பவித்ராவிற்கு படபடப்பு அடங்கவில்லை. தவறு
செய்து விட்டோமோ. எல்லோரும் அறிவுரை
கூறியதை ஏற்று இருக்க கூடாது. இப்போது தனியாக நாம் தான் எதிர் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் போதே பயமாக இருந்தது.
இன்று முதலிரவு சொல்லப் போனால் இருவருக்குமே இரண்டாம் இரவு.
முதல் துணையை இழந்ததால் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இது. இருவருக்குமே ஒரு குழந்தை உள்ளது. எதிர் காலம் கருதியே பெரியவர்களால் முடிவு செய்யப்பட்ட திருமணம்
என்ன சொல்வான் இந்த கணவன். முதல் திருமணம் பற்றி கேட்பானோ? என் மகனை நல்லபடியாக நடத்துவானோ? முதல் மனைவியை புகழ்வானோ என பல கேள்விகள்
கண்டதையும் போட்டு மனதை குழப்பாதே என்று கூறி அழைத்து சென்றாள் அத்தை. உள்ளே நுழையும் போதே நடுங்கியது
பழைய நினவு வாட்டியது. என்ன ஒரு கொடுமையான அனுபவம் என்று மனம் கலங்கியது.
அமைதியாக நின்ற ராம்குமார் ,“பயப்படாதே இப்படி உட்கார்”, என்று கட்டிலின் ஒரத்தை காட்டினான். “முதல்ல நான் உன் கிட்ட பேசனும். பெரியவங்க சொன்னாங்க னு ஒத்துகிட்டேன். ஆனால் இங்கு வரும் போது அது தப்போனு பயம் வருது. ஆனால் இருவரும் இந்த பந்தத்தில் நுழைந்து விட்டோம். இனி நடப்பதை பார்ப்போம்” என்று கூறியதைக் கேட்ட பவித்ராவிற்கே நம்பிக்கை வந்தது
"எனது முந்தைய திருமண வாழ்வைப் பற்றி நான் பேச மாட்டேன். நீயும் பேச கூடாது. நம் குழந்தைகளுக்கு நீயும் நானும் மட்டுமே தாய் தந்தை ",ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்தாள் பவித்ரா எங்கே என் முதல் மனைவியை தெய்வமாக வணங்கு என்று சொல்வான். நாம் நம் முன்னாள் கணவனை வணங்கு என்று சொன்னால் என்ன செய்வான்? என்று நினைத்தவளுக்கு எல்லாமே புதிதாக இருந்தது.
“இந்த வாழ்க்கை பழக சில நாட்கள் பிடிக்கும். அது வரை மெதுவாக மாறட்டும். இது நமக்குள்ளே இருக்கட்டும்.” என்று கூற கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய தலையாட்டினாள் பவித்ரா.
தன் எதிர் காலம் ஒளிமயமாக தோன்றியது.