சிக்கலான சூழலொன்றின்
மனக்கசப்பில்
என் இதயத்தை
கண்ணாடியென
உடைத்தெறிகிறாய்.
நொறுங்கலின் வலி
மறைத்து சட்டென
உன்விழிக்குள்
தேடிப் பார்க்கிறேன்
தவறிழைத்துவிட்டதின்
பரிதவிப்போ
அல்லது
சிறு கலக்கமோ
அங்கு தென்படவேயில்லை.
மாறாய் உடைந்த
சில்லுகள்
ஒவ்வொன்றிலும் உந்தன்
பிம்பம் ரசித்து கர்வமுறுகிறாய்.
இக்கணம்
உன் முகம்தனில்
எழுந்த குரூரத்தின்
வளர்ச்சி கண்டு
அதிரச்சிக் குமிழிகள்
பெருத்தெழுந்து
வெடிக்கின்றன
எனக்குள்.
ஆம்
முந்தைய நிகழ்வில்
இதே குரூரம் கொஞ்சம்
குள்ளமாய்த்தான்
இருந்தது.