மழலையின் மொழியில்...
மழலையின் புன்னகையிலே…
நீ மன்றாடி கிடந்திருப்பாய்…
மழலையின் மொழியறிய…
உன் செவி மடல்களின் வழியே செவி சாய்க்கவே ஆர்வம் கொள்வாய்…
பிஞ்சு விரல்கள் உன் கைவிரலை பிடிக்கையில்…
இந்த உலகையே மறந்து விடுவாய்…
உன் துன்பத்தை சிதறடிக்கும்
மழலை செல்வம்…
உன் இன்பத்தை மீட்டெடுத்து ஆனந்த
வெள்ளத்தில் ஆழ்த்தும்…