் தேனி மாவட்டத்தில் இயற்கை விவசாய குடும்பத்தில், ஒரே ஒரு முத்தாய் பிறந்த நம்ம கவினுக்கு இப்போது வயது 8 ஆகிறது. அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிற கவின் குடும்பத்திற்கே செல்லம். தாத்தா - பாட்டியின் அரவணைப்பு, தாய் - தந்தையரின் முறையான கவனிப்புடன் வளர்ந்து வருகிறான். அவனது சுட்டித்தனத்திற்கு குடும்பமே அடிமை. தாத்தா பாட்டிக்கு அவன் தான் பொழுதுபோக்கே. தினமும் பள்ளியில் 410 மணி எப்போ அடிக்கும், கவின் எப்போ வீட்டுக்கு வருவான் என்று விழிமேல் வழி வைத்து காத்திருப்பார்கள் தாத்தாவும், பாட்டியும். அவனுக்கு கதை சொல்வது, ஆளுமையை வளர்ப்பது, நல்வழிபடுத்துவது போன்ற பணிகள் வீட்டிலிருக்கும் தாய் மீனாட்சிக்கும், தாத்தா - பாட்டிக்கும் கடமையான ஒன்றாகும் வனத்துறையில் வேலைப் பார்க்கும் அவனது அப்பா ரகு, கவினுக்கு ஒரு நண்பனாகவும், சிறந்த வழிகாட்டியாகவும், அவனை விடுமுறையில் வெளியில் அழைத்துக்கொண்டு உலகம் சுற்றி வரும் வாலிபனாகிறார். சனி, ஞாயிற்று கிழமைகளில் ரகுவுக்கு வேலை இல்லாதபோது, கவின் தேனியில் ஒரு குட்டி தேனி போலவே பறந்துகொண்டிருப்பான் ராஜா தேனியான, அவனது அப்பாவுடன் ஒவ்வொரு வாரமும் புதுப்புது இடங்கள், புதுப்புது அனுபவங்கள் என வெளியுலக நாயகனாக ரகு கவினுக்கு தெரிவான். அப்பாவுக்கு எப்ப மா வீவு வரும், இந்த வாரம் அப்பா என்ன எங்க மா கூட்டிட்டுபோவாரு என, அவன் வாரத்தில் 5 நாட்களும் கேட்டுக்கொண்டே இருப்பார். கவினுக்கு புதிய விஷயங்களை பற்றி தெரிந்துகொள்வதில் அவனது அப்பா ரகுவிடமிருந்து தொற்றிக்கொண்டது ஆர்வம். அதற்கேற்ப ரகுவும், கவினின் எப்பேற்பட்ட கேள்வி கனைகளுக்கும் திணி போட்டுக் கொண்டிருப்பார். -2-

இவ்வாறாக கவினின் வழக்கமான ஒரு நாள் காலை 6.30 மணி வானொலியில் பக்தி பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்க, அம்மா மீனாட்சி சூடாக இட்லியை சட்னியுடன் ரகுவுக்கு பரிமாறிக் கொண்டிருந்தாள். எனக்கு போதும் மதியம் என்ன சாப்பாடு வச்சிருக்கேன் என கேட்டபடியே, அவன் இன்னும் எந்திரிக்கலயா? என்றார் ரகு, ரகுவின் குரல் கேட்ட பாட்டி கவிதை கன்னு எந்திரிப்பா மணி ஆயிடுச்சு, பள்ளிகூடம் போகணும் டா தங்கம், என கொஞ்சல் மொழியில் கவினை எழுப்பு காலை சிற்றுண்டியை அவசரமாக அவசர சாப்பிட்டுவிட்டு, மதிய சாப்பாட்டுக் கூடையுடன் வீட்டை விட்டு புறப்பட்ட புல்லட்டின் டப்ப, டப்ப சவுண்ட்டு கேட்டு, அப்பா கிளம்பிட்டாரா என்றவாரே எழுந்து பாட்டியை பார்த்தான் கவின். பாட்டியோ கவினை அணைத்து, போய் பல் துலக்கிட்டு வாப்பா, என்றாள். கவின் பல் துலக்கிட்டு வந்து காலை நேர தேநீர் அருந்தியபடியே, சிறிது நேரம் சமையற்கட்டில் நின்று அம்மாவுடன் பள்ளிக்கூட கதைகளை பேசிக்கொண்டிருக்க, அம்மா கவினிடம், கவின் மணியாகிடுச்சி மீத கதையை சாயங்காலம் வந்து நம்ம பேசிக்கலாம் குளிக்க போ, என சொல்ல குளிக்க சென்றான் கவின்

அம்மாவின் ஆர்டருக்கு ஏற்ப ஓடிச்சென்று கதவை சாத்தியபடி குளியலறையில் டேப் வாட்டரை திறந்துவிட்டபடி நின்ற கவினுக்கு, ஒரு புதுவித குரலில் யாரோ கூப்பிடுவதுபோல இருந்தது. யாரென்று அக்கம் பக்கம் சுற்றிப்பார்த்த கவின், குளியல் சோப்பு டப்பாவின் அருகிலிருந்து சத்தம் வருவதை கண்டு ஆச்சரியமடைந்தான். ஆமாம் சோப்பு தான் பேசுகிறது. கவின் சோப்பை பார்த்து, என்ன சோப் நீயா பேசுகிறாய்? என்றான். ஆம் நான் தான், என்னிடம் என்ன வேணும் உனக்கு, என கேட்டது சோப், கவின் ஆச்சரியப்படுவதை நிறுத்திவிட்டு, ஆமாம் நீ எங்கு, எதிலிருந்து வருகிறாய். உன்னை எப்படி தயாரிப்பார்கள், உன்னை எதற்காக நாங்கள் பயன்படுத்துக்கிறோம் என்று

-3- -3-

கொஞ்சம் சொல்லேன் என்றான். சோப்பு தன் கதையை கூறத் தொடங்கியது

நான் பொதுவாக சில மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறேன். அதில் தாவர (அல்லது விலங்குகளின் கொழுப்பு எண்ணெய், தூய்மையான நீர், காணி டிக் சோடா எனப்படும் சோடியம் ஹைட்ராக்சைடு (அல்லது) பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு போன்ற வேதிப் பொருட்கள் மற்றும் சில வாசனை திரவியங்கள் சேர்த்து, வடிவ பயன்பாட்டிற்காக சில அச்சுகளை உபயோகித்து என்னை தயாரிக்கிறார்கள் நான் தயாரிக்கப்படும் போது என்னுடைய மூலப்பொருட்களிலிருந்து வெப்பம் வெளிப்படும். என்னை தயாரித்த பின் உடனே பயன்படுத்துவது சில உடல் பாதிப்புகளை உண்டாக்கும், என்றது சோப், பதிலுக்கு கவின் அப்ப எப்போதான் உன்னை நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்றான் நான், என்னை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட சில வேதிப் பொருட்களின் வீரியம் குறையும் வரை மக்கள் பயன்பாட்டுக்கு வர மாட்டேன். அதன் பின் பயன்படுத்துவதன் மூலமே நான் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், உங்களை தூய்மைபடுத்த பயன்படுத்தப்படுகிறேன் என்றது சோப்பு, சரி கவின் நீ என்னை உபயோகித்து, பள்ளிக்கு கிளம்ப சீக்கிரம் குளி என்றது சோப்பு. சரியென விறுவிறுவென்று குளித்துவிட்டு ஓடிச்சென்று பள்ளிக்கூட யூனிஃபார்மை அணிந்துகொண்டு, அவனது தாத்தாவுடன் சைக்கிளில் கதை கேட்டுக்கொண்டே பள்ளிக்கு சென்றான். கவினுக்கு எப்படி சோப்பு பேசியது என்ற ஆச்சரியத்தைவிட ஒரு சோப்பிற்குள் இத்தனை உருவாக்கம் இருக்கிறதே என நினைத்துக்கொண்டே பள்ளிக்கு சென்று, சோப்பு பேசிய கதையை அவன் நண்பன் வினீத்திடம் கூறிக் கொண்டிருந்தான்.

படைப்பு

V. சக்திவேல், B.SC., B.L., வழக்கறிஞர்