**strong`
Preformatted text
`
ஆழ்குழாயில் விழ்ந்த ஒரு குழந்தையின் அழுகுரலை விவரிக்கிறது என் கவிதை…
விலையாட சென்றேன்!
விபரீதம் அறியாமல்!
சிறு குழி என்று எண்ணி !
பெறும் குகையில் நான் வீழ்ந்தேன்!
விழும் போது வலி தெரியவில்லை!
என்ன் மீட்டெடூக்க கூட ஆள் இல்லை!
கண்ணெல்லாம் எறியுது!
என் கால் கூட நடுங்குது!
இருட்டாக இருக்குது!
என்னை இருள் வந்து சூழ்ந்தது!
இப்ப; ஒரு முறை மேல் வந்து!
உன் முகம் பார்க்க தோனுது!
கையெல்லாம் எறியிது!
நான் விழ்ந்து ஒரு நாள் ஆகுது!
வெளிவருவேன்னு தோனல!
இங்கு என்ன வர வைக்கவும் ஆள் இல்லை!
தாய் மடி சுகம் வேண்டும் !
ஒரு முறை தாவி எழுந்து வரட்டா அம்மா!
காற்று கூட இங்கு இல்லை !
நான் இனி கனவாகி போனேன் அம்மா!
சிறகடிக்கும் இந்தியாவிற்கு !
ஒரு சிறுபிள்ளை தூக்க. வழியில்லை!
இனி கடவுளை கூட நம்பாத!
கற்றாய் போன என்னால்!!! நான்; சுஜீத்…