பாதி கனவில் விழித்தெழுந்தேன்
கனவு கலைந்தது அறியாமல்
திகைத்து நின்றேன்…
என்னை சுற்றி வண்ண வண்ணமாய்
ஓவியங்கள்
யாரோ தீட்ட கண்டேன்…
எங்கும் விளக்குகள்
மின்மினி பூச்சிகளாய் யாரோ
ஏற்ற கண்டேன்…
மழலை புன்னகையில் மனதை வருடும்
குழந்தைகளை
யாரோ அருகில் அமர்த்த கண்டேன்…
மகிழ்ச்சியில் என்னை அறியாமல்
கண்களில் பெருக
யாரோ அதை துடைக்க கண்டேன்…
யாரென்று என்விழிகள் காண நினைக்கையில் கண்விழித்து
இவை அனைத்தும்
என் கனவென்று கண்டேன்…
நிஜத்தில் அவர் முகம் அறிய
ஆவல் கொண்டேன்…
பெண்ணின் ஆழம் புரிய படையெடுத்து
தோற்ற ஆண்கள் பலர்.
அவளின்
மௌனத்தின் புரிதலையும்
புன்னகையின் சிணுங்களையும்
கண்களின் சலசலப்பையும்
புரிகிறவன்…
அவள் இதயத்தில் என்றும் அழியா
ஓவியமாகிறான்…
என் கைபிடித்து துணை நடக்கும்
துணையை தேடி தொடர்கிறது
என் இரவு உறக்கம்…
என்றும் என்னுள்
புன்னகைக்கு முன்மொழியாய்
வேதனைக்கு ஆறுதலாய்
கண்ணீருக்கு கைக்குட்டையாய்
மின்னலுக்கு வெண்குடையாய்
கரம் நிற்கும் என் தோழன் என்னவன்
காத்திருக்கிறேன் அவன் கரம் பிடிக்கும்
அந்த நொடிக்காக…
உமா தேவி
7598690655