என் காதல் தேவி!
அல்லி முகத்தைக்கண்டு அகிலம் மறந்தேன்!
மல்லி வாசம் முகர்ந்து உன். கூந்தல் மடியில் தவழ்ந்தேன்!
கண்கள் மயங்கியது உன் காந்த பார்வையில்!
உலகம் மறந்தேன் உன் விழிபார்வையில்!
இதயம் சரிந்தது உன் இதழோர புன்னகையில்!
சிதறிகிடந்த இதயத்தை சிற்பமாய் செதுக்க வந்த சிற்பச் சிலை சிங்காரியே!சித்திரமும் உன்னை பார்த்து சிலிர்த்து போகும்!
சிறு புன்னகை பெறாமல் ஏங்குகிறேன் சிலம்பின் நாயகியே!
வட்ட முகம் காண வானளவு உயர்ந்து வானூர்தியாய் உன்னை தேடினேன்!
பால் அன்னம் முகம் கண்டு பாக்கியம் பெற்றேன் நான்!
பசி தாகம் மறந்தேன் பவளக்கொடி பதுமையே!
முகில் கொண்ட வெண்மை தேவதையே!
காதல் முத்து மழையை பொழுந்திட வாராயோ தேவி!
மின்னலை என்னுள் வீசி சென்றவளே!
மின்சாரமாய் நெஞ்சில் பாய்ந்தவளே!
காதல் தீயை உதிரத்தில் ஊற்றினாய்! செவ்விதழ் சிரிப்பால் சிறுகவிப்பாடி
சென்றாய்!
என் இதய வீணையை மீட்ட நீ வருவாய் என காத்திருப்பேன் உன் காலடி மண்ணாக! ! !