Community

தென்றல் வந்து தீண்டும் போது...!

"காதலின்றி யாரும் இல்லை;
காதலின்றி எதுவும் இல்லை"என்று தீர்மானமான நம்பிக்கை கொண்டவள். அவள் பெயர் தென்றல். இளையராஜாவின் இசை, மணிரத்தினம் படத்தின் வசனங்கள், கௌதம் மேனனின் படங்கள் etc… காதலும், காதல் சார்ந்தவையும்; விரும்பும் அவள், தன் திருமணத்தை மட்டும், பெற்றோர் எண்ணம் போல் நடத்திக்கொள்ள விரும்பினாள். அதுவும் ஒருவித சுவாரசியம் தானே, பயமின்றி காதலிக்க, வீட்டில் சொல்லிவிட்டு வெளியே சென்று வருவது, நிச்சயதார்த்தம் அன்று அனைவர் முன்னிலையிலும் தனக்கு கணவனாக வரப் போகின்றவர் லவ் ப்ரொபோஸ் செய்வது என்று பல கனவுகளுடன் இருந்த அவளுக்கு, தன் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னால் கூட எந்த சுவாரசியத்
தருணமும், அவள் எதிர்பார்த்தபடி நிகழவில்லை என்பது ஏமாற்றம் தான்.

திருமணத்திற்குப் பின் நடக்கக்கூடும், என அவள் எதிர்பார்த்த காதல் தருணங்கள் இனி எப்பொழுதும் நடக்கப்போவதில்லை என்று பயந்தாள். காதலின்றி எதுவும் இல்லை என்று நினைக்கும் அவளுக்கு, காதல் என்றாலே என்னவென்று தெரியாத ஒரு நபருடன் எப்படி வாழ்வது, என்ற பயம் அவள் மனதை துளைக்க தொடங்கியது. பெண் பார்த்து நிச்சயம் முடிந்து இன்றோடு 96 நாட்கள் முடிந்த பின்னும், அவன் ஒருமுறை கூட நேரிலோ, தொலைபேசியிலோ பேசியதில்லை. குறைந்தபட்சம் குறுஞ்செய்தி கூட அவனிடமிருந்து வந்ததில்லை.
திருமணத்திற்கு முன்பு தன் விருப்பம் அறியாதவனா, பின்பு தெரிந்து கொள்ள முற்படப் போகின்றான். புரிந்து கொண்டு தன்னையும், தன் மனதையும் பக்குவப்படுத்திக் கொண்டால் தென்றல். இன்று காலை 4.30 மணிக்கு முகூர்த்தம், சடங்குகள் முடிந்த பின் இரவு 9.30 மணிக்கு மேல் சாந்தி முகூர்த்தம். மஞ்சள் நிற பட்டுப்புடவையில் தங்கச்சிலை போல் ஜொலிக்க, அவளுக்கு அலங்காரம் செய்து அறைக்குள் தள்ளிக் கதவுகள் அடைக்கப்பட்டது. எத்தனை இரவுகள் இந்தத் தருணத்தைக் கற்பனை செய்து
வைத்திருப்பாள், அன்று நடந்தது அவள் கனவில் கூட நினைத்துப் பார்க்காத ஒரு தருணம். கணவன் தான் ஆனால் ஒரு புதிய நபருடன் இருப்பதாகவே உணர்ந்தாள். வெட்கத்திற்கு மாறாக அவள் பதட்டப்பட்டாள்.

அந்த அறையில் அவளுக்கு ஆச்சரியம் தரக்கூடிய ஒரே விஷயம், அவன் பச்சை நிற சட்டை அணிந்திருந்தான். சொல்ல
மறந்துவிட்டேன், அவளுக்கு green தான் favourite கலர். தற்செயலாகக் கூட அவன் அந்தக் கலர் சட்டையைப் போட்டிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டே கட்டிலில் தென்றல் அமர்ந்தாள். “கதவுத் தாள் போட்டுட்டியா” இளமாறன் பேசிய முதல் வார்த்தை இதற்கு முன் ஓரிரு முறை அவன் பேசிக்
கேட்டிருக்கின்றாள், ஆனால் தன்னிடம் இதுவே முதல் முறை. பதற்றத்தை மறைத்துக் கொண்டு ம்ம்… என்றாள். ஐந்து நிமிட மௌனத்திற்குப் பிறகு அவள் கவனத்தை ஈர்க்க கனைப்பது போல் சத்தம் எழுப்பிப் பின் பேசத் தொடங்கினான். nervousசா இருக்கியா? என்றான் பதில் ஏதும் வராததால் சாப்டியா? என்று அடுத்த கேள்வி எழுப்பினான், அதற்கும் அவள் ம்ம்… என்று மீண்டும் பதிலளித்தாள். நீ எதுவும் பேச நினைக்கிறாயா? என்று அவன் கேட்க, மறுபடியும் மௌனமே பதில் ஆனது. பின்பு உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா? என்று கேட்டவாறு அவள் கைகளைப் பிடித்தான். தென்றல் நெளிந்தாள். உனக்குப் பயமா இருந்தா… என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் தருணம் அவள் மௌனம் கலைத்து, எனக்கு இப்போ comfortableல இல்ல force பண்ண வேண்டாம். ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க time வேணும். " it should happen between us" புரியுதா உங்களுக்கென்று தென்றல் படப் படவென வெடிக்க, இளமாறன் அவளைப் பிரம்மித்து பார்த்தபடி இருந்தான். நொடி நிதானத்திற்கு பிறகு இதத்தான் நானும் சொல்ல நினைச்சேன். தென்றல் அந்த light off பண்ணிட்டு படுத்துக்கோ என்று இளமாறன் கூற, அவள் பதட்டம் குறைந்தது. ச்சி… அவசரப்பட்டு இப்படி பேசி விட்டோமே என்று நினைத்துக் கொண்டே களைப்பில் தூங்கி விட்டாள்.

மறுநாள் காலையில் அவள் பக்கத்தில் இளமாறனை காணவில்லை, எழுந்து சென்று பார்த்தால் ஹால் முழுக்க டிகிரி காப்பி நறுமணம் சமையலறையை நோக்கி அவளை நகர்த்தி சென்றது. அவன் தான், பூனைபோல் எதையோ உருட்டிக்கொண்டிருந்தான், அவளைப் பார்த்ததும் எழுந்துட்டியா. உனக்காகத் தான் காபி போடலாம்னு வந்தேன் சக்கர டப்பாவை தேடிக்கிட்டு இருந்தேன் என்று பேசிக்கொண்டே காப்பிக் குவளையை தென்றலிடம் நீட்டினான். அவன் முதல்முறையாகப் போட்ட காப்பியின் சுவையை அறிய தென்றலின் முகத்தை உற்று நோக்கிக் கொண்டிருக்க, தென்றல் முகத்தில் எந்த reactionனும் காட்டாமல், thank you என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். பின் தென்றல் குளித்துவிட்டு ஹாலுக்கு வர, இளமாறன் முகத்தில் ஒரு ஏமாற்றம். என்ன ஆச்சு, ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க? என்று தென்றல் கேட்க, கட்டில் மேல ஒரு saree வச்சிருந்தேன், அந்தக் கலர் உனக்குப் பிடிக்கும்னு நினைச்சேன், பிடிக்கலையா? என்றான். sareeயா நான் பாக்கலையே என்று கூறிக்கொண்டே, அவள் அறைக்குள் நுழைந்தாள். green and golden colour border silk saree. அப்போ நேத்து நமக்குப் பிடிக்கும்னு தான் அந்த shirt போட்டு இருந்தாரோ, என் favourite colour அவருக்கு எப்படி தெரிஞ்சது, அப்புறம் பில்டர் காபி… அப்பொழுது தான் அவளுக்கு ஞாபகம் வந்தது நேற்று அறை முழுக்க அவளுக்குப் பிடித்த சம்பங்கி பூவால் அலங்கரித்து இருந்தது, அப்புறம் காஜு கத்லி சுவிட் என அறை முழுக்க அவளுக்குப் பிடித்த விஷயங்களால் நிறைந்திருந்தும், பதற்றம் தான் தென்றலின் கண்களை மறைத்து விட்டது.
தென்றல் அறைக்குள் நுழையும்பொழுது, இளமாறன் தன் முதுகுக்குப் பின்னால் எதையோ மறைத்ததை நினை உற்றாள். இந்தப் புடவைதான் மறைத்தானோ என்னவோ. தென்றலுக்கு கொடுக்க நினைத்த பரிசையும், தன் மனசையும் மறைத்துக் கொண்டு உறங்கச் சென்றிருக்கின்றான் இளமாறன்.

இப்படியே ஒரு வாரம் சென்றது, அன்று தென்றல் green saree உடுத்தி இருந்தாள். ஆம், அவன் பரிசளித்த புடவை தான். தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பிக் குளிச்சிட்டு வாங்க இளா என்றாள். அவன் குளித்து விட்டு வெளியே வர, அதே போல் கட்டிலின் மேல் ஒரு மரூன் கலர் shirt மற்றும் வேட்டியும் happy birthday வாழ்த்து அட்டையுடன் இருந்தது. அந்த உடையை அணிந்து கொண்டு ஹாலுக்கு வர, இவள் கோவிலுக்குச் சென்று வரத் தயாராக இருந்தாள். கோவில் பூஜைக்குப் பின் ஒரு படம் பார்த்தனர், பின்பு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினர்.

வீடு திறந்து இருந்தது தென்றல் உள்ளே செல்லப் பயந்தாள். இளமாறன் முன்னே செல்ல அவள் தொடர்ந்தாள், happy birthday என்று கூச்சலிட்டபடி அவன் குடும்பத்தினரும், நண்பர்களும் ஒரு அறையிலிருந்து கேக்கோடு வந்தனர். அம்மா, மாமா வீட்ல இருந்து நாளைக்கு தான் வருவதா சொன்னீங்க என்று இளமாறன் ஆச்சரியத்துடன் கேட்க, சர்ப்ரைஸ் என்று எல்லோரும் சிரிக்க, நண்பன் ஒருவன் என்னடா மச்சான், நீ எதுவும் பிளானில் இருந்தியா, நாங்க எதுவும் சொதப்பி விட்டோமா தங்கச்சி என்று கேட்க, சிரித்துக்கொண்டே ஐயோ அண்ணா, அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்லிக்கொண்டே, தென்றல் அடுப்பங்கரையை நோக்கி நகர்ந்தாள்.

அங்கு இளமாறனின் அம்மா கற்பகமும், தங்கை வெண்பாவும் கேக்கை எல்லோருக்கும் கொடுக்கத் தயார் செய்து கொண்டிருந்தனர். தென்றல் ஜூஸ் ஊற்ற, கிளாசை எடுத்துக்கொண்டிருந்தாள். அப்பொழுது கற்பகம் “என்னம்மா தென்றல், ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தீங்களா?” என்று கேட்கத் தென்றல் பதில் சொல்வதற்குள் முந்திக்கொண்டு அவள் நாத்தனார் “என்னம்மா கேள்வி இது, அவங்க கட்டியிருக்கிற புடவையைப் பார்த்தாலே தெரியலையா, அண்ணன் இந்தப் புடவையை வாங்க அந்தச் சேல்ஸ்மேனை என்ன பாடு படுத்தினான்” என்று கூறிவிட்டு சிரித்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறினாள். வெண்பா வெளியே சென்றவுடன் கற்பகம் கம்மிய குரலில் “இன்னும் ஒரு வாரம் கழிச்சு தான் வரலாம்னு நெனச்சேன்”, இதுவரைக்கும் இளமாறனோட ஒரு பிறந்தநாளை கூட நாங்க miss பன்னதில்ல, என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் தென்றல் அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை, infact நீங்க இல்லாதது தான் ஒரு குறையா இருந்துச்சு, இப்பதான் கலகலன்னு இருக்கு என்றாள். கொண்டாட்டம் முடிந்த பின், நண்பர்களை வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்துவிட்டு இளமாறன் வீட்டிற்குள் வந்தான். அவன்
அறைக்குள் சென்றான். அப்பொழுது தென்றல் கண்ணாடி முன் நின்று வளையல்களைக் கழட்டி டிரஸ்ஸிங் டேபிள் மேல் வைக்க, இளமாறன் அவள் பின்னால் வந்து நின்றான்.

கண்ணாடியில் அவன் முகத்தைப் பார்த்தபடி புருவத்தை உயர்த்தி, என்ன என்று செய்கை செய்தால் தென்றல். ஒன்றுமில்லை என்பது போல் அவன் பாவிக்கச் சட்டென்று அவன்புறம் திரும்பித் தென்றல் அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தாள், இளமாறன் ஒன்றும் பேச முடியாமல் மெல்லிய குரலில்
“பா… கண்ணாலேயே கொல்ராலே” என்றான். காதில் விழுந்தும் விழாதது போல் என்ன சொன்னீங்க? என்று தென்றல் கேட்க, ஒன்னுமில்ல பர்த்டே கிப்ட் க்கு thanks, ரொம்ப ஹாப்பியா இருந்தேன். i… எனும்போது, இத்தனை நேரம் தரையைப் பார்த்துக் கொண்டிருந்த அவள் சட்டென்று நிமிர்ந்து பார்க்கப் பேச்சை நிறுத்தித் தடுமாறினான். அவள் ம்ம்… சொல்லுங்க என்றவுடன் i like it very much… என்று கூறி பெருமூச்சு விட்டு அங்கிருந்து நகர்ந்தான். தென்றலும் கண்ணாடியைப் பார்த்துச் சிரித்து விட்டு உறங்கச் சென்றாள்.

நாட்கள் நகர்ந்தது, இருவரும் தயக்கமின்றி நண்பர்கள்போலப் பேசிப் பழகத் தொடங்கி விட்டனர். இருவரது பிடித்த, பிடிக்காத விஷயங்கள் பெரும்பாலும் ஒத்துப் போவதை இந்த ஒரு மாத கால நட்புரையாடலின் போது அறிந்து கொண்டால் தென்றல்.இப்படியிருக்க ஒரு நாள் இளமாறன் 5 மணிக்குத் தென்றலுக்கு call செய்தான். 6 மணிக்குத் தானே ஆபீஸ் முடியும் என்று யோசித்துக் கொண்டே, ஹலோ! என்றால் தென்றல் உடனே அவன் “இப்போ நீ எங்க இருக்க?” என்றான். குழப்பத்துடன், வீட்டில் தான் terraceக்கு, துணி எடுக்க வந்தேன், ஏன்? எதுக்கு கேக்கறீங்க? என்று அவள் கேட்பதற்குள் சூப்பர் நீ கீழ போகாத 30 minல அங்க இருப்பேன் என்று கூறிவிட்டு callஐ கட் செய்துவிட்டான்.
மறுபடியும் அவள் செல் சத்தமிட யார் என்று பார்த்தால் தென்றலின் சித்தி. அவள்
அம்மாவிற்கு அடுத்து தென்றல் அதிக நேரம் செலவிட விரும்பும் ஒரு நபர். தினமும் ஒரு மணி நேரமாவது பேசி விடுவார்கள், அப்படி என்ன தான் பேசுவீர்கள், என்று யார் கேட்டாலும் அது எங்களுக்குள்ள எவ்வளவோ இருக்கும், என்பது தான் பதிலாக இருக்கும். இளமாறன் வரும் வரை சித்தியுடன் பேசுவோம் என்று பேசத் தொடங்கினாள், பின் சித்தியின் மகள் அழத் தொடங்கவே callஐ கட் செய்தாள். இப்பொழுது மணி ஐந்து நாற்பத்தி ஐந்து. 45 நிமிடம் அப்படி என்ன தான் பேசினார்கள் என்றால், நமக்கும் அதே பதில் தான். தன் காதல் கதையைக் கூட வெளிப்படையாகச் சொல்லி விடுவாள், ஆனால் சித்தியுடன் ஆன பேச்சு சிதம்பர ரகசியம் தான்.

இவ்வளவு நேரமாகியும் இளமாறன் வராததால், கீழே செல்ல terrace gateஐ திறந்தாள். படியில் யாரோ ஓடி வரும் சத்தம். பார்த்தால் அவன் தான், கையில் எதோ கவர். "நான் தான் வரேன்னு சொன்னேன்ல, trafficக் அதான் கொஞ்சம் லேட்டாயிடுச்சு "என்று மூச்சு வாங்க பேசிக் கொண்டு, அவள் அருகில் வந்து நின்றான். Hey just relax, லேட் ஆனதால, நீங்க வந்ததுக்கு அப்புறம் மேல வரலாம்னு நெனச்சேன். கீழே தேட மாட்டாங்களா? என்று தென்றல் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, “காரியத்தைக் கேடுத்திருப்பாள் போல” என்று நினைத்துக் கொண்டே மெல்ல சுவற்றில் சாய்ந்தான் இளமாறன். அது சரி கையில் என்ன கவர் என்று வாங்கினால், உள்ளே KFC சிக்கன், dominos பிட்சா இருந்தது ஆச்சரியம் தாங்காமல் என்ன சொல்லாம, கொள்ளாம வாங்கிட்டு வந்திருக்கீங்க சரி, இத தூக்கிட்டு ஏன் மேல வந்தீங்க; கீழ எல்லாரும் ஷேர் பண்ணி சாப்பிட்டு இருக்கல்லாமே என்று தென்றல் சொல்ல, ஹேய், அவங்களுக்கெல்லாம் வாங்கி கீழேயே கொடுத்துட்டேன், நாம வர லேட் ஆகும்னு வெண்பா கிட்ட சொல்லிட்டு தான் வந்து இருக்கேன் என்று இளமாறன் கூறி முடிக்கத் தென்றல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள், ஏதும் பேசமல்.

இளமாறன் பேச்சு தொடர்ந்தான். “எனக்கு எங்க வீட்டிலேயே புடிச்ச இடம் எது தெரியுமா? இந்த வாட்டர் டேங்க் தான். கல்யாணத்துக்கு முன்னாடி அடிக்கடி இங்க தான் இருப்பேன். அப்பத் தோணும், மனசுக்கு பிடிச்சவங்க கூட இங்க ஒரு நாள் சாப்பிடனும்னு ஆனா, இப்ப தான் சான்ஸ் கிடைச்சுது.” அம்மாக்கு veg வாங்கினேன், நீ இன்னைக்கு non- veg சாப்பிடுவல, அம்மா கேட்டா நீயும் veg தான் சாப்பிட்டேன் சொல்லிடு என்று பேசிக்கொண்டே டேங்கின் மேல் ஏற ஏணியை எடுத்துப் போட்டுக்கொண்டிருந்தான். அப்போது தென்றலின் எண்ண ஓட்டம் "லவ் ப்ரொபோஸ், கேண்டில் லைட் டின்னர் இது தான் loveனு நினைச்சோம் ஆன, I love you வ இவ்வளவு அழகா, இப்படி கூட ஒருதரால சொல்ல முடியுமா என்று நினைத்த படி அவனைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.

இளமாறன் அவள் சிந்தனையைக் கலைத்து என்ன நீ யோசிச்சிட்டு இருக்க, மேலே ஏறப் பயமா? என்றான். அதெல்லாம் ஒன்னும் இல்லை, என்று சலிப்பாகக் கூறுவது போல் பாவித்துவிட்டுத் தென்றல் மேலே ஏறினாள். இருவரும் ஒரு வழியாகச் செட்டிலாகி சாப்பிடத் தொடங்க, மணி 6.45 வழக்கத்திற்கு மாறாக இன்று அவன் பேச, அவள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். பின்பு இருட்டியது. “நேரம் ஆகிடுச்சு கீழ போலாம் வாங்க இளா” என்று தென்றல் கூற, இரு ஒன்னு தர மறந்துட்டேன், என்று கூறிக் கொண்டே, அவன் சட்டைப் பையில் கையை விட்டு, dairy milk hazelnut சாக்லேட் எடுத்து நீட்டினான்.மேலும், மேலும் தென்றலை அவன் ஆச்சரியத்தில் மூழ்கடித்தான். டைரிமில்க் பிடிக்கும்னு உங்க கிட்ட சொல்லி இருக்கேன், ஆனா இந்த flavour தான் பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும் என்று அவள் ஆச்சரியத்தோடு கேட்க,
அதெல்லாம் சஸ்பென்ஸ், நீ சாக்லேட்டை சாப்பிடு என்றான் இளமாறன்.

எங்கோ தூரத்தில் இசைந்து கொண்டிருந்த இளையராஜாவின் பாடலை ரசித்தபடி, அவள் சாக்லெட்டை பிரித்து ருசித்துக்
கொண்டிருந்தாள். காற்று தென்றலை இலகுவாக வருடிச் செல்ல, அவள் பார்வை வானை நோக்கிப் பாய்ந்தது. பௌர்ணமி நிலவை அவள் ரசித்தாள், நிலவொளியில் இவள் அழகை அவன் ரசித்தான். பௌர்ணமி நிலா ரொம்ப அழகா இருக்குல்ல? என்று தென்றல் கூற, ஆமாம், என்று அவன் குரல் மிக அருகில் மெல்ல ஒலித்தது. அனலாய் அவன் மூச்சு காற்று, அவள் கண்ணம் தீண்ட, நாணுகிறாள் தென்றல். மெல்லிய குரலில் என்ன? என்று அவள் கேட்க, அவள் உதட்டில் கரைந்திருக்கும் சாக்லேட்டை துடைத்தான். ஓ… சாக்லேட் ஒட்டி இருக்கா என்று தென்றல் கேட்க, இளமாறன் இரண்டு நொடி மௌனித்தான்.

தென்றல்… நீ ரொம்ப அழகா இருக்க, இத உன்கிட்ட சொல்ல 33 நாளா நான் காத்துட்டு இருக்கேன். உன் கண்ணு எனக்குப் புரியாத ஏதோ என்கிட்ட சொல்லிக்கிட்டே இருக்கு. நான் சரியா புரிஞ்சுகிட்டேனானு தெரியல என்று இளமாறன் பேசிக்கொண்டிருக்கும் போது, தென்றல் அவன் உதட்டில் தன் இதழை ஒரு நொடி ஒற்றி எடுத்தாள். “நூலளவு
இடைவெளியில், இரு இதழும் போர்முனையில்” இளமாறன் தென்றலை இழுத்து அணைத்து முத்தமிட, எங்கோ ஒலித்துக்கொண்டிருக்கும் “தென்றல் வந்து தீண்டும் போது” பாடல் அந்தத் தருணத்திற்கு உயிர் ஊட்டியது.

சில நிமிடங்கள் கழித்து அவளுக்கு மூச்சு வாங்கும், என நினைத்து இளமாறன் தன் பிடியை தளர்த்தினான். கண்களை மூடியபடி சிலையாய் உறைந்து நின்ற தென்றல், ஐந்து நொடி கழித்தே அதை உணர்ந்தாள், நாணத்தில் நனைந்தாள். சிறிது மௌனத்திற்கு பின் “கீழே தேட போறாங்க போகலாமா?” என்றால் தென்றல். அப்பப்பா, மொட்டாய் இருக்கும் மலர், இமைக்கும் நொடியில் சட்டென்று மலர்வதைப் போல, கீழே போகலாம் என்பதற்கும், கீழே போகலாமா? என்பதற்கும் 30 வினாடியில் எத்தனை, எத்தனை மாற்றங்கள். இருவரும் கீழே செல்ல, அவன் கைகளில் இவள் மேகமாய் தவழ, காதல் அறையினில் நுழைந்தனர். பௌர்ணமி நிலவே வெட்க்கித்து, முகிலிழுத்து முகம் மறைத்தது.

விடியற்காலையில் தென்றலுக்கு முழிப்பு வர, கண் திறந்து பார்த்தால், இளமாறன் தீவிரமான சிந்தனையில் நகத்தைக் கடித்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தான். தென்றல் “என்ன இளா இவ்வளவு சீக்கிரம் உங்களுக்கும் தூக்கம் கலைஞ்சிடிச்சா” என்று கேட்க, நான் தூங்கினால் தானே கலைய என்று இளமாறன் கூற, தூங்கலையா? ஏன் என்று கேட்ட படி கள்ளச் சிரிப்புடன், ஓரப்பார்வை வீசினாள். sorry தென்றல். ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கணும், எல்லாம் அதுவா, நடக்கணும்னு நீ சொன்ன, ஆனா நேத்து நான் கண்ட்ரோல் இல்லாம, நீயும் கண்ட்ரோல் இழக்கும்படி நடந்து கிட்டேன். It just happened at that moment. நான் பிளான் பண்ணி இப்படி பண்ணிட்டேன்னு நினைச்சுடாதே. இனிமே இப்படி நடக்காம, என்று இளமாறன் பேசிக்கொண்டிருக்கும் போதே, அதற்கும் மேல் அடக்க முடியாமல் தென்றல் சிரித்துவிட்டாள்.

இவன் குழப்பத்தோடு ஏன் சிரிக்கிற? என்றான். என் உத்தம புருஷா! முதல் வாரத்திலேயே நான் உன்கிட்ட விழுந்துட்டேன்டா… நீ
வாங்கிக்கொடுத்த புடவையைக் கட்டிட்டு வந்தாலே புரிஞ்சிடும்னு நினைச்சேன், மக்கு… என்று தலையில் கொட்டினாள். நேத்து எல்லாம் புரிஞ்சுதான் நடந்துகிட்டேனு நினைச்சேன், அப்போ எல்லாமே accidentஅ… நான் தான் ஓவரா ஃபீல் பண்ணிட்டேனா… என்று அவள் சலித்துக் கொள்ள, ஏய்! எல்லாமே accidentனு சொல்ல முடியாது, உனக்குப் பிடிக்கும்னு தான் எல்லாம் பண்ண, அப்ப நீ என்ன தப்பா… என்று அவன் கேட்டு முடிப்பதற்குள், தென்றல் அவனைக் கட்டிலில் தள்ளி, முத்தமழை பொழிந்தாள். அழுத்தமான முத்தங்கள், அவள் காதலை நிச்சயம் புரிய செய்திருக்கும். தென்றலின் வாழ்வில் தென்றல் வீசத் தொடங்கியது…

3 Likes

அருமை சகோ … It gives a good feel to read

1 Like

Yerkanave kelvipatta kadhai Pol ulladhu… vaazhthukal

1 Like

1000 muthagaluku piragi 1001vathu mutham salituviduma ? Kaathalum kaathal kathaium apidi dhaan irukum enna naa ninaikndran. Nandri…

1 Like

Super Surya, story super… :relaxed: