எத்தனையோ இன்னும் எத்தனையோ?
நம் தேசத்தலைமுறைகள் தரைமட்டமாக்கப்பட்ட தருணங்கள் எத்தனையோ?
கண்டதும் கயவர்கள் என நீ கண்டுருவது எவ்வாறோ?
மழலையே அவ்வறியாமைதான் உன்னை அழித்ததோ;
கோபமென்ற தீயில் பொசுக்கிவிடத்தான் தாய்மையும் தவிக்கிறது;
இயற்கையாகவே இயலாமைதான் தடுக்கிறது.
உன் சாதனைக் கனவுகள் எத்தனையோ அத்தனையும் எங்கள் சிந்தையில் நீ, சிதைந்தவளாய் !
இரக்கமற்றவர்களால் இலக்கணமற்றுப்போனது
இம்மண்ணின் வீரமும், கலாச்சாரமும்!
இனி,
வானத்தை விழித்ததும்ப மண்டியிட்டுப்பார்த்தாலும் வாராது
இந்த “வண்ணத்துப்பூச்சி”.
இவன் மனிதகுலமே இல்லையெனில் ஏதடா உனக்கு மன்னிப்பு!!
இம்மண்ணில் மலர்ந்த “நிலவையே”
விண்ணிற்கு வழியனுப்பிவிட்டு
பின்பு ,
வேறு எந்த நிலவைத்
தேடிக்கொண்டிருக்கின்றோம்
இங்கு ?
இறைவா!
உனக்கு ஒரு பிரார்த்தனை
அச்சிறுமியின் இறுதிச்சடங்கிலாவது இறங்கி வருவாயா??
காற்றிலாவது நம் பிரார்த்தனைகள் பதிவாகட்டும்.
இனியாவது,
இது முற்றும் என்ற முடிவை
எட்டட்டும்.
காரிருளில் தான்
விண்மீன்களும் வினா எழுப்புகின்றது;
வெண்ணிலாவும் விடை விதைக்கிறது
என்றதோர் நம்பிக்கையுடன்
புது விடியலை நோக்கி!!
இவள் சா. கவியரசி.