Community

மழைக்கால குடிசைகள்

பௌவர்னமிக்காக மாறவிருக்கும் பால்நிலவு அன்று வாடைக்காற்றில் வசந்தமாக உலவ நாளப்புரமும் இருக்கும் நட்சத்திர நாயகர்கள் நான் நீயேன்று நல்லியிரவிலும் சல்லாபிக்க துணைத்தேடுகிறது விண்ணில் . தென்றலோட கீழிகிங்கி மண்யில்வர இலைகள் சல சலக்க பூமிமகள் அமையாக தூங்குகிறாள் . ஊரடங்கிலும் ஊர் அடங்கிருக்கும் ஒரு வேளை இந்த இரவே . இரவிலும் வந்து இம்சை செய்கிறது மூன்று நாளைக்கு ஒருமுறை வரும் குடிதண்ணிர் . நல்லிரவு பனிரெண்டு மணி வீட்டு வாசல் ஒரு சத்தம் ‘‘கவிதா’கவிதா’’ னு கூப்பிட்டுக்கொண்டே பக்கத்து வீட்டு பாலம்மாள் அக்கா வந்தங்க தண்ணி வருது னு சொல்லி தூக்கத்திலுருந்து அம்மாவை எழுப்பிச்சொல்லி விட்டு பைப் வாயில வைச்ச குடம் நிரம்பியுருக்கும் என்று நினைவு வந்து விரைந்து சென்றாங்க ! அரைத்தூக்கத்திலுருந்து எழுந்திருச்ச அம்மா ஆச்சி ஆச்சி னு கூப்பிட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் [தங்கச்சிய செல்லமா ஆச்சினு கூப்பிடுவாங்க ]அந்த ஷீட் போட்ட சிறிய வீட்டில் நடுக்கூடத்தில் மூன்று பேர் தூங்ககும் அளவிற்க்கு கொஞ்சம் விசாலமா இருக்கும்சமையலறையும் அதுவே திண்ணை என்ற வீட்டின் அங்கம்இருந்தது ஆனால் மாடிவீடுக்காட்டுவதற்க்காக இடம்போத வில்லையேன்றுதயின் திண்ணையின் கால்பங்கினை மாடிவிட்டிற்க்காக தத்தெடுத்து க் கொடுத்து கால்திண்ணைகாலியாக கால்நீட்டிக்கூட தூங்கமுடியாத அளவிற்க்கு மீதத்திண்ணை மிஞ்சமிருந்தது பக்கவாட்டில் ஒருவர் முழுமையாக கால்நீட்டித்தூங்கலாம் அங்கும்நாற்காலி ஒய்யாரமா உட்கார்ந்திருக்கு ஓலியில வந்த டிவி. இடதுபக்கம் அப்பா ஒருகலித்துதூங்க காலிரண்டும் திண்ணையின் எல்லையை தாண்டி மாடிவீட்டிற்க்காக போட பட்ட அடிதளத்தின் அடிப்பகுதியை தொட்டுக்கொண்டு தூங்குவார் பகலில் செய்த கூலிவேலையின் அலுப்பினால் அப்பா! நடுக்கூடத்திலிருக்கும் தங்கச்சி கூப்பிட்டு தண்ணி புடிக்காலம் வா ஆச்சி என அம்மா சொல்லும் முழிப்பு வந்த தங்கச்சியும் முழுப்போர்வை போர்த்தி முகத்தினை முடிக்கொண்டு தூங்குவதற்கான செய்கையை சிறப்ப செயதது சரி பொன்னு உண்மையாக தூங்குறப்பபோல திண்ணைக்கு வந்து தண்ணிப்புடிக்க வாங்க!! கொஞ்சங்கூட தண்ணியே இல்ல இன்னைக்கு புடிக்கலனா இன்னும் இரண்டு நாள் கழிச்சிதான் தண்ணிவரும் வாங்க னு சொல்லி குடத்தயேடுத்துக்கிட்டு அம்மா தெருப்பக்கமா போனங்க( ஆறுவருஷத்துக்கு முன்னால் உடைஞ்ச காலுடன்) தூக்கத்தை கலைத்து அப்பா வேட்டியை உதறிக்கட்டி எழுந்திரிச்சி தண்ணி தூக்கப்போனார் இதனையேல்லாம் நடுக்கூடத்தில் தூக்கம்கலைந்து படுத்திருக்கும் விஜய் [அவர்களின் மூன்றாவது மகன்] கவனிக்கிறான் அப்பாவிற்க்கு உதவி செய்வதற்க்காக தான் தண்ணி புடிக்கிறேனெ நீங்க தூங்குங்க என்று அப்பாவிடம் சொல்ல தயக்துடன் அப்பா தூங்க சென்றார் இவன் தண்ணிமுழுவதும் பிடித்து முடிச்சி மாடிவீட்டியின் அடித்திளத்தில் மணல்நிரப்பி இருந்தது அதன் மீது கீரைவிதை விதைத்த கீரை வளரும் அளவிற்க்கு அந்த குடும்பமும் வளரும் என்பது அந்த ஊரின் வழக்கமாக நம்பப்பட்டது ஒருவாரத்திற்க்கு முன்பு பெய்த மழையை நம்பி கீரைவிற்பவரிடம் விதை வாங்கி தெளித்தான் அந்த வாரம்முழுவது சூரியின் உஷ்ணத்தை உறக்க தெளித்தான் பலமுறை தண்ணிர் ஊற்றியும் கீரை வளரவில்லை அதற்கு அவன் அப்பா’’ விதைபோடுவதற்க்கு முன்பு தரையை மண்வெட்டியால் கொத்திவிட்டு போட வேண்டும் ''ஆனா நீ சும்மா விதையை தூவி விட்டதால முளைப்பது கஷ்டம்தான் அதனால் விஜய்யின் உள்மனம் உருமியது யாரும் கேட்காதவாறு மனம்கொஞ்சம் சலனமாகவேயிருந்தது ஆனா விதை முளைக்கும்முனு அவன் அசையாத நம்பிக்கை வைத்திருந்தான் இப்போ தண்ணீர் முழுவதும் பிடித்துவிட்டு அந்த விதை ப்போட்ட மாடிவீட்டிற்க்கான அடித்தளத்தின் மண்நிரம்பிய பகுதியை பார்த்து க்கொண்டிருந்தான் இவ்வளவு நேரம் வான்வெளியில் சிரித்துக்கொண்டிருந்த நட்சத்திரங்கள் இப்போ அவையிருந்த இடத்தை கரும்போர்வை க்கொண்டு மூடியது மேகங்கள் . வானிலுருந்து நீர்த்துளிகள் கீரை விதைத்த மண்ணில் விழ அதை கனித்த நீர்விழுந்த பாதை நோக்கி பார்வையை மேலே பார்க்க அவன் முகத்திலும் முத்து மழையின் இரண்டாம் துளி விழுந்தது வீட்டிற்க்கு சென்று அப்பாவிடம் மழைப்பெய்கிறது மாடுமும் கன்று க்குட்டியும் மழையில் நனையும் நான் போரோன் நீங்க வாங்க அப்பா சொல்லிட்டு சிவப்பு நிற பசுமாடு வீட்டின் வாசல் ஓரமாக கட்டப்பட்டிருந்தது அதை அவித்துக்கொண்டு வீட்டின் பின்புறமிருக்கும் மாட்டு க்கொட்டவிற்க்கு அலைச்சிட்டு ப்போயி கட்டிவிட்டு அப்பா கொண்டுவந்த வைக்கோலு போட்ட வெளிய வந்த மழை வேகமாக பிடிக்க மழையில் நனைஞ்ச கன்று குட்டிய அப்பாவிட்ட சொல்லி வீட்டிற்க்கு வந்தேன் மழை வேகமேடுத்தது கொஞ்சநேரத்தில் அப்பாவும் வந்தார் வீட்டின் முன் தடுப்பிற்பக்காக மூங்கில்கள் மற்றும் தென்னை ஓலையால் வேய்ந்து திண்ணைக்கு தடுப்பாக அமைந்தது காற்று தெற்கு பக்கமிருந்து வீச வீடும் தெற்கு பார்த்த வீடு அதனால் மழை நீர் ஓலைஇடுக்குளின் வழியாக வேகமாக வந்து திண்ணை நனைத்து திண்ணையில் படுத்திருந்த அம்மா அப்பா இருவரும் நடுக்கூடத்திற்க்கு போக கூட்டு க்குடும்பமாக மாறியது அந்த சிறிய வீடும் மழை நீர் வேகமாக திண்ணை ஈரமாக்கியது மூன்று பேர் தூங்கும் நடுக்கூடத்தில் விஜய் அண்ணனையும் சேர்த்து ஐந்து படுத்துக்கொள் காற்றின் தீவிரம் அதிகமாக மேலும் அவர்களுடன் மழையும் வந்து படுக்க இடங்கேக்க அதையும் ஏற்று கொள்கிறது அந்த சிறிய குடும்பம் இரவு முழுவதும் மேகமகள் ஈரவிழிகளால் பூமியை அணைத்துக்கொள்கிறாள் கிழக்கு மேகத்தை விளக்கிவிட்டு கதிரவன் கண்விழித்து பார்த்தன் முதல் கிரணக்கீற்று விஜய் போட்ட கீரைவிதையின் மீது படர்ந்து விதை துளிர்விட்டது தூக்கத்திலிருந்து எழுந்து வீட்டிலுருந்து வெளியே வந்து பார்க்க துளிர்த்த விதைகள் அவனிடம் பேசிது நீ உறங்கினாலும் நாங்கள் உறங்க மட்டோம்என்று விஜய் சந்தோசமாக வானத்தை பார்தான் சூரியன்க்கூட அவனுக்கு சிரிக்கும் செந்தாமரையாக காட் சியளித்தது

Niraiya kavidhaigalai ezhudhi irukeergal… thodakkam kadhaikaaga aarudhal penuvadhu Pol ulladhu… pannirendu… panirendu illai… vaazhthukal

1 Like