காலை 11.30 மணி
வசந்தன் காரில் வேகமாக தன் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தான். அவன் வேண்டாத சாமியில்லை, கடவுளை நம்பாதவன் இன்று இருக்கும் கடவுள்கள் அனைத்தையும் துணைக்கு கூப்பிட்டுக் கொண்டு இருந்தான். இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் செய்தது மிகப்பரிய தவறு என தலையில் அடித்து கொண்டான். அப்போதே அந்த சைக்கோ வை கொன்றுஇருந்தால் இந்த பிரச்சனை வந்து இருக்காது என்று நினைத்தபடியே வண்டியை வேகமாக செலுத்தினான்…
இரண்டு மணி நேரத்திற்கு முன்பு காலை 9.30 மணி
வசந்தன் தனக்கு வந்திருந்த சிறுகதைகளை அலசிக் கொண்டு இருந்தான், அதில் 2.5 கொலைகள் எனும் தலைப்பில் வந்து இருந்த சிறுகதையை எடுத்து படிக்கலானான்…
கதை - 2.5 கொலைகள்
என் அப்பனைப் போல வாழ்ந்துவிட்டு மடிய ஆசை…
என் அப்பன் ஒரு 1.5 கொலைகள் செய்து இருக்கிறார், அவரின் மகன் நான் குறைந்தபட்சம் ஒரு 2.5 கொலைகளாவது செய்துவிட எத்தனிக்கிறேன். அது என்ன அரை என்று யோசனை வேண்டாம், இறுதியில் சொல்கிறேன்…
இந்த கதையை நீங்கள் படிக்க ஆரம்பிக்கும் போது, நான் அவளை கற்பழித்துக் கொண்டு இருப்பேன், அவள் வேறு யாரும் இல்லை என் பக்கத்து வீட்டு பெண், அவள் மீது தீராத மோகம் கொண்டேன். ஒரு நாள் யாரும் இல்லாத நேரத்தில் அவள் வீட்டின் உட்புறம் புகுந்து அவள் குளிப்பதை ரசித்தேன். அதிலிருந்தே அவள் மீது இல்லை அவள் உடல் மீது காதல். மனதுக்கும் மனதுக்கும் காதல் வரும் போது, என் உடம்பிற்க்கும் அவள் உடல் மீது காதல் வரக்கூடாதா ?
அவள் பேரழகியா என்று எல்லாம் எனக்கு தெரியாது, ஆனால் எனக்கு என்னமோ அப்படித்தான் இருந்தது, அவள் பேரழகி. எனக்கு ராதா பிடிக்கும் , பழைய நடிகை ராதா. இவளும் அந்த நடிகை ராதா சாயலில் இருந்தாள், அதுதான் அவள் உடல் மீது நான் காதல் கொண்டதற்கு முதல் காரணம்… என் முதல் கொலையும் அதற்கான் காரணமும் அவள் தான்.
இரண்டாம் கொலையும் அதற்கான் காரணமும் - அவள் வீட்டு நாய், நான் மறைந்து இருந்து அவள் அழகை ரசிக்கும் போது அந்த நாய் தான் என்னை கடித்தது…
கடைசியில் அந்த அரை கொலை என்பது, இன்னொருவரை கொலை செய்ய தூண்டுவது என்று என் அப்பா அடிக்கடி சொல்வார்.
இது கதை அல்ல கடிதம் என்றும் நான் ஒரு எழுத்தாளன் அல்ல என்று எனக்கும் படிக்கும் உங்களும் மட்டுமே தெரிந்தது வசந்தன் சார்… ( பி.கு ) இன் நேரம் எல்லாம் முடிந்து இருக்கும். ஒரு 5 முறையேனும் உங்கள் மனைவியை கற்பழித்து இருப்பேன்…
இப்படிக்கு
உங்களிடம் சைக்கோ
என்று அறை வாங்கிய முட்டாள்…
மதியம் 12.00 மணி
வசந்தன் தன் வீட்டினுள் நுழைந்தான் , உள் இருந்து சிகரெட் நெடி வந்தது, படுக்கை அறையில் தன் மனைவியின் உடைகள் அனைத்தும் கசங்கி கிடந்தது. குளியலறையில் இருந்து சத்தம் வரவே அங்கே ஒடினான்… தன் மனைவி நிர்வாண நிலையில் இறந்து கிடந்தாள் , பால்கனியில் கட்டப்பட்டு இருந்த நாய் குளிர்சாதன பெட்டியில் செத்து கிடந்தது… வீட்டுஹாலில் அமர்ந்தபடி கார்ட்டூன் சேனல் பார்த்துக் கொண்டு இருந்தான் அந்த பக்கத்து வீட்டு சின்ன பையன் சைக்கோ…
வசந்தன் கையில் இருந்த கத்தி அவன் கழுத்தில் இறங்கும் போது, தனது 2.5 கொலைகள் கதையின் இறுதி பக்கததை எழுதி வைத்திருந்தான்… அதில் எனக்கு இன்னொரு தம்பி இருக்கிறான் என்று எழுதி இருந்தது…