என் உலகில் நான் அதிகமாக
நேசித்த ஒரு பெண்
என் உயிர் தோழி…
அவள் புன்னகையில் என் கண்ணீர்
மறந்து எனக்கே தெரியாமல்
புன்னகைத்து நின்றேன்…
அவள் கோபத்தில் கூட என்மீது
அவள் வைத்திருக்கும் அன்பை கண்டு
மெய்சிலிர்த்து நின்றேன்…
என் முதல் குழந்தையாய் அவள்
தேவைகளை பூர்த்தி செய்து
தாய்மையுடன் பாதுகாத்தேன்…
அவள் அழுது நிற்கும் நேரங்களில்
அவள் கண்ணீர் துடைத்து
என் கண்ணீர் துளியை
தண்ணீரோடு களைந்தேன்…
அவள் தினம் கொடுக்கும் முத்தத்தில்
என் தாயின் ஸ்பரிசம் கண்டேன்…
கதை சொல்லி உறங்க வைக்க
தாயான நான் பாட்டியாகி போனேன்…
அவள் உறங்கும் அழகை ரசித்து ரசித்து
என் உறக்கம் மறந்து போனேன்…
எல்லா உறவும் நானாகி நிற்க
அவள் என்னில்
உயிராகி போனாள்…
என் தினசரி வாழ்வில் இந்த சூழலில்
திடீர் மாற்றம்.
அவள் வாழ்வில் காதல் வந்த நேரம்
என் நினைவுகளை மாற்றி
அவன் நினைவு குடிகொண்டது
அவள் உள்ளத்தில்…
பேசும் நேரங்கள் குறைந்து போனது…
பார்க்கும் பார்வைகள் அவள்
மறைக்க நினைக்கும்
பொய்களில் நிறைந்து போயின…
அவள் கால்கள் என்னை
பார்க்க முடியாமல் விலகி போகின…
உயிர் போல் பார்த்து கொண்ட
என் தேவதையின்
கண்களில் கண்ணீர் வர தாங்க
முடியாமல் தவித்து நின்றேன்…
நீ என்றும் என் தோழி மட்டும்தான்
என் தாயல்ல என கூறிவிட்டு
தொலைவாக சென்றால்
என்னை பிணமாக விட்டு…
என் நட்பு தோற்றதென்று
அவள் நினைக்கிறாள்…
என் பாசம் சாகாமல் அவள் நினைவுகளை
சுமந்து கொண்டு என் உயிரை
பிடித்திருக்கிறது என்று
தெரியாது அவளுக்கு…
உமா தேவி
7598690655