ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது என்ற குரல் கேட்டு எழுவது அச்சிறுவனின் வழக்கம்
காலை வேளையில் அவன் தாய் தன் வேலையின் பொழுது கேட்க வானொலியின் இசையொலி அவன் பள்ளி செல்லும் வரை ஒலிக்கும்
மாலை வேளையில் வானொலியில் ஒலிக்கும் இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் பொழுது அவன் வீடு நுழைவான் அதுவே மாலை நேர அவன் கேட்கும் கானம்
பாரதியாரின் சொல்லுக்கு ஏற்ப மாலை முழுதும் விளையாட்டு வழக்கப்படுத்திய பின்
இரவு துயில்க்கொள்ளும் நேரத்தில் கூட 70,80களின் அமுதகானங்களை கேட்டு உறங்கினான்
விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையில் கூட அவன்
தந்தை கேட்கும் வர்ணனை மாலை நேரத்தில் வினாவும், போட்டிகள் அதன்பின் ஒலிக்கும் கானங்கள் என அவன் மனதில் வானொலி ஒரு மின்னொளி வீசியது
பின்வரும் காலத்தில் அவன் வாழ்வில் வறுமை கீதம் பாடினாலும் வானொலியின் சங்கீதத்தை அவன் கேட்க தவறவில்லை
கல்வி இடைநின்ற காரணத்தினால் அவன் சென்ற வேலைச் சாலைகளிலும் வானொலியின் வர்ணனைகள் பூக்களின் வாசமே மணந்தது
நாமும் வர்ணனையாளராக என்ன ஓட்டம் தொடர்ந்தது ஆனால் அது அவனுக்கு தோல்வியை பரிசாய் தந்தது
ஏனென்றால் அவன் கல்வி திறன் குறைவு இருப்பினும் தன் தனித்திறனை வளர்த்து அவன் நேசித்த வானொலி நிலையத்தின்
கதவைத்தட்டினான் அவன் தட்டிய ஒலி அவனுக்கு உறைத்தது உன் படிப்பு இந்த வானொலியின் படிக்கு சமம் இல்லை என்றது
இப்பொழுதும் அவன் தன் கைப்பேசியின் மூலம் ஆன்லைனில் கேட்கிறான்
தன் சிறுவயது காதலியின்(வானொலி) பண்பலை ஒலியை
"ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது"