Community

வெற்றி வீரன்

புலிச் சின்னம் பதித்த சோழர்களின் வரலாற்றை மறவா நம் மக்களுக்கு ஓர் சிங்கக் கொடி மன்னனின் வீரம் சிறுகதையாக

கி.பி 7ம் நூற்றாண்டின் துவக்கத்தில் சிங்கக் கொடி கொண்ட பல்லவ மன்னர்களின் ஆட்சி தமிழகத்தில் பரமேஸ்வரன் மற்றும் இராஜசிம்மன் ஆகியோரால் வலுப்படுத்தப்பட்டது. அதற்க்கு பின் வந்த இரண்டாம் நந்திவர்மன் வாழ்க்கை நிகழ்வு கற்பனை வெள்ளத்தில் சிறுகதையாக.

காஞ்சியை தலைமையாக கொண்டு ஆட்சி செய்து வரும் இரண்டாம் நந்திவர்மன் தான் ஆட்சிப் பொறுப்பேற்ற 16ம் ஆண்டை நினைவு கூறும் வகையிலும் வேங்கிநாடு முதல் கொங்குநாடு வரை தன் பேரரசை நிறுவியதை நினைவு கூறும் வகையில் கும்பகோணத்தில் உள்ள நாதன் கோவிலில் பெரு விழா எடுத்து கொண்டாட விரும்பினான்.

நந்திபுரம் நோக்கி :
தன் படையின் ஒரு பகுதியை காஞ்சீ கோட்டையில் விட்டு அந்தி மாலையில் ஏனைய படையுடன் நந்திபுரத்தில் உள்ள நாதன் கோவில் பெருமாளை தரிசிக்க விரைந்தார்.மன்னரின் குதிரைகள் கடக்க வழி நெடுகிலும் புழுதியால் பனிப்போல் சூழ்ந்து. நந்திபுரம் அடைய இரவு தாண்டும் என்பதால் வீரர்கள் படை சூழ கவனமுடன் தொடர்ந்தான்.
பாண்டியன் அரிகேசரி:
இரண்டாம் நந்திவர்மனின் வருகையை ஒற்றன் மூலம் அறிந்த பாண்டியன் அரிகேசரி தன் மகனான சித்திரமாயனை கொங்குநாடு போரில் சரணடைய வைதமைக்கு பழிவாங்க என்னி சிற்றசர்களுடன் இரகசியமாக பெரும் படையுடன் நந்திபுரம் விரைந்தான்.

நந்திபுரம் :
மாமன்னரின் வருகைக்காக நந்திபுரமும் அதன் மக்களும் ஆரவாரத்துடன் காத்திருந்தனர். தெருவெங்கும் தோரணமும் யானைகளின் முழக்கங்களுடன் வரவேற்க பாண்டிய மன்னன் சூழ்ச்சி அறியாது காத்திருந்தனர். கோவில்களில் விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றது.

மன்னர் வருகை:
பவுர்ணமி நிலவின் ஒளியில் அதிகாலையில் சூரியனுடன் நந்திபுரம் அடைந்தான் இரண்டாம் நந்திவர்மன். அவன் வருகைக்கு காத்திருந்த மக்கள் மலர்களை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நாதன் பெருமாளை காண பேர் ஆர்வம் கொண்ட மன்னர் படையின் ஒரு பகுதியை ஒய்வு எடுக்க அனுப்பி விட்டு கோவிலினுல் நுழைய முற்பட்டான்.

தக்க சமயம் பார்த்து காத்திருந்த பாண்டியன் அரிகேசரி மற்றும் அவனது படைவீரர்கள் படைபலம் குறைந்த நேரத்தில் மன்னர் கோவிலினுல் நுழையும் முன் சுற்றி தாக்குதல் நடத்தினர். இதை சற்றும் எதிர்பாராத மன்னர் மற்றும் மக்கள் நாதன் கோவிலில் பதுங்கியிருந்து, பாண்டிய படையினர் உள்ளே நுழையா வண்ணம் வியூகம் அமைத்தான் அடுத்த கணம் படை தளபதி உதய சந்திரனுக்கும் செய்தி அனுப்ப பட்டது. பெரும் கோட்டை போன்ற மதில் சுவரும் மன்னரின் வியூகமும் எதிரி நாட்டு படையினரை தடுத்தாலும், முழ படை பலம் கொண்டு எதிர் தாக்குதல் செய்ய தக்க சமயம் பார்த்து காத்திருந்தான்.

சித்திரமாயனும் சிற்றசுகளும்:
இரண்டாம் நந்திவர்மனை கொன்று பலி தீர்க்க பாண்டியன் அரிகேசரி வெறி கொன்டு பல்லவ வீரர்களை கொல்லத் துவக்கத்தினான், மறுபுறம் காஞ்சீயிலிருந்து பெரும் படையுடன் தளபதி உதய சந்திரன் வருவதை அறிந்து சித்திரமாயன் பல்லவ தேசத்திற்க்குட்பட்ட சிற்றசரசுகளின் மீது போர் தொடுத்து கைப்பற்ற துவக்கினான். இருமுனைகளிலும் கடும் போர் நிகழ உதய சந்திரன் காஞ்சீயிலிருந்து வரும் வழியில் சிற்றசர்களின் படை திரட்டி நந்திபுரம் விரைந்தான்.

உதய சந்திரன் வருகை:
பெரும் படையுடன் ஆக்ரோஷமாக விரைந்த உதய சந்திரனை தடுக்க சித்திரமாயன் படையுடன் விரைந்தான்.
இருநாட்டு வீரர்களும் கடும் போரிட்டனர், இரத்த வெள்ளம் ஓடியது. பெருங் கோபம் கொண்ட உதய சந்திரன் தன்னுடைய கூர் வாளால் சித்திரமாயனையும் பிறரையும் கொன்று குவித்தான். எஞ்சிய படைகள் சிதறி ஓட நந்திபுரம் விரைந்தான்.

பாண்டியன் அரிகேசரியின் ஓட்டம்:
உதய சந்திரனின் வருகையை அறிந்த மன்னர் நந்திவர்மன் பாண்டியன் அரிகேசரியின் மீது எதிர் தாக்குதல் தொடர்ந்தான், அணையிலிருந்து பொங்கி வரும் நீர் போல ஆக்ரோஷமாக கொன்று குவிக்க துவங்கினான் நந்திவர்மன். சித்திரமாயனின் உயிர் பிரிந்த செய்தி அறிந்ததும் நந்திவர்மனின் எதிர் தாக்குதலில் நிலை குலைந்து பாண்டியநாடு திரும்பினான் அரிகேசரி.

இரண்டாம் நந்திவர்மனின் பரிவேள்வி:
போரில் உதய சந்திரனின் உதவியுடன் வென்ற நந்திவர்மன் நாதன் கோவில் விழாவை வெகு விமரிசையாக கொண்டாடி விட்டு தஞ்சை அருகே துணை தலைநக‌ரை தோற்றுவித்து காஞ்சீ திரும்பினான். காஞ்சீ திரும்பிய நந்திவர்மனுக்கும், உதய சந்திரனுக்கும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ச்சியாக பல போர்களில் வெற்றி பெற்ற இரண்டாம் நந்திவர்மன் பரிவேள்வி நடத்த என்னினான்.

சாளுக்கியர்கள்:
சாளுக்கியர்களின் பரம எதிரியான பல்லவர்கள் தெற்கே பாண்டியனை எதிர்த்து வெற்றி பெற்று மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாவதை விரும்பாத சாளுக்கிய மன்னர் இரண்டாம் விக்கிரமாதித்தன் தக்க சமயம் பார்த்து தாக்க படைகளை தயார் படுத்திக் கொண்டு இருந்த விக்ரமாதித்தனுக்கு பரிவேள்வி தொடர்பான செய்திகள் மேலும் எரிச்சலூட்டியது.

பரிவேள்வி :
அரண்மனையில் பரிவேள்விக்கான வேலைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது, அரசரின் குதிரை ராஜா அலங்காரத்துடன் காத்திருந்து. மன்னரின் அவையில் இலக்கிய, இலக்கண படைப்புகள் அரங்கேற்ற பட்ட பின்னர் பூஜைகள் முடிந்த பின்னர் மன்னர் வடக்கே தன் அனுப்பினார். நெடுந்தூரம் சென்ற மாமன்னரின் குதிரை வேங்கிநாடு சென்று தன் பயணத்தை நிறைவு செய்தது. அந் நாட்டின் மன்னன் ஆன விஷ்ணுராசன் நந்திவர்மனின் போர் திறமை வீரம் அறிந்து அவனின் கீழ் ஆட்சி செய்ய ஒப்புக் கொண்டான் எனினும் சிற்றசரான பிருதுவி-வியாக்கிரன் என்பவன் குதிரையை கட்டினான். எனவே மாமன்னரின் படைத்தளபதி உதய சந்திரன் தலைமையில் படையை வேங்கிநாடு நோக்கி அனுப்பினான்.
இரண்டாம் விக்கிரமாதித்தன் :
காலம் கனிய காத்திருந்த விக்ரமாதித்தன்
படையினர் வேங்கிநாடு சென்றாலும் தொடர் போர்களினால் சோர்த்திருப்பனர் என்பதால் காஞ்சீயின் மீது போர் தொடுத்தான். பாதியிலேயே திரும்புவது உகந்ததன்று என்பதால் வேங்கிநாடு சென்று குதிரையுடன் திரும்ப உதய சந்திரனுக்கு ஆணையிட்டான் நந்திவர்மன்.

கீர்த்திவர்மன் வருகை:
கோட்டையை கைப்பற்ற கடும் போர் நடத்திய விக்ரமாதித்தனுக்கு போர்களில் அனுபவம் வாய்ந்த பல்லவ படையினரை தாண்டி கோட்டையினுல் நுழைவது இயலாத காரியம் ஆக, தன் மகனான இரண்டாம் கீர்த்திவர்மனை பெரும் படையுடன் காஞ்சீயை சுற்றி வளைக்க உத்தரவிட்டான். மறுபுறம் விஷ்ணுராசனின் உதவியின்மையால்
போரில் தோற்று நாட்டை விட்டு ஓடினான் பிருதுவி-வியாக்கிரன். நாட்டை பல்லவர்களின் கீழ் கொண்டு வந்ததுடன்
படையுடன் காஞ்சீ திரும்பினான் உதய சந்திரன்.

விக்கிரமாதித்தனின் வேட்டை:
காஞ்சி சுற்றி வளைக்க பட்டதால் மன்னர் கோட்டையினுல் செய்வதறியாது திகைத்தான். காஞ்சீயினுல் நுழைந்த விக்கிரமாதித்தன் காஞ்சியின் செல்வ வளமும், கட்டிட கலையையும் கன்டு வியந்தான். அங்குள்ள செல்வங்கள் அனைத்தயும் அம்மக்களுக்கே வழங்கினான். பின்னர் உதய சந்திரன் பெரும் படையுடன் வருவதை அறிந்து காஞ்சீயிலிருந்து எதையும் கைப்பற்றாமல் படைகளுடன் நாடு திரும்ப முயன்ற விக்கிரமாதித்தனை தன் நாட்டின் எல்லையான வேங்கிநாடு வரை விரட்டி சென்று தன் மாபெரும் பேரரசை காத்தான் உதய சந்திரன்.

12 வயதில் ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டாம் நந்திவர்மன் 65 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக பல போர்களில் வெற்றி பெற்றும், மேலும் கலை, இலக்கியங்களிலும் ஆர்வம் கொண்டு வளர்த்தான்.

நிர்வாக திறனிலும் போர் நுணுக்கங்களிலும் சிறந்தது விழங்கிய
இரண்டாம் நந்திவர்மனும் படைத்தளபதி உதய சந்திரனும் வெற்றி வீரர்களே…!