Community

மூலிகைப்பூங்கா

அன்று விடுமுறை நாள் என்பதால் அசோசியேஷன் மீட்டிங் செக்ரட்டரி வாட்சப் மெசேஜ் அனுப்பி இருந்தார்! குணாளன் கிளம்பிப் போனார்! அங்கே சில ஆன்டிகள் ஓவர் மேக்கப்பில் அமர்ந்திருந்தனர்!
இந்த மீட்டிங்கில் பார்ப்பதோடு சரி இவர்களை அடிக்கடி சந்திப்பதே அரிது!

சில அங்கிள்ஸ் அவர்களுக்குப்பின்னால் அமர்ந்து கொண்டார்கள். செக்ரட்டரி ஆஜரானார்!

சில வழக்கமான ஃபார்மாலிட்டீசுக்குப்பின் கலந்துரையாடல் துவங்கியது!

இந்த அரபிந்தோ அவென்யூ ஆரம்பித்து பத்து வருடம் ஓடிவிட்டது! நல்லாத்தான் போயிட்டிருக்கு குறை நிறைகளைச்சொல்லலாமென்றார்.
ஒருவர் மூன்றாவது கிராஸ்ல 4/10 ல சாக்கட வெளிய ஓடுது! ஒரே ஸ்மெல் ஆன்ட்டி ஆமோதிக்க, அடச்சது எங்க வீட்ல இல்ல மொனவீட்ல ராம் நாத்கிட்ட கேளுங்க!

ஏன்அவரக்கேக்கணும்?
பின்ன கல்வெச்சி தடுத்திருக்காறே?
அந்த சங்கதி முடிந்தது!

அடுத்து ஃபர்ஸ்டு கிராஸ் வேதநாதன் எழுந்தார்! "சார் என்வீட்ல ஒரேகுப்ப சார்! பின்னாடி வீட்ல மாமர இல கொட்டிக்கிட்டிருக்கு! யார் கூட்டறது??? " பதில் சொல்லுங்க "அவருடைய சகதர்மினி பின்புலம்வாசித்தார்!

அடுத்து தேர்டு கிராஸ் ரவீந்திரன் “ஒரு லைப்ரரி கட்டிட்டா நம்ம வீட்டுப்பெரியவங்க யாரும் ஆட்டோ ஏறிப்போக வேண்டாம்.”!ஃபோர்த் கிராஸ் பாபு "பார்க் எப்ப கட்டுவீங்க?"என்றார்!

“அதான் குணாளன் சார் அழகா பூந்தோட்டமா மாத்தி வெச்சிருக்காரே” என்ற பதிலுக்கு செக்ரட்டரி எகிர ஆரம்பித்தார்! சார் வீட்டுக்கு எதிர்ல குப்பக்கூளமாயிடிச்சி பாம்பு வேற வர ஆரம்பிச்சிடிச்சி! அதான் இந்த ஐடியா!

நீங்க யார் சார் அங்க மரம் வளர்க்க?

சார் நல்லதுதான செஞ்சிருக்கார்? ஓர் இளைஞனின் குரல்! சரிசரி நேரமாச்சி இதோட முடிச்சிக்கலாம்! சார் என் குப்ப மேட்டரு?

சார் அதான் கேட்டனே பார்க் எப்பன்னு?

முதல்ல டிரயினேஜ் அப்புறம்தான் பார்க்கு பீச்செல்லாம்! இப்படி அப்படிப் பேசி மீட்டிங் முடிந்தது!

மறுநாள் ஃபொக்ளிங்க் வர “ஹைய்யா ஜாலியென” குட்டீஸ்கள் கூவ செக்ரட்டரி டூவீலரில் வந்திறங்கினார்.

குணாளனின் பூந்தோட்டம் தரைமட்டமாக்கப்பட ஃபொக்ளிங் ஆயத்தமாக, அங்கிருந்த இளைஞர்கள் அங்கேயேக் கைகோர்த்து நின்று வழிமறித்தனர்!

தம்பிகளா வழிவிடுங்க வேலய பாக்கணும்! நோ நாங்க விடமாட்டோம்!

பார்க்குக்கனு ஒதுக்கின இடத்துல எப்படி மரம் வைக்கலாம்?

வெச்சா என்னசார் தப்பு?

நாங்க இங்க குடி வந்து பத்து வருஷமாச்சி இதுவர பார்க்குக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நீங்க இப்படிப்பேசறது ஆச்சர்யமாயிருக்கு!

தவிர குணாளன் அங்கிள் காம்பவுண்ட சுத்திதான் மரம் வளர்த்திருக்கார். எல்லாம் மூலிகை! நுணா வேம்பு யூக்கலிப்டஸ் இப்படித்தான் வெச்சிருக்கார்.

எல்லாரும் ஆவிபிடிக்கத் தழை வாங்கிட்டுப்போறாங்க! தவிர துளசி, கற்பூரவல்லி,வெற்றிலை,கரிசிலாங்கண்ணி, தூதுவேளைன்னு எல்லாம் பயனுள்ளதா வெச்சிருக்கார்! பச்சிளங் குழந்தைகளுக்கு சாறு ஊத்த எல்லாம் தழை வாங்கிட்டுப் போறாங்க! என்றான் ரித்விக்!

அவர் உங்கக்கிட்ட பர்மிஷன் வாங்காம செஞ்சதுக்கு தண்டனையா அவருக்கு ஃபைன் போடுங்க! பட் இப்படிப்பட்ட இடத்த பராமரிக்கற பொறுப்ப அவருக்குத்தாங்க!

பார்க் நாங்க கட்டறதுக்கு உதவறோம் என்ற இளைஞர்களைப்பார்த்து செக்ரட்டரி பேசாமல் போனார்!
போறப்போக்கப்பாத்தா இவன் நம்ம பதவிக்கு ஒல வெச்சிடப் போறான்!

'ஃபொக்ளிங்’காரரிடம் வந்ததே வந்துட்டீங்க மண்ணடிச்சிட்டுப்போங்க என்றார்! “குணாளன் அங்கிளுக்கு எல்லாரும் ஒரு ஓ போடுங்க!” ஓ ஹோ! கட்டீஸ் பட்டுமன்றி அனைவரும் கூவினர். -சரளா ஞானசேகரன் கடலூர்.

1 Like

ஒவ்வொரு பெயரும் பொருத்தமாக உள்ளது… :sweat_smile:

Azhagaana kadhai… thayiriyamaana kadhai… yadharthamaagavum irundhadhu… nandri…