Community

பொழுதுபோக்கும் கண்ணீரும்

ரோட்டை கடக்க நின்றாள். வண்டிகள் தூரத்தில் வருவதை பார்த்த பிறகு கடக்க காலை எட்டுவைத்தாள். கரு கரு வென்று எழும்பின் மேல் சுருக்க தோல் போத்திய கை அவள் தோளை பிடித்தது. அவள் மெதுவாக திரும்பி பார்த்தாள். அந்த வயது முதிர்ந்த அம்மாவின் மறுகையில் டீயை நடுங்கியவாறு பிடித்து கொண்டிருந்தது.
அவள் தோளில் மேலே உள்ள அந்த கையை பிடித்தவாறு ரோட்டை தாண்டி சென்றாள். அந்த வயதான பாட்டி நன்றியை சொல்லிவிட்டு, அவசரமாக காவல் நிலையத்திற்க்குள் நுழைந்தாள். ரோட்டிலிருந்து இரண்டு அடியில் காவல் நிலையம் காவல் நிலையத்திலிருத்து முன்று கட்டிடம் தள்ளி உள்ள கடையில் நுழைந்தாள். அது ஒரு கம்ப்யூட்டர் சென்டர் இவள் வேலை செய்கிற இடம்.
ஹேண்ட்பேக் சிபியு மேல் வைத்தவாறு ஓனரிடம் குட் மார்னிங் சைகை, நாற்காலியில் உட்கார்ந்தாள்.
நேரம் ஓடியது. மதிய உணவு முடித்து வந்த இருவரும் வேலையை ஆரம்பித்தனர். ஆதார்கார்டு, ஜெரக்ஸ், பெட்டிஸன், டைப்பிங் வேலை முடிந்த்தது. இவளுக்கு தூக்கம் தள்ளியது ஓனர் திடீரென்று சத்தம் போட்டு அவளை கூப்பிட்டார். அவள் பயந்து போய் ஓடினாள் அவரிடம். அவர் ஒரு பேப்பரை குடுத்து டைப் அடித்து தர சொன்னார். சரி சரி என்று மண்டை ஆட்டிக்கொண்டே போனால். அவள் தோழியை டைப்பிங் அடிக்க சொன்னாள் “நான் படித்து சொல்கிறேன் பொழுதுபோகும்”.
அவள் நாடகபானியில்
“ஐயா, எனது பெயர் முத்து என் மனைவி பெயர் செல்வி நாங்கள் மேற்கண்ட விலாத்தில் வசித்து வருகிறோம் . எங்கள் வீட்டு ஓரத்தில் ரோஜாபூச்செடிகள் வளர்க்கிறோம். அதை எனது பக்கத்து வீவீவீட்டுக்காகாகாரர் ப்புடுங்கிகிகி எறிந்துவிட்டாடாடார் …இருவரும் வாயின் மேலே கையை வைத்து சத்தம் வறாமல் சிரித்துக் கொண்டனர்.
“என்னடி இது இதாலம் ஒரு பிரச்சனையா” , தோழி “நானே படிச்சு அடிச்சுக்கிறேன் நீ படிச்சா சிரிப்புத்தான் வருது”. " விடு டி எல்லாம் ஒரு என்ஜாயின்மென்ட் தான்” .
மீண்டும் படிக்க ஆரம்பித்தாள். “ரோஜாபூச்செடியை வெட்டியதும் இல்லாமல் எங்கள் நாயையும் அடிக்க வந்தனர். நானும் என் மனைவியும் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று கேட்டாள். அப்படித்தான் நாங்கள் பண்ணுவோம் என்று கெட்ட வார்த்தையில் திட்டுவதுமின்றி என்னை
அடித்துவிட்டனர்…”, கேலியாக சோகத்துடன் படித்து சிரித்தாள்.
“அவரது மனைவியும் எங்களை திட்டினார். இனிமே இவன விட்டுவைக்க கூடாது போட்டுத்தள்ளிடலாம் என்று சண்டை போட்டதுமின்றி, உன் பொண்டாட்டிய அறுத்து போடறனு சொல்கிறார்கள். நீங்கள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும். இப்படிக்கு,”
பேப்பரை மேசை மீது வைத்தவாரு, “இது ஒரு பிரச்சனை எதுக்கு இப்படி, அவன் அவன் பாம் வச்சிருவேனு ,கொலை, கொள்ளைனு போலீஸுக்கு வேலை இவங்க என்ன ன்னா செடிய பிச்சுட்டான், திட்ரானு வந்துருக்காங்க”.
தொழி பிரிண்ட் போட்டாச்சு எடுத்துக்கொடுக்க சொன்னாள். அவள் பிரிண்ட் ஐ ஓனரிடம் கொடுத்தாள். அவர் அங்கே உங்கள் அருகில் உட்கார்ந்தவரிடம் குடுங்கள் என்றார். இவள் திரும்ப யார் என்று பார்க்க அவர் இவளை நோக்கி வந்தார். கிழிந்த வேட்டியை சுருட்டி விட்டு, இடுப்பில் சொருகி ஓட்டையை மறைத்தவாறு, தலை வெள்ளையனே கலைந்த முடி, கண் சிவந்த முகத்தில் காய்ந்து போன உப்புத்திட்டு நொறுங்கிய உடம்பு, சட்டையில் காலர் கிழிந்த அதை அவர் ஒரு கையால் மறைத்து, மறுகை இவரிடம் அந்த பிரிண்ட் பேப்பரை வாங்கியது.
" வாங்கியாச்சிங்களா" ஒரு அம்மா குரல் திரும்பி பார்க்க நுழையும் இடத்தில், ஒரு பாட்டி… காலையில் இவள் ரோட்டை க்ராஸ் பண்ணிவிட்ட அதே பாட்டி. அவர் பணத்தை அவளிடம் கொடுத்த விட்டு இருவரும் சென்றனர்.
இவள் கண்கள் கலங்கியவாரு …

Kadhaiyai padikkavillai… mudhal vaarthai English word… so… sorry