\ இயற்கை என்னும் பேரழகி //
என்ன தான் வைத்துள்ளாய் உன்னுள்
எத்தனை முறை ரசித்து முடித்த பின்னும் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கிறது
என்ன தான் வைத்துள்ளாய் உன்னுள்ளே !
கவிஞனின் கடவுளே…
காதலர்களின் கிரீடமே…
படைப்பின் உச்சமே…
படைத்தவனின் ஆச்சரியமே, என்ன தான் வைத்துள்ளாய் உன்னுள்ளே !
கடலின் நீலத்திலும்,
வானவில்லின் வண்ணத்திலும்,
நிலவின் கரையிலும்,
மழையின் தூய்மையிலும்,
காற்றின் சுவாசத்திலும்,
மலரின் வாசத்திலும்,
இருளின் நிழலிலும்,
மண்ணின் துகள்களிலும்
மழலையின் சிரிப்பிலும்
உன்னைப் பார்த்து ரசித்த பின்னும், இன்னும் ரசித்து முடிக்கவில்லையே என்ற ஏக்கத்தை விதைக்கிறாயடி நீ !
என்ன தான் வைத்துள்ளாய் உன்னுள் ! எனக்கு ஜென்மம் ஒன்று போதாதடி, உன்னை ரசித்து முடிக்க… இன்னும் ஏழேழு ஜென்மம் வேண்டும் எனக்கு, உன்னை வர்ணித்துக் கொண்டே நான் வாழ . . .
By:
G. PRIYANKA, B.Com, B.L.
E Mail : gpriyangamary1@gmail.com