Community

அஹம் பிரம்மாஸ்மி

கூட்டத்தில் அனைவரும் கண்களை மூடிக்கொண்டனர்.

சிறிது நேரம் பயிற்சி. பின்பு கேள்வி நேரம்.

பயிற்சி? ஆம். யோகா .

ஒவ்வொருவருக்கும் அன்றே அதில் பாண்டி த்தியம் பெற்று விடவேண்டும் என்ற ஆவல்.

இந்த மனோ பாவத்தைத்தான் பயிற்சி ஆசிரியர் தனக்கு சாதகமாக்கி கொள்கிறார்.

கண் மூடி அமர்ந்தாலும் மனதை ஒரு முக படுத்துவதென்பது…ரொம்ப கஷ்டம் . சும்மா . என்னமாய் அலை பாய்கிறது.

சரி. கேள்விகளை மனதுக்குள் அடுக்கிக்கொள்ளலாம்.

  1. கடவுள் இருக்கிறாரா?

  2. கடந்த யுகங்களில் கடவுள் கடவுளாகவே அனைவருக்கும் பரிச்சயம். தனி உருவ வழிபாடுகளோ, கோவில்களோ இருந்த தாகத்தேரியவில்லை. இரண்டு கடவுள்களை தவிர. சிவனும் விஷ்ணுவும்.

  3. அடியார்களிடம் சர்வ சாதாரணமாக இருந்திருக்கிறார். அவ்வாறெல்லாம் இந்த கலி யுகத்தில் பார்க்கமுடிவதில்லையே?

4 4. கலி யுகம் முடியும் பொழுது, பிரளயம் வரும்பொழுது, வெள்ளை குதிரை மேல் கல்கி அவதாரமாக வருவாராம். யாருக்கு தெரியும்?

  1. ; மக்கள் தங்கள் கஷ்டங்களுக்கு கடவுளிடம் மன்றாடினால் , அதெல்லாம் போன ஜென்மத்து பாவம்" என்று சமாளித்து தப்பித்து கொள்கிறார்;

  2. மனித பிறவியே போன ஜென்மத்தில் புண்ணியம் செய்ததினால் தான் என்று வேதங்களும் சாஸ்திரங்களும் கூறும் பொழுது, எப்படி பாவம் செய்திருக்க முடியும்?

  3. அதனால் தானே முனிவர்களும் தேவர்களும் இனி பிறவா நிலை வேண்டி ஆண்டவனிடம் தவம் இருக்கிறார்கள்?

  4. சரி. மனிதனாக பிறந்து விட்டோம். கடவுளை பற்றி சரியான தெளிவு அளவு கொள் இல்லையே? இறந்தால் தான் கடவுளை காண முடியும் என்ற நிலை. விண்டவர் கண்டிலர்; கண்டவர் விண்டிலர்;

8.கடவுள்களை அவரவர்கள் குறி யீடுகளினால் தான் அறிய முடிகிறது. அதுவும் நாமே படைத்த உருவ சிலைகளில்!!!

  1. ஆன்மா என்கிறார்கள்; அழிவில்லை என்கிறார்கள்; சுயம்பு என்கிறார்கள்; கடவுள்களுக்கும் தண்டனை கடவுள்களே அளி த்துக்கொள்கிறார்கள். எந்த வேறுபாடும் இல்லாமல் ஒரே ஜோதி வடிவில் எந்த குறியீடும் இல்லாமல் வணங்கினால் என்ன?

வேண்டாம். கேள்விகளுக்கு எல்லையே இல்லை. முடிவே இல்லை. சரியான விளக்கம் இல்லாமல் விடை அறிய முற்படுவதும் அறிவீனம். சரி.

வார்த்தைகளை உபயோகிக்காமல் யோசனை பண்ணி பார்க்கலாமா?

எதை பற்றியாவது யோசனை என்றால் அதை பற்றி ஏற்கனவே அறிந்த ஒன்றாக இருக்க வேண்டும்; ம்ஹூம். .

இருப்பதை அறிய வேண்டாம். இல்லாததை பற்றி நினைக்கலாமா?

மீண்டும் இல்லாதை எப்படி நினைத்துக்கொள்ள முடியும். இதிலும் தோல்வி தானா?

கடவுளே, என் முன் சற்று வாருங்கள். உங்களை நான் பார்த்ததில்லை. உருவில்லாத உங்களை பார்த்ததில்லை என்றால் எப்படி உங்களை மனதில் அழைப்பது?
முன் பின் பார்க்காத, புரியாத, புரிய முடியாத கடவுளே … எனக்கு எப்படியாவது உங்களை புரிய வையுங்கள். அன்பிலா, தன தர்மத்திலா, குழந்தையின் சிரிப்பிலா, கோவில்களிலா, இல்லை, ஏற்கனவே அறிந்த ஒன்றாக இல்லாமல் புதியதாக …; எனக்கு தெரியாத வர்ணங்கள் ஜாலம் செய்ய வேண்டும்; உணர்வு மட்டுமே இருத்திக்கொண்டு உணர்வே நானாக உடலிருப்பது தெரியாமல் சுற்றி திரிய …
“போதும் நிறுத்து” ஒரு குரல். “உனக்கு என்ன, கடவுளைத்தானே பார்க்க வேண்டும்? கண் திறந்து பார், புலம்பாதே”

முதுகு வலித்தது. கால் மரத்து விட்டது. கண் திறந்தால் எதிரில் கண்ணாடியில் என் முகம்… பாடி தாடி சவரம் செய்த நிலையில்.

ச்சே. யோகா முதல் வகுப்புக்கு போக தயாராக தாடி ஷேவ் செய்ய சலூனில் நுழைந்ததில் அப்படியே உறக்கம் ஆட்கொண்டு விட்டது போலும்; குரல் சலூன் காரருடயதாக இருக்குமோ?
“நீங்க ஏதாவது சொன்னீங்களா ?” சூழல் நாற்காலியிலிருந்து இறங்கியபடியே கடை காரரை விசாரித்தேன்.
"நீங்க தான் சார் ஏதோ பெரிசா கத்தினீங்க, பயந்து போய்ட்டேன். கத்தி மட்டும் பட்டிருந்தால் ? கடவுள் தான் காப்பாத்தினார் "

ம்ம்ம். கடவுள் அருகில்தான் இருந்திருக்கிறார்.

அனுப்புனர்:

நீலா சந்திரசேகரன்
எ-1 உதயம் அபார்ட்மெண்ட்
10/21 சீனிவாசன் தெரு மந்தைவெளி சென்னை
600 028
(91-9445611412)