சுற்றிலும் பசுமையை
சுமந்திடும் கிராமம்
விழிகளுக்கு விருந்தளிக்கும்
*இயற்கையின்* அன்பளிப்பு
நடக்கும் வழியெல்லாம்
தென்னந்தோப்பு–நெடுந்ததூரமாய்
காற்றுடன்
கைக்கோர்க்கும் தென்னங்கீற்று
நடுவே,
வீடுகள் வீற்றிருக்க
இதனிடையே அசராத
தூண்கள் நின்றிருக்க
அன்பினாலான திண்னைப்
பேச்சு நிறைநதிருக்க
என் மனமும்
குளிர்ந்திருக்க வேண்டும்
பாசத்தினாலான
என் கூட்டுக்குடும்பத்தினால்..
அதிகாலை கண்விழிப்பு
வயல்வெளி செழிப்பை
கண்டு பூரிக்க..
கால்கள் இரண்டும்
வரப்புகளை வருடி செல்ல
*மகசூழலை எண்ணாமல் *
-
இயற்கைச்சூழலை எண்ணி*
மனம் நகர்ந்திட…
" என் உள்ளத்தின் ஓசையே –
ஆசையாய் உருவான கரு–
விதை (கரு) முளைத்து.......
கவிதை ஆனது".