Community

கோட்டுக்கு பின் அமைதி

அன்று அதிகாலை ஐந்தரை மணி. மலைகளுக்கும் மரங்களுக்கும் இடையே செல்லும் சாலையில் கோட்டை நின்று கொண்டிருந்தான். இடி அவ்வப்போது வானத்தில் இடித்து கொண்டே இருந்தது. இடிகளின் கோடுகளை பார்த்து விட்டு இதற்கு மழை காரணம் அல்ல இடிகள் தான் காரணம் என்று கவித்துவமாக தனக்கே அறியாமல் நினைத்து கொள்கிறான். தவித்து நின்ற கவித்துவத்தில் நிற்காமல் கோடுகளை எண்ணி சாலையில் வரைய தொடங்கினான். இருண்ட வானம், வெள்ளை இடி சத்தத்தில் பிதற்றும் தன் மனநிலை மற்றும் காதுகளை பொருட்படுத்தாமல் கோட்டை தன் கோடுகள் வரையும் வேலையை செய்து கொண்டிருந்தான். நட்சத்திரம் என்ற ஒரு சிறுவன் வெகு தூரத்தில் இருந்து பதற்றமாய் ஓடி வருவதை கோட்டை காண்கிறான். மனஓடையில் என்ன நடந்திருக்கலாம் என்பதை எண்ணி பார்க்கிறான். நட்சத்திரம் சொன்னது ஐயா அங்கு ஒருவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. கோட்டையும் நட்சத்திரமும் விரைவாக செல்கிறார்கள். தான் ஆஷ்ரமத்தில் தனியே இருந்த தவிப்பு மற்றும் பல எண்ணங்களை விபத்துக்கு உண்டாவரிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணி கொண்டே ஓடுகிறான். கால்கள் விரைய சோர்வின் உச்சத்தை தொடுகிறார்கள். மூச்சு வாங்கினால் விபத்து குள்ளானவர் மூச்சையும் வாங்குவது போல் ஆகிவிடும் என்று இருவரும் எண்ணி அதை வாங்குவதர்க்கு தயங்குகிறார்கள். இருவரும் விபத்து பகுதிக்கு வந்து அடைகின்றன. அதாவது சிறிய தசை வலி பெருமாளுக்கு அவ்வளவு தான். இவர்களுக்கும் கால்களின் தசை வலி அவ்வளவுதான். பெருமாள் கூறுகிறார் இந்த வலி சிறிய வலி தான் நீங்கள் இரண்டு பேரும் ஓடிவந்துதான் எனக்கு பெரும் வலி. அவரது வாகனம் ஒரு ஜீப் மரத்தின் ஓசையை ததும்பி நின்றது. நட்சத்திரம் விரைந்து ஜீப்பின் முன் புறம் தள்ள ஆரம்பித்தான். உஷ் உஷ் என்று தவித்த ஜீப் நின்றது. கோட்டையும் தள்ளினான் ஜீப் அப்படியே நின்றது. எதுவும் கை கொடுக்காததால் நாம் சற்று ஜீப்பின் வெளியே உள்ள குட்டை செவிரில் அமர்ந்து பேசுவோம். இல்லை நா பேசவா நீங்கள் அனுமதி தாருங்கள் என்று கூறுகிறார் பெருமாள். தங்களுக்கு ஓய்வு தேவை என்று கருதுகிறேன் என்றான் கோட்டை. எனது வலி தசையோ இருவருமே என் இருக்கையில் அமர்ந்து சென்று விட்டனர். நான் இருக்கையில் இருந்து வெளியே வருகையில் நீங்களும் நானும். பேசலாம். பேச ஆரம்பித்து விட்டேன். நீங்கள் என்று கோட்டையும் நட்சத்திரத்தையும் பார்த்து கேட்டார். கோட்டை சரி பேசலாம் ஐயா என்று கூறினார். குட்டி செவிரில் போய் அமருங்கள் நான் வருகிறேன் என்று கூறினார். அமர்ந்தனர். பெருமாள் இறங்கி வந்தார். சுருட்டை முடி நீண்ட தோள்கள் கருமைநிறம் பெருமாளுக்கு. வந்தவுடன் எழுந்து நின்றனர். வேண்டாம் பரவாயில்லை நீங்கள் என் தோழர்கள் தான் இடைவெளி எதற்கு? என்று கேட்டார். மௌனம் சம்மதம் அமருங்கள் என்று வேடிக்கையாக கூறினார். நட்சத்திரம் தனது அப்பாவிற்கு ஓயாத வயிற்று வலி நான் போயாக வேண்டும் என்று கூறி விலகி கொண்டான். இப்பொழுது பெருமாள் கோட்டை மட்டுமே உள்ளனர் குட்டி செவிரில். நான் ஒரு மனநல மருத்துவர் நீ யார்? நான் கோடுகள் வரைபவன் ஐயா. வேறு? வேறு எதுவும் இல்லை ஐயா. இதை தான் செய்து கொண்டிருக்கின்றேன். கோடுகள் வரைவது மிகவும் பிடித்தமான ஒன்று. சாப்பிட்டாயா? இல்லை என்றான் கோட்டை. மரங்களில் இருந்து பழங்கள் பறித்து சாப்பிடுவோமா. இல்லை வேணாம் ஐயா எனக்கு பசி இல்லை என்றான் கோட்டை. உனக்கு எது பசி உணவை தவிர? எனக்கு கோடுகள் தான் பசி ஐயா. எனக்கு எழுத படிக்க தெரியாது கோடுகள் தான் வரைவேன். கோட்டை கொஞ்சம் குட்டை ஐந்தரை அடி நான்கு அங்குலம் மட்டும் தான். மிச்சம் உள்ள வளரா அடிகள் கண்ணுக்கு தெரியாத கோடுகள் தானே என்று பெருமாள் வழியாக சிந்திக்கிறான் கோட்டை. பெருமாள் கோட்டையை பார்த்து என்னை வரையுங்களேன்? எனக்கு வரைய வராது ஐயா. முயற்சி செய்யுங்கள். எப்படி ஐயா? வெட்கமாக இருந்தால் நான் திரும்பி கொள்கிறேன் என்று பெருமாள் தன் பாணியில் வேடிக்கையாக சொல்கிறார்.வேண்டாம் அய்யா எனக்கு அது வராது சரி உன்னை பற்றி எனக்கு கொஞ்சம் அழுத்தமாக சொல். நான் கோட்டைசாமி சாலையில் கோடு வரைபவன் ஐயா. தாங்கள்? என் பெயர் பெருமாள் ரங்கஸ்வாமி… அப்பா சிறு வயதில் புற்று நோயில் இறந்து விட்டார் மிச்சம் நேரம் அம்மாவை பார்த்துக்கொள்வேன்… புரியவில்லை அய்யா… என் அப்பா வடிவத்தில் அம்மாவை கண்டேன் அதை தான் குறிப்பிட்டேன் வேறு ஏதாவது ஞாபகம் வந்தால் கூறுகிறேன்… ஏன் இப்படி கூறுகிறீர்கள்… இல்லை உன்னுடன் அதை பற்றி பேச தயக்கமாக இருக்கிறது அதான் நீ எப்படி இங்கு வந்தாய் உன் ஊரு எது. என் ஊரு மதுரை அங்கு ஒரு ஆஸ்ரமத்தில் தான் வளர்ந்தேன் என்னை பெற்றவர்கள் யார் என்றே எனக்கு தெரியாது ஐயா எப்பவும் வயசு மீறிய பேச்சு என்று திட்டுவார்கள். இப்பொழுது அதனால் பேச தயங்குறாயா? இல்லை ஐயா உங்களிடம் அப்படி தோன்றவில்லை… நீங்கள் பாசமானவர் உண்மையாவா…ஆமாம் ஐயா…ஐயா உங்கள் மூக்கில் இருந்து ரத்தம் சொட்டுகிறது?அப்படியா என்னை மன்னித்துவிடு கோட்டை உன்னை காண தான் வந்தேன். நீ என் மகன்…ஜீப்பில் ஏறும் முன் விஷத்தை கவ்வி விட்டு தான் வந்தேன்… வாழ்க பல்லாயிரம் ஆண்டு

When i read starting paras,I thought this as science fiction

1 Like

No no… I am not good at science fiction… This you can label it as mythological… may be…?