Community

வலை ஒன்னு விரிச்சேன்

ராஜு,18 வயது ராமநாதபுரம் பனைக்குளத்தைச் சேர்ந்த குறுந்தாடிகளுடைய ஒல்லியான தோற்றம் கொண்ட ஐந்தரை அடி உயரமுள்ள ஆண். இவனது சிறுவயதிலேயே அதாவது விவரம் அறியா வயதிலேயே தாய் மற்றும் தந்தையை இழந்தவன். இவனது தந்தை ஒரு மீன் பிடிதொழிலாளி,இவனது தாய் இவனைப்பெற்றெடுத்த ஒரு மாதத்திலேயே காசநோயால் உயிரிழந்தாள்,அவனது தந்தையும் அடுத்த ஒரு மாதத்தில் இலங்கை கடலோர காவல் படை யினரால் எல்லை மீறி மீன் பிடித்ததால் சுட்டுக்கொல்லப்பட்டார்.தாய், தந்தை இல்லாத இவன் பாட்டி மற்றும் தாத்தா அரவணைப்பில் வளர்கிறான். குடும்ப சூழல் மற்றும் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை ஆறாம் வகுப்பிலேயே நிறுத்தினான்.அவனது தாத்தாவோடு துறைமுகத்தில் வேலை செய்யத்தொடங்கினான். இவனுடைய 12 வயதில் தாத்தா மற்றும் பாட்டி உடல்நலக்குறைவால் படுத்தபடுக்கையாய் இருக்கின்றனர்.12 வயதிலேயே தாத்தா,பாட்டி நலனுக்காகவும் தன்னுடைய நலனுக்காகவும் துறைமுகத்தில் உழைக்கத்தொடங்கினான்.இவனுடைய 18 வயதில், பாட்டி உடல்நலக்குறைவால் உயிரிழக்கிறாள்,தாத்தாவும் ஆறு மாதம் உடல்நலக்குறைவால் போராடி உயிரிழந்தார்.சோகத்தை கடந்து தன்னுடைய வாழ்வாதாரத்தை தக்கவைத்துக்கொள்ள மீண்டும் துறைமுகத்திற்கு வேலைக்கு செல்கிறான்.அன்று மாலை வீடு திரும்புகையில் 20 வயது உள்ள இளைஞன்,தனிஆளாக பைபர் படகில் இருந்து மீன் பெட்டிகளை எடுத்து வைக்க சிரமப்படுவதை பார்க்கிறான்,அவனுக்கு உதவ செல்கிறான்,உதவுகிறான்,இருவரும் அறிமுகம் செய்துக்கொள்கின்றனர்,அந்த 20 வயது இளைஞனின் பெயர் ஷேக் .இவனுக்கும் உறவு என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை,தாய் தந்தையை இழந்தவன்.இவனுக்காக இவன் அப்பா சேர்த்து வைத்த சொத்து இந்த பைபர் படகும்,மீன் பிடி வளையும் தான்.இவர்களின் சந்திப்பு தொடர்கிறது மனம் விட்டு தங்கள் கஷ்டங்களையும்,குடும்பத்தைப்பற்றியும்,இதுவரை இருந்த இவர்களின் வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள், நண்பர்கள் ஆகிறார்கள்.ஒரு சந்திப்பில் ராஜு அவனுடைய நண்பனான ஷேக்கிடம் தயங்கிக்கொண்டே

ஏன்டா மாப்ள,நீயும் ஒன்டிய கடலுக்குப்போய் மீன் பிடிச்சி அத விக்ரதுக்கு கஷ்டப்பட்டுக்கிருக்க,நானும் எவனோ ஒருத்தன்கிட்ட நாயா பேயா ஓழைசிக்கிருக்கேன்,நாம ரெண்டுவேரும் தனித்தனியா கஷ்டப்படுறதுக்கு,உன்கிட்ட படகும் வளையும் இருக்கு ஒன்னா உழைச்சா வர லாபத்துல படகுக்கும் வளைக்கும் செலவு பண்ணது போக சேத்துவெட்ச்சாலே நல்லா சந்தோசமா வாழலாம்ல

என்று கேட்க்கிறான்.இவன் பேசுவதை உற்று கூர்மையாகவும் ஆச்சிரியத்துடனும் பார்த்த ஷேக் கட்டித்தழுவி சொல்லாமல் சொல்கிறான் சம்மதத்தை.இருவரும் ஒன்றாக மீன் பிடி தொழிலை செய்து வருகின்றனர்.

ஒரு நாள் கடலுக்கு சென்று மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்புகின்றனர்.கரைக்கு நெருங்குவதற்கு சற்று முன்பே அவர்கள் வந்த படகிலுள்ள என்ஜின் கோளாறால் அங்கேயே நின்றுவிடுகிறது, பின்னர், மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த மற்ற மீனவர்கள் உதவியோடு கரைக்கு வந்தனர் மற்றும் பிடித்துவந்த மீன்களை வியாபாரத்திற்கு அனுப்பிவிட்டு, என்ஜின்னை சரி செய்வது பற்றி பேசிவிட்டு வீடுதிரும்புகின்றனர்.அன்றிரவு ராஜுவின் பக்கத்து வீட்டு லதா( 24 ) அக்கா இவனிடம் வந்து

தம்பி,திருநெல்வேலில இருக்குற நெல்லையப்பர் சாமி கோயில்-ல திருவிழா நாங்க போலாம்னு இருக்கோம் வண்டி புடிச்சிருக்கோம் நீயும் வரியா

என்று சிறுவயதில் இருந்தே அவர்கள் வீட்டுப்பிள்ளையாக இவனுடன் பழகிய அக்கா அழைக்க,இவன்

என்ஜின் கோளாறு நால கடலுக்கு போக முடியாது,அக்கா கூப்புடுது , சந்தோசமா போயிட்டு வந்துட்டா என்ன

என்று யோசிக்கிறான்,உடனே வாரேன் என்று அக்காவிடம் கூறுகிறான்.அன்றிரவே தன் நண்பன் ஷேக் வீட்டிற்கு சென்று அவனிடம்

மாப்ள,என்ஜின் வேலைய நீயே போய் பாக்குறியா,நாளைக்கு நெல்லையப்பர் கோயிலுக்கு வரசொல்லி பக்கத்து வீட்டு அக்கா கட்டாயப்படுத்துராங்க நா போயிட்டுவரவா

என்கிறான்.அதற்க்கு ஷேக்கும் சரி மாப்ள போய்ட்டு வா நா பாத்துக்குறேன் என்கிறான்.

மறுநாள் காலை ராமநாதபுரம் பனைக்குளத்தில் இருந்து ராஜு மற்றும் அவன் பக்கத்து வீட்டு அக்கா குடும்பத்துடன் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலை நோக்கி பயணிக்க தொடங்கினர்.அதேசமயம் அவனது நண்பன் ஷேக்கும் என்ஜின் பழுதுபார்க்க ராமநாதபுரம் டவுனை நோக்கி மீன் ஏற்றி செல்லும் லாரியில் என்ஜின்னை ஏற்றிக்கொண்டு பயணத்தை தொடங்கினான்.

மூன்று மணிநேர பயணத்திற்கு பிறகு கோவிலுக்கு சென்றடைந்தனர் ராஜுவும் அவனுடன் சென்றவர்களும்,நெல்லையப்பரை தரிசிக்க வரிசையாக கூட்டம் திரண்டிருக்கிறது இவர்களும் வரிசையில் நிற்கின்றனர்.மறுப்பக்கம்,ராஜுவின் நண்பன் ஷேக் என்ஜின் பழுது பார்க்கும் கடையை அடைக்கிறான்.பழுதுபார்க்கும் வேலையையும் தொடங்குகிறான்.

ராஜு வரிசையில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நெல்லையப்பரை தரிசிக்க நிற்கின்றான் அப்போது வெள்ளை உடையணிந்து தங்கச்சங்கிலியனிந்த ஒரு கூட்டம் நெல்லையப்பரை வரிசையில் ஏதும் நிற்காமல் நேரடியாக சென்று நின்று நிதானமாக தரிசித்து செல்கிறது அதைப்பார்த்து இவனுக்கு கோபம் முற்றுகிறது,கோபத்தோடு அவன் பின் இருக்கும் ஒரு 50 வயது கொண்டவரிடம் கேட்கிறான் என்னைய வந்தாங்கிய,அவிங்கவாட்டு கும்டாங்க்ய போராங்ய,வரிசைல நிக்குற நாம என்ன சொம்பையா என்கிறான்.அதற்க்கு அந்த பெரியவர் சாமிக்கு மால போட்ட காலம்லா போச்சு,காசு கொடுத்தா சாமிக்கிட்ட இருக்குற மால உன்கிட்ட வரும் என்றார்.இவன் அந்த பெரியவர் சொன்னதைக்கேட்டு சிரிக்கிறான் மற்றும் சிந்திக்கவும் செய்கிறான்.

நெல்லையில் இருந்து பனைக்குளம் வரும் வரை இந்த சம்பத்தை பற்றி சிந்தித்துக்கொண்டே வருகிறான்.

ஷேக், பழுதுப்பார்த்து சரியாக வேலை செய்கிறதா என்று சரிப்பார்த்துக்கொண்டிருந்தபோது, என்ஜின் கோளாறால் கடலின் நின்றபோது உதவியவர்களில் ஒருவர் இவனிடம் வந்து உன்ன பணக்காரனா பாக்கணும்னு ஆசையா இருக்குயா என்கிறார்.அவர்தான்,ஆப்கானிஸ்தானில் இருந்து ராமநாதபுரத்திற்கு வரும் போதை பொருளை இலங்கைக்கு மாற்றி அனுப்புபவர்.வெளியில் மீன் பிடி தொழிலாளியாவும் உள்ளே போதைப்பொருள் கடத்துபவராகவும் செயல்ப்பட்டுவருகிறார்.

இவன் ஒன்றும் புரியாமல் முழிக்கிறான்.

நீ கடலுக்கு மீன் பிடிக்க போறவழியில நா கொடுக்குரப்பொருல கைமாதுனா போதும்,நீ ஒருமாசம் கடலுக்குப் போய் சம்பாரிக்குரத ஒருதடவைல வங்கிக்கோ என்கிறார் வந்தவர்.

இவன் அதற்க்கு அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சார் என்று கூறி என்ஜின்னை பனைக்குளம் செல்லும் லாரியில் ஏற்றிக்கொண்டு அவன் ஊரை நோக்கி செல்கிறான். வழி முழுவதும் அவர் வந்து கூறியதையே நினைத்துக்கொண்டு வருகிறான்.

ராஜுவும் ஷேக்கும் ஊர் வந்தடைகின்றனர்.அன்றிரவே இருவரும் சேர்ந்து பழுது சரிப்பார்க்கப்பட்ட என்ஜின்னை படகில் பொருத்திக்கொண்டிருந்தனர்.அப்போது,ராஜு கோவிலில் நடந்த சம்பவத்தை ஷேக்கிடம் விளகுகிறான்.மேலும் ராஜு ஷேக்கிடம்

நாம அதுமாரி சாமிகிட்ட இருந்து மால வாங்குறதுலா நடக்காத காரியம்ல

என்கிறான்.அதற்க்கு ஷேக்,

ஏன் நடக்காது,நாம இப்படியே சாகுரதுதான் முடிவா

என்று கூறி என்ஜின் பழுதுபார்க்க சென்றபோது அவனுக்கு அங்கு நடந்த சம்பவத்தை விவரிக்கிறான்.

மறுநாள் கலையில் இருவரும் கடலுக்கு செல்லாமல் ஷேக்கிடம் வந்து பேசிய அந்த நபரை தேடுகின்றனர்,அங்கே இங்கே கேட்டு அலைந்து ஒரு வழியாக கண்டுபிடித்துவிடுகின்றனர்.அவரது வீட்டில் சென்று அவரிடம் ஷேக் ராஜூவை அறிமுகப்படுத்துகிறான்.மேலும் இவர்கள் அவர் கூறிய அந்த மாற்றும் வேலையை என்னவென்றே தெரியாமல் செய்வதாக ஒப்புக்கொண்டனர்.பின்னர் அவர் இருவரிடமும் நாளைக்கு வாங்க வேல சொல்றேன் என்று கூறிவிட்டு சென்றார். அந்த வீட்டில் இருந்த மற்றொருவர் இவர்களிடம் வந்து நீங்க என்ன வேல செய்யப்போறிங்க தெரியுமா என்கிறார்.இவர்கள் ஒன்றும் தெரியாமல் முழிக்கிறார்கள்,முழித்துக்கொண்டிருக்கும் அவர்களை அழைத்துச் சென்று அந்த வீட்டிற்கு பின் இருக்கும் ஒரு குடோன்னை திறந்து காட்டுகிறார் மூட்டைகலாய் அடுக்கப்பட்டிருக்கிறது இது என்ன தெரியுமா என்று கேட்கிறார்,இவர்கள் மீண்டும் முழிக்கிறார்கள்.பின்னர் விவரிக்கிறார் இது எல்லாம் ஆப்கானிஸ்தான்-ல இருந்து வர போத பொருள், இத இலங்கைல இருந்து வர ஆளுங்களுக்கு கை மாதுரதுதான் உங்க வேல இத மீன் பிடிசிட்டுவறது மாரி செய்யணும் என்றார். இவர்கள் இருவரும் மீண்டும் எதைப்பற்றியும் யோசிக்காமல் இதனால் வரும் விளைவை சிறிதும் சிந்திக்காமல் செய்றோம் சார் என்றனர்.

அடுத்தநாள் காலையில் இவர்களிடம் போதைப்பொருள் வந்து சேர்ந்தது,அதை எடுத்துக்கொண்டு மீன் பிடிப்பது போல் கடலுக்கு செல்கின்றனர்,பொருளை இலங்கையிலிருந்து மீன் பிடிப்பதுபோல் வரும் மீனவர்களிடம் மாற்றிவிட்டு மீனையும் பிடித்துக்கொண்டு சந்தேகம் வராதது போல் கரைக்கு திரும்பினர்.அதற்க்கான பேசிய சன்மானம் பெறாவிட்டாலும் வியக்கும் அளவிற்கு ஒரு சன்மானத்தைப் பெற்றனர்.இது அவர்கள் மீன் பிடிக்க செல்லும் எல்லாம் நாளும் தொடர்கிறது,சேமிப்பும் பெருகுகிறது.

ராமநாதபுரம் காவல் துறைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக ஒரு தகவல் கிடைக்கிறது.அதன் பெயரில் விசாரணை நடத்துகின்றனர்,விசாரணையில் தெரியவருகிறது போதைப்பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டு மாற்றப்படுகிறது என்று.மேலும் விசாரணை நடத்துகிறது ராமநாதபுரம் காவல் துறை.அந்த விசாரணையில் காவல் துறைக்கு போதைப்பொருள் கடத்தும் கும்பலின் தலைவனில் இருந்து கடைசி ஆள் ராஜு மற்றும் ஷேக் வரை தெரிகிறது.அதன் பின்னர்,ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், போதைப்பொருள் கடத்தும் கும்பலை பிடிப்பது தொடர்பாக ஒரு சந்திப்பு கூட்டம் கூட்டுகிறார்.அதில் காவல் கண்காணிப்பாளர் அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட துணை ஆய்வாளரை பார்த்து கடசியா ப்ரோமோஷன் எப்போ சார் கெடச்சது என்று கேட்டார்.அதற்க்கு அவர் 6 வருசத்துக்கு முன்னாடி நடந்த ஒரு ஆபரேஷன் சக்சஸ்புள்அஹ முடிஞ்சதால சப்-இன்ஸ்பெக்டர் ப்ரோமோஷன் கொடுத்தாங்க ஐயா என்றார்.மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சபையைப்பார்த்து எனக்கு இன்னும் 4 வருசத்துல ரீடைர்மென்ட்,நா ப்ரோமொஷனோட வெளிய போகணும்னு பாக்றேன்யா என்று கூறி,கூட்டத்தில் இருந்த ஒரு இன்ஸ்பெக்டரைப் பார்த்து என்ன பண்ணா ப்ரோமோஷன் கிடைக்கும் என்றார்.அதற்கு அந்த இன்ஸ்பெக்டர் வெப்பன்ஸ் யூஸ் பண்ணி ஆபரேஷன் சக்செஸ் பண்ணா கிடைக்கும் ஐயா என்றார். உடனே கண்காணிப்பாளர் நானும் அததான் யோசிச்சேன்,அக்குயுஸ்ட் யார்க்கிட்டயும் வெப்பன் கிடையாது நாம பயர் பண்ணிட்டு பாறேன்சிக்கு தெரியாம கவர் பண்ணிட்டா பிரச்சின இல்ல,நாளைக்கு டீம் சொல்றேன் ஆபரேஷன் ஸ்டார்ட் பண்ணிடுவோம் என்று கூறி கூட்டம் கலைந்து சென்றனர்.

அந்த போதைமருந்து கூட்டத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு காவலர் இந்த கூட்டத்தில் இருந்தவர் அவர்களிடம் இதைப்பற்றியும், துபக்கிச்சூடு அவர்கள் மீது நடத்தப்போவதையும் தெரிவித்தார்.இந்த தகவளுக்குப்பின்னர், ராஜுவும் ஷேக்கும் இவர்களது நண்பர் ஒருவரிடம் மட்டும் காக்கி வந்து எங்களப்பத்தி எதாவது கேட்டா தெரியாதுன்னு சொல்லிடு,நாங்க வல்லநாடு போறோம்,எதாவது சேதி சொல்லி அனுப்பணும்னா வல்லனாட்ல இருக்க உனக்கு தெரிஞ்சவிங்க எவன்கிட்டயாது சொல்லியனுப்பு என்று கூறிவிட்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வல்லநாடு என்னும் ஊரில் தலைமறைவாகின்றனர். இருநாட்களுக்குப் பிறகு, அவர்களது நண்பர் வல்லனாட்டிலுள்ள அவரது நண்பர் மூலமாக ஒரு சேதி சொல்லியனுப்புகிறான் அதில் காவல் துறை இவர்களைப்பற்றி விசாரித்ததாகவும் இவன் தெரியவில்லை என்று கூறியதாகவும்,இவர்களது பைபர் படகையும் வலையையும் கைப்பற்றியதாகவும், மேலும் ராமநாதபுரத்தில் 40 மேர்ப்பட்டோர் மீது துப்பாக்கிசூடு நடத்தியதாகவும் சொல்லி அனுப்பியிருந்தான். பிறகு,அவர்கள் இருவரும் திருநெல்வேலியில் இருப்பது பாதுகாப்பல்ல என்று கருதி தூதுகுடியிலுள்ள ஒரு படகு வியாபாரியிடம் பைபர் படகு ஒன்று இவர்கள் போதைமருந்து கைமாற்றிய பணத்தில் வாங்கிக்கொண்டும் ஒரு வாரத்திற்கு தேவையான உணவுப்பொருட்களை வாங்கிக்கொண்டு இலங்கைக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையிலுள்ள ஒரு தீவிற்கு சென்றுவிடுகின்றனர்.அதேசமயம் ராமநாதபுரம் காவல்துறை இவர்கள் அடுத்தமாவட்டதிற்க்கு சென்றிருக்கலாம் என்று ராமனதபுரத்தை சுற்றியுள்ள அனைத்து மாவட்ட காவல் அலுவலத்திற்கும் இவர்களைப்பற்றிய விவரங்களை அனுப்புகிறது.

ராமநாதபுரம் காவல்துறையின் இந்த தகவலுக்கு ஐந்து மணிநேரத்திற்கு பின்னர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு காவல் அலுவகத்திலிருந்து ராமநாதபுரம் காவல் துறையினருக்கு ஒரு தகவல் வருகிறது அதில் சந்தேகப்படும் வகையில் இருவர் பைபர் படகு வாங்கியது குறிப்பிடப்பட்டிருந்தது மேலும் அவர்கள் ரமேஸ்வரதிர்க்கும் இலங்கைக்கும் இடையில் இருக்கும் எதோ ஒரு தீவில் இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த தகவலுக்கு பின்னர் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர், காவலர்களை ஐந்து அணிகளாக பிரித்து தேட உத்தரவிட்டார். மேலும், காவல் கண்காணிப்பாளர் ஒவ்வொரு அணியின் தலைமை காவலர்களிடம் பார்த்தால் சுட்டுவிட உத்தரவும் விட்டுருந்தார். ஒவ்வொரு அணியும்,மீன்பிடிக்க செல்வது போல் சென்று ஒவ்வொரு தீவையும் தேட தொடங்கியது.

ஒரு அணி இவர்கள் இருக்கும் சிறு தீவை நோக்கி வருகிறது.இவர்கள் படகை பின்பக்க கரையில் நிறுத்திவிட்டு முன் பக்கம் உறங்கிக்கொண்டிருக்கின்றனர்.ராஜு படகு வரும் சத்தத்தை உணர்ந்து எழுகிறான்,காவலர்களைப் பார்த்தவுடன் ஷேக்கை எழுப்பிக்கொண்டு ஒடமுயற்சிக்கும்போது காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இவனது நண்பன் ஷேக்கின் கால்களில் முதலில், பின் முதுகிலும் குண்டுபாய்ந்து கீழே விழுகிறான்.ராஜு காடுவழியாக ஓடி பின்புறம் இருக்கும் அவனது படகில் ஏறுகிறான்,காவலர்களும் பின்தொரத்தி வருகின்றனர் ஆனால் அவன் அதற்குள் படகை எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறான்.

அங்கிருந்து தப்பித்த ராஜு தூத்துக்குடி அடுத்து கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள ஒரு கடற்கரையில் படகை நிறுத்திவிட்டு நண்பனை இழந்ததை நினைத்து அழுதுக்கொண்டே கடற்கரையில் என்ன செய்வது என்று புரியாமல் அமர்ந்திருக்கிறான்.அப்போது அவனுக்கு ஒரு யோசனை,இங்கிருந்து போதைப்பொருள் இலங்கைக்கு சென்று இலங்கையில் இருந்தே மற்ற நாடுகளுக்கு செல்கிறது அப்போ இலங்கையிலும் நம் போன்ற ஒரு கூட்டம் இருக்கும் அவர்களிடம் சென்றால் நான் உயிர் தப்பிக்கலாம், இலங்கைக்கு வியாபாரப் பொருள் ஏற்றிச் செல்லும் கப்பலில் சென்றுவிடலாம் என்று யோசிக்கிறான்.

அந்த கடற்கரையில் இருந்து படகை எடுத்துக்கொண்டு புறப்படுகிறான். தூத்துக்குடி கப்பல் துறைமுகத்தை நோக்கி செல்கிறான்.அவன் சென்று கொண்டிருக்கும் போதே தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் காவல் துறையினரால் சுற்றிவளைக்கப்படுகிறான். ராஜு பின் திரும்பி நீரில் குதித்து தப்பிக்க முயலும்போது அவன் பின் இருந்த காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் இவனது நெற்றியில் குண்டு பாய்ந்தது,அவனது படகிலே விழுந்தான்.அவன் உயிர் பிரியவில்லை அவன் மேல் பறக்கும் பரவைகளைப்பார்க்கிறான்.அவன் சாவை சந்தித்துக்கொண்டிருக்கும் அந்த தருணத்தில் பறவைகளிடம் இருந்து பாடம் கற்றுக்கொண்டே விடைப்பெறுகிறான்.

பறவைகள் தன்னால் என்ன முடிகிறதோ அதையே செய்கிறது,என்ன இருக்கிறதோ அதை வைத்து சந்தோசமாக இருக்கிறது.ஆனால்,மனிதர்களாகிய நாம்,தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொள்ளாமல், என்ன முடிகிறதோ அதை செய்யாமல் பேராசைப்பட்டு, நம் சவப்பெட்டியை நாமே செய்கிறோம்.

* பணம் தேவைக்கு இருந்தால் மகிழ்ச்சி,ஆசைக்கு இருந்தால் அதுவே நம் வீழ்ச்சி *

-பிரவீன்ராஜ் ரா.

1 Like

Nalla decorate panniteenga… payan paduthiya sorkal adhigam payanpaduthiuleer… Vaazhthukal