வாழ்க்கை பயணத்தில் உதிரும் நாட்களை
நிரப்பிவிட வருகிறது உறவுகள்
திகைத்துப் போகும் திருப்பங்களில்
திடீரென உறவுகள் முளைத்தது
தீராத அன்பைத் தந்தது
கேட்காத வலியை அள்ளி கொடுத்தது
காதுகள் இல்லாதது போல் கடந்தும் போகிறது
தீண்டாமை பார்ப்பது போல் உதிர்ந்தும் நிற்கிறது
பேசிய பேச்சுக்கள் காற்றில் இறந்தது
கேட்ட காதுகள் கேள்விக் குறிகளானது
பல காலம் வந்தும்
சில உறவுகள் பழுதாகிப் போகிறது
பழுதை சரிபார்க்கும் முன்னே
அன்பின் உயிரை அறுத்து வைக்கிறது
இதயத்தின் முன்னே
கனவுகளாய் நிஜத்தில் வாழ்ந்ததை
கண்ணீரால் கலைத்துப் போகிறது
சிரிப்பு , கண்ணீர் போல் உறவுகளும்
எப்போதும் வருவதில்லை
எப்போதாவது தான் வருகிறது
-
சில உறவுகள் …
-கல்யாண்