ஏகாந்த நினைவுகள்
ஏகாந்த நினைவுகள் ஏந்திழையின் மனதில்//
ஆலோலம் பாடும் பசுமைக் கனவுகள்//
பின்னோக்கிச் செல்லும் அழகிய நிகழ்வுகள்//
ஆனந்தக் களிப்பில் கண்ணீர் வடித்திடும்//
காதல் நினைவுச் சிறகடித்துப் பறக்க//
கவிதையாய் சொல்லிடும் மௌன ராகமே//
பனித்துளியின் சிலிர்ப்புத் தேகம் எங்கும்//
பூரித்து நிற்கிறேன் புதுப் பொலிவுடனே//
காலத்தின் கோலம் வெண்மைச் சிறை//
காற்றோடுக் கலந்தான் கதறிட வைத்தான்//
வேரறுந்தக் கொடியென வேதனையில் நின்றாள்//
தவமாய் மனதினில் மன்னனை முடிந்தாள்//
பாண்டிச்செல்வி கருப்பசாமி