Community

நன்றி மறப்பது

                  நன்றி மறப்பது... 

“நேரமாகி விட்டது”,என்று கூறியவாரே தன் சட்டைப் பையிலிருந்து இருநூறு ரூபாய் எடுத்து அஞ்சரைப்பெட்டியில் வைத்து விட்டு வாசல் நோக்கி நகர்ந்தார் நாராயணன். “இன்று சிற்றுண்டி வேண்டாம், நான் அலுவலகம் செல்லும் வழியில் பழரசம் குடித்துக் கொள்வேன்” என்றான் நாராயணன் வளர்த்த மாங்கன்று. புகுந்த வீட்டில் மூன்றாம்நாள் ஆயிற்றே, கோபம் கொள்ளாமல், ஏன்? என்று மட்டும் கேட்டால் பிரியா. “இப்போது நேரமாகி விட்டது”…,செல்லும் வழியில் குடித்தால் நேரம் ஆகாதோ?,கோபித்துக் கொண்டாள் அவள். “அர்ஜூன்,டிப்பன் பாக்ஸில் வைத்து தரவா? " அம்மா விஜயாவின் ஆறுதல் கேள்வி ஒளித்தது. தனக்கு, தன் மனைவி ஒரு மணி நேரமாக வைத்த புளி குழம்பு பிடிக்காது என்று அம்மா சொல்ல மாட்டாரா? என அவன் திகைத்திருந்த வேளையில் தன் தாயின் கேள்வி ஒளித்தது. பதில் பேசத் தெரியாமல் நின்றவன் தன் அப்பாவிடம் யாரோ பேசும் சத்தம் கேட்டது,அதைக் கேட்க வந்தவனாய் தன் அலுவலகப் பையை எடுத்துக் கொண்டு வெளியேறினான் அவன். எங்கேயோ பார்த்த முகமொன்று தன் அப்பாவிடம் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டான். வந்தவரோ இவனை நலம் விசாரித்து விட்டு, நாராயனனின் கையில் இருந்து வண்டி சாவியை வாங்கினார்.பின்பு வண்டியை எடுத்து விட்டுச் சென்றார். இதனைக் கண்டு,” என்னப்பா இது" என்று அவரைக் கடிந்து கொண்டான் இவன். “நீ செல்லும் வழியில் என்னை இறக்கிவிட்டால் போதும்.” “எனக்கு இப்பொழுதே நேரமாகி விட்டது” அர்ஜூன்,தன் புருவத்தை உயர்த்திக் கொண்டான். நேரத்தைப் புரிந்து கொண்ட தந்தை, நான் நடந்து கொள்வேன், எனக்கு நேரம் கடக்க வில்லை என்றார். “உங்களுக்கு மட்டும் உலகம் சுழலவில்லையோ? , ஏன் அவரிடம் வண்டியைக் கொடுத்து விட்டீர்?” . "அவரின் வாகனம் பழுதாகி விட்டதாம், முக்கியமான வேலை என்றார். அனைத்திற்கும் மேல் அவர் என் உயிரை காப்பாற்றியவர், நீ உன் வேலையைப் பார், எனக்கு வழி தெரியும், நான் என் தோழன் ஒருவனின் வண்டியில் செல்கிறேன், பார்த்து பொருமையாக போ! " எப்போதும் போல் இறுதியில் அதே வார்த்தை, அப்பாவின் குரலில். கோபத்திலும் அமைதி பாம்பு போல் சென்றான் அவன். சாலை, சிக்னலில் ஸ்தம்பித்துப் போய் நின்றது. தன் ஹெல்மெட்டை கழட்டிய அவன், தன் அலைபேசியைத் தேடினான், அப்பாவிடம் நிலமையைக் கூற… அப்போது தான் அவன் கவனத்திற்கு வந்தது, தன் தந்தையிடம் வண்டியை வாங்கிய நபர் தன் வலதுபுரக் கண்ணாடியின் விழியில் தெரிகிறாரே என்று. முக்கியமான வேலை என்றார்கள், அவர் இங்கு சாலையில் வேலை பார்க்கும் நபரோடு பேசிக் கொண்டு நிற்கிறாரே, இது தான் உயிரைக் காப்பாற்றியவன் என்று உதவி செய்தாரா அவர், தனக்குள்ளேயே கடிந்து கொண்டான். இன்று மாலை அப்பா வரட்டும் இந்த போட்டோவைக் காண்பிப்போம் என்று எடுத்து வைத்துக் கொண்டான். ஆனால் அப்பாவின் உயிரை இவர் ஏன் காப்பாற்ற வேண்டும்? அப்பா அப்படித் தானே நம்மிடம் சொன்னார்? தன் மனது குழம்புவதை புரிந்து கொண்டான் அவன். பின் வண்டியின் ஹாரன், சத்தம் எழுப்ப, நிஜத்திற்கு வந்தவனாய் இதோ, இதோ, என்று கூறி விட்டு வண்டியை நகர்தினான். எப்படியும் அப்பாவிடம் இன்று கேட்டு விட வேண்டும், என்னிடம் எதையோ கூறி மறைக்கின்றார் அவர். வேலை அனைத்தையும் சிட்டாய் பறந்து முடித்தான். மாலை சூரியன் அவனை வீட்டிற்குள் வரவேற்றது. தன் அப்பாவின் வண்டியைப் பார்த்தான், காணவில்லை, மேலோங்கியது கோபம்.
அவரை நம்பி ஏமந்து விட்டார் இவர், அப்பாவின் காலணியின் அருகில் தன் ஷுவை சுழட்டி வைத்தான். கோபம் கொண்ட சிப்பாய் போல் தன் அறைக்குச் சென்றான். குளித்து விட்டு வந்து தன் அப்பாவைத் தேடினான். காபி அருந்திக் கொண்டு இருந்தார். “அவரை எப்படி உங்களுக்குத் தெரியும்? இன்று அவர் என்ன செய்துகொண்டிருந்தார் தெரியுமா? நம் வாகனத்தை வேறு யாருக்கோ கொடுத்து விட்டார் போலும்.நானே பார்த்தேன்” தன் செல்பேசியை எடுத்து நடந்தவற்றை தான் நினைத்தவாறு கூறினான் அவன். "அவர் ஏமாத்துக்காரர் அவருக்காக நீங்கள் என்னை கடிந்து கொண்டீர், இப்போது புரிந்து கொள்ளுங்கள், அவரை வர சொல்லி வண்டியை வாங்குங்கள் "என்றான். “எனக்குத் தெரியும்” என்றார் அவர். கோபம் கொண்டு அவரை எதிர்த்துப் பேச ஆரம்பித்ததான் அர்ஜூன். “அவரைப் பற்றி உனக்குத் தெரியவில்லை, தேவையற்றுப் பேசுவதை நிறுத்தி விட்டு உள்ளே செல், திரும்பவும் தவறை தைரியமாக பேசாதே” என்றார் அப்பா. "பிள்ளை சொல்வதில் நம்பிக்கை இல்லையா? ", “என் பிள்ளை அறிவியல் அறிந்தவன், ஆட்களை அல்ல” மேலோங்கியது அப்பாவின் குரல். மனைவி, சத்தம் கேட்டு வந்தாள். பூஜை அறையில் இருந்த அம்மா, சொல்ல நினைத்ததை எல்லாம் சாமியிடம் சொல்லிக் கொண்டு இருந்தார். மனைவியைக் கண்டதும் அன்பின் அடியவனாய், அடைக்கலத்தை சீராக்க அமைதியாய் நாற்காலியில் அமர்ந்தான். சிறிய அமைதிக்குப் பின்பு, நாராயணன் "நீ பதிமூன்று வயதில் ஓட்டப்பந்தயத்தில் வாங்கிய பதக்கங்களின் எண்ணிக்கையை சொல்ல முடியுமா? ", பதிலை எதிர்பார்த்து கேள்வியை கேட்டார் அவர்."சிறு வயதில் நடப்பது நினைவில் இருக்காது என்று கேள்விப்படவில்லையா நீங்கள்? " அது நாங்கள் உன் மகிழ்ச்சிக்காக சொன்ன பொய்களில் ஒன்று. "அப்படி என்றால்? "
"உன் பதினான்காம் அகவையின் அந்நாளில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தன. நேரு விளையாட்டு அரங்கில் காலை பதினொரு மணி அளவில் உயர்வாக ஒளித்த சத்தம்,"அர்ஜூன் ".வானம் பாய்ந்த அந்த தோட்டா சத்தம், இன்றும் நினைவில் உள்ளது. என்றும் போல் நீ முதலிடம் பெற்றாய். என் முகம் பெருமிதம் கொண்டு, கை தட்டின. " ஆனால் இவை எல்லாம்… குறுக்கிட்டது அர்ஜூன் குரல். அவர் சிரித்துக் கொண்டே, “அன்று நீ ஆசைப்பட்டவாறு வண்டியில் உன் நண்பர்களுடன் செல்ல அனுமதித்தேன். நடந்த விபத்தில், உன் ரத்த அனுக்களை எல்லாம் சாலையில் தெரிக்க விட்டாய், அருகில் இருந்த கம்பி தாக்கியதில் உன் இடது கண் பார்வை இழந்து விட்டதாய் கூறினார்கள். கண்கள் வேண்டாம் பிள்ளை வேண்டும் எனக் கெஞ்சினோம். அழுது ஆராமல் இருந்த உன் அம்மா, உனக்கு ரத்தம் கொடுத்தாள். தேற்றி விட ஆள் இல்லாமல் தவித்தேன், பழியையும் சுமந்து கொண்டு. பாசாங்கு காட்டக் கூட சொந்தங்கள் இல்லை. இன்று வந்தாரல்ல, நீ கூறும் ஏமாற்றுக்காரர் அவர் தன் தந்தையின் பார்வையை தாமாக முன்வந்து தானம் செய்தார். அன்று தான் நாங்கள் பிச்சைக்காரர்களாக உணர்ந்தோம்.நீ நினைவு திரும்பி பார்க்கும் போது குறையுடன் இருக்கக் கூடாது என்று …கோமாவில் இருந்து திரும்பி விட்டாய். சாலையின் பயங்கரம் கண்டு நானும் திருந்தி விட்டேன். அன்றிலிருந்து ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதில்லை” .கசிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்தான் அர்ஜூன். அப்பா உயிர் என்றாரே அது நான் தானா? , யோசித்துக் கொண்டே விடை பெற்றுக் கொண்டான். “பாடம் புகட்டி விட்டாய் அர்ஜூனா, எனக்கு” இறுதியில் அப்பாவின் சமரச வார்த்தைகள்.
–ஒரு நொடி கோபத்தின் பின்பும் , பல வருட மவுணத்தின் முன்பும் பறைசாற்றப்படாத பாடங்கள் உள்ளன மானுடனே!.
பொறுமையைக் கையாள்வோம்!!
A short story for the contest of july 2020
By:
R. Shanmuga priya,
Student,
National college.
For further details contact:
priyaragavan007@gmail.com

4 Likes