Community

புதுமைப்பெண்

#புதுமைப்பெண்
இந்த கதையின் ஹீரோ ஒரு பெண்.ஆமாங்க ஏன் ஹீரோனா ஆணாதான் இருக்கணுமா என்ன.சரி அறுக்காம கதைக்கு வரேன்.அந்த வருடம் நல்ல மழை அதுபோதாதுன்னு கர்நாடகாவும் அங்க வெள்ளம் வந்துரபோதுன்னு பயந்து தண்ணிய திறந்து விட்ருந்தாங்க. அதனால நம்ம ஏழு ஏக்கர் ஏழுமலை ஏழு வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செஞ்சார்.வேலைக்கு ஆள் வைத்தால் கூலி கொடுத்து கட்டுபடியாகது என்று அல்லும் பகலும் பாராது அயராது உழைத்தார்.அவரது மகள் பிறக்கும் போதே மனைவியும் இறந்து விட்டதால் வீட்டு வேலையும் இவரே செய்ய வேண்டியதிருந்தது.மகள் உதவ வந்தாலும் படிக்கிற புள்ள படிப்புல தான் கவனம் செழுத்தனுமுனு சொல்லி எந்த வேலையும் செய்ய விடமாட்டார்.இப்படியே நாட்கள் ஓட விவசாயமும் நல்ல விளைச்சல் தந்தது. இந்த சமயத்தில் அவர் பொண்ணுக்கு நல்ல வரன் வந்தது. விளைச்சல் மீது நம்பிக்கை வைத்து கல்யாணத்தை நல்ல அமோகமாக நடத்த திட்ட மிட்டிருந்தார்.அறுவடையும் முடிந்து அவர் எதிர்பார்த்ததை விட அதிக பணமும் கிடைத்தது.சரி கல்யாணத்துக்கு இன்னும் நாள் இருக்கே பணத்தை கையில வச்சிருக்க வேண்டாம் பேங்க்ல போட்டுடலாமுனு முடிவு செஞ்சார்.அதனால பணத்தோட பஸ்ல போக பயந்துகிட்டு ஆட்டோல பேங்க்கு போய்ட்டு இருந்தார்.அப்போ திடிருன்னு சின்ன விபத்து நடந்தது. அதுல ஏழுமலை மயங்கிவிட்டார்.மயங்கிய ஏழுமலைய ஹாஸ்பிட்டல்ல சேர்த்து அவோரோட பணத்தை அவர் கைலே சேர்த்தார் அந்த நல்ல ஆட்டோ டிரைவர்.வாழ்நாள் முழுதும் உங்கள மறக்க மாட்டேன் என்று ஏழுமலை அந்த டிரைவரிடம் கைகளை பிடித்து நன்றி கூறினார். என்னடா இந்த கதையோட ஹீரோ பொண்ணுன்னு சொல்லிட்டு காப்பாத்துனது ஆட்டோ டிரைவர்னு சொல்றேன்னு நினைக்குறிங்களா. ஆட்டோ டிரைவர் பொண்ணுனு சொல்லி முடிச்சா இந்த கதை மத்த கதை மாதிரி சாதாரணமா இருக்கும்.சரி கதைக்குள்ள வருவோம்.சில நாட்களில் ஏழுமலை ஹாஸ்பிட்டல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்ல ஓய்வு எடுத்துக்கிட்டு இருந்தார்.அவரது மகளுக்கும் படிப்பு முடிந்து விட்டதால் வீட்டிலே இருந்து அப்பாவை கவனமாக பார்த்து கொண்டாள். ஏழுமலையும் குணமாகி நடமாட ஆரம்பிச்சுட்டார்.
இந்த நேரத்தில் தான் அவரது மகள் காதல் கல்யாணம் செய்து கொண்டு அவர் முன்பு வந்து நின்றாள்.ஏழுமலைக்கு தூக்கி வாரி போட்டது.
ஏழுமலையின் கால்களை தொட்டு மன்னிப்பு கேட்டு எழுந்த மகள்,
அப்பா என்னை வளர்த்து படிக்க வைக்க எவ்வளவு கஷ்டப்பட்டு கடன்பட்டிங்கன்னு எனக்கு தெரியும். இப்போ இந்த விளைச்சல்ல வந்த பணத்தையும் வாங்குன கடன கட்டாம என் கல்யாணத்துக்கே செலவு பண்ணிட்டீங்கனா நீங்க எவ்வளவு கஷ்டப்படுவிங்கன்னும் தெரியும். அதனால்தான் உங்க மானத்துக்கு எந்த பாதிப்பும் இருக்கக்கூடாதுன்னு நானா யாரோ ஒருத்தரை காதல் செய்யாம நீங்க பார்த்த பையன்ட்டையும் அவுங்க வீட்லையும் பேசி புரிய வச்சு இந்த கல்யாணத்தை எந்த விதமான ஆடம்பர செலவும் இல்லாம செஞ்சுகிட்டேன்.இதை உங்க கிட்ட சொன்னா கண்டிப்பா ஒத்துக்க மாட்டீங்கன்னுதா உங்ககிட்ட சொல்லல என்று அவள் சொல்லி முடிக்க.ஏழுமலைக்கு ஆதங்கத்தோடு ஆனந்த கண்ணீர் வந்தது.
இப்ப சொல்லுங்க இந்த பெண் ஹீரோதானே.தன் பெற்றோர்கள் கஷ்டத்தை புரிந்து கொண்டு செயல்படும் ஒவ்வொரு பிள்ளைகளுமே வாழ்வில் உண்மையான ஹீரோக்களே.
குறிப்பு:கடன் வாங்கி நடத்தும் ஆடம்பர கல்யாணம் ஆனந்தத்தை அழிக்கும்.
த வீரமணி.

Kadhaidhaan pesa vendum… neengal pesakoodadhu… vaazhthukal