மேல் பூச்சு
என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியாதஅந்தகாரத்தில்
அவள் மவுனத்தில் உறைந்திருந்தாள்
எல்லையற்ற அமைதியில் தன் படுக்கையில் சாய்ந்திருந்தாள்
அவள் யாரைப்பார்த்தும் அழவில்லை யாருடைய அனுதாபத்திற்காகவும்
காத்திருக்கவில்லை யாரிடமும் சிரிக்கவில்லை யாருடைய சிரிப்புக்குக்
கிடமாகவும் தன்னை ஒரு நிலைகுலைந்த காட்சிப்பொருளாகவும்
ஆக்கிக்கொள்ளவில்லை எழுந்து தன் துணிமணிகள் பெட்டியில்
அடைத்துக்கொண்டு வெளியேறினாள்
‘’பார்த்தியாடா ஏதாவது பதில் சொன்னாளா பெட்டியைத் தூக்கிகிட்டு
போறதைப்பாரு என்னவோ நான் சொன்னா கேட்பாள்னு சொன்னியே
உன்னையே அலட்சியப்படுத்திட்டுப் போகிறாள் ‘’ ஜானகி சத்தமிட்டாள்
கணேஷுக்கும் கோபம் தலைக்கு ஏறியது
போய் தடுத்தி நிறுத்தினான் ’’ இதோபார் எங்க அம்மா தங்கைக்கு
எதிரிலேயே என்னை அவமானப் படுத்திட்டு போறியா அம்மா சொன்னது
நிஜம்தான் நீ திமிர் பிடித்தவள் இப்ப சொல்றேன் கேட்டுக்க பணத்தோடு
வந்தா வா இல்லே போயிட்டேஇரு இங்க வராதே ‘’
நடுத்தெருவில் வைத்து அவளது ஆடைகளை கலைவது போன்ற
அவமானத்தில் கொத்தித்துப் போய்த்தான் சொன்னாள்
‘ரொம்ப சந்தோஷம் நான் இனி இங்கு வரதா இல்லே குட்பை ‘’
அதிர்ந்துபோய் நின்றான் கணேஷ் சே இந்த திமிர் பிடித்தவளையா
நான் காதலித்தேன்
ரேவதியும் கிளம்பி விட்டாளேத்தவிர எங்கு போவது என்று குழப்பம் தான்
பெற்றோரை எதிர்த்து வீட்டைவிட்டு வெளியேறி கணேஷை காதல்
திருமணம் செய்து கொணடாள் அவன் வீட்டில் இவள் சம்பளத்தை குறி
வைத்து முதலில் ஒத்துக்கொண்டாலும் ரேவதி கணேஷிடம் தன்
சம்பளத்தில் பாதியை அம்மாவிடம் தான் கொடுப்பேன் என்று உறுதி
வாங்கிக்கொண்டுதான் அவனை திருமணம் செய்து கொண்டாள்
கணேக்ஷின் தாய் ஜானகிக்கு இதில் சம்மதமில்லை
பிள்ளையிடம் சொல்லிப்பார்த்தாள் அவன் ரேவதியிடம் சொல்லபயந்தான்
இப்பொழுது அவன் தங்கைக்குத் திருமணம் செய்ய மாப்பிள்ளைக்கு
ஸ்கூட்டர் வாங்கித்தரவேண்டியிருப்பதால் அவள் சம்பளத்தை இனி
தாயாருக்கு கொடுக்கக்கூடாது என்று ஜானகியும் அவனும் சேர்ந்து
சொன்னது அவளை கோபப்படுத்தியதால் இனி இங்கிருக்க முடியாது என
கிளம்பி விட்டாள்
முதிலில் இருக்க இடம் தேடிக்கொள்ளவேண்டும் என நினைத்துத் தன்
தோழியிடம் போய்ச் சேர்ந்தாள்
‘’வாடி ரேவதி எங்கே பெட்டியும் கையுமா கிளம்பீட்டே எத்தனை வருஷமாச்சு உன்னைப்பார்த்து ?’’
‘’பானு என்னிடம் எதையும் கேட்காதே கொஞ்ச நாளைக்கு இடம் கொடு
நான் அதற்குள் ஒரு வீடு பார்த்துக் கொள்கிறேன் ‘’
‘’என்னடி புதிர் போடுறே விஷயத்தைச்சொல்லு ’’
‘’சரிசரி நான் ஒண்ணும் கேட்கலே நீயா சொல்லும் வரை நீதான் பிடிவாதக்காரியாச்சே ‘’
‘’தாங்க்ஸ்டி ‘’
ஒரு வாரத்தில் வீடு பார்த்துக்கொண்டு புது வீட்டி ற்குப்போய்விட்டாள்
ரேவதி
’’ ஏண்டி இப்பவாவது சொல்லுடி என்ன நடந்தது ?’’
ரேவதி தன் காதல் கதையை அவளிடம் சொன்னாள்
மோதலில் தாண்டி ஆரம்பிச்சது சினிமா மாதிரி எங்க காதலும்
பின் அவரே என்னிடம் மன்னிப்பு கேட்ட்துடன் என்னைத் திருமணம்
செய்து கொள்வதாகவும் சொல்ல எனக்கும் அவரின் ஜெண்டிலான
தோற்றத்தாலும் பழகும் பண்பாலும் சம்மதம் சொன்னாலும் எங்க
இரண்டு வீட்டின் சம்மதமும் கிடைக்காததால் எளிய முறையில்
பதிவுத்திருமணம் செய்து கொண்டோம் என் செய்லால் எங்கப்பா
ஹார்ட் அட்டாக்கில் போய்விட்டார் அம்மா தங்கையை வைத்துக்கொண்டு தனியாளாய் ஆனாலும் அவளுக்கு என்னை
ஏற்றுக்கொள்ள சம்மதமில்லை அதனால் நாங்கள் இருவரும்
தனிக்குடித்தனம் போனோம் ஆனால் கணேஷின் அம்மா எங்கள்
இருவரின் சம்பளப்பணத்தை காணக்குப் பண்ணிவிட்டு எங்களை
ஏற்றுக்கொள்வதாய் சொன்னாள் அதை நம்பி நாங்கள் போனோம்
கொஞ்ச நாள் சுமுகமாக இருந்த மாமியார் மாதம் முடிந்த்தும் என்
சம்பள பணத்தையும்சேர்த்து கேட்டாள் கணேஷ் ஏதோ சொல்லி
சமாளித்தார் தங்கைக்குத்திருமணம் என்றதும் என்பணத்தை
மட்டுமில்லை அம்மாவிடமும் போய் பணம் வாங்கிவரும்படி
டார்ச்சர் கொடுத்தார் ஆனால் என்னிடம் ஒப்பந்தம் செய்து கொண்ட
கணேஷும் அவர் அம்மா பேச்சை கேட்டுக்கிட்டு என்னை வீதியில்
நிறுத்தினார் அதான் நீ என்ன என்னை வாழ வைப்பது? என்வருமானம்
என்னை வாழவைக்கும்னு சொல்லி வந்துட்டேன்
‘’அவர் உன்னைத்தேடி வரலையா “”
வந்திருப்பார் ஆனால் நாந்தான் என்னைத்தேடி வரவேண்டாம் என்னால்
பணம் கொடுக்கமுடியாத சூழ் நிலையால் வேறு வாழ்க்கயைத்தேடி
கொண்டு விட்டேன் இது என் முடிவான தீர்மானம்னு சொல்லிட்டேனே “
‘’ உன் துணிச்சல் யாருக்கும் வராதுடி கொள்கை கொ
:ள்கையின்னு சொன்ன நீ இப்படி ஏமாந்துவிட்டாயேயடி எவனும்
இந்தகாலத்திலும் பணத்துக்காக இல்லையென்று சொன்னாலும்
அவனவன் அம்மா பேச்சைக்கேட்டுத்தானடி டார்ச்சர் கொடுக்கிறார்கள்
காதல் கத்தரிக்காய் என்பதெல்லாம் சும்மதானடி ‘’
‘’ஆமாம் நான் குடியிருக்கிற இந்தவீடு எத்தனை அழகாயிருந்தது
இப்பபார் இந்தவீடு மேல் பூச்செல்லாம் போய் நிற்கிறது அப்படித்தான்
காதலும் கொஞ்ச நாளைக்கு பாலிஷத்தான் இருக்கு ’’
விரக்திய்யொடு சொன்னாள்
‘’உண்மைதாண்டி “என்றாள் தோழியும்
சரஸ்வதிராசேந்திரன்
51 வடக்குரத வீதி
மன்னார் குடி
61400 1
Cell no 9445789388