Community

வெற்றிக்கு பின் தோல்வி ஏன்..?

“இயற்கை வளம் அனைத்தும் ஆனந்தமாய் நாட்டியம் ஆடி கொண்டிருக்கும் இந்த பொன்னான பூமியில் தோன்றிய அனைத்து உயிரினங்களுக்கும் தனது வாழ்நாளில் வெற்றியும் உண்டு தோல்வியும் உண்டு”!!! ஆனால் ஆரறிவு உடைய மனிதன் மட்டுமே இதனை எண்ணி நேரத்தை வீணடிக்கின்றான். சில மனிதர்கள் கிடைத்திருக்கும் முதல் ஒரு வெற்றியின் மோகத்தால் அடுத்தடுத்து வரும் வாய்ப்பை தவறவிடுகிறார்கள். ஆனால் சிலர் அடைந்திருக்கும் முதல் தோல்வியை எண்ணியே தனது வாழ்வை கழிக்கின்றன.

அதுபோலவே இங்கே என் கற்பனையில் அனைவரின் உணர்வை ஊக்குவிக்கும் ஒரு சிரிய கதை.

சூரியா மற்றும் சுபாஷ் இருவரும் நெருங்கிய உயிர் நண்பர்கள். சூரியாவிற்கு நண்பர்கள் வட்டம் மிகப்பெரியது. வட்டம் ஏனோ பெரியது ஆனால் சுபாஷை தவிர நெருங்கிய நண்பர் எவரும் இல்லை. அவ்வாறு இருக்கையில் ஒரு பெண்ணும் தோழியாக இருந்தாள். சூரியா மற்றும் சுபாஷ் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார்கள்.
சொல்லும் அளவிற்கு சூரியாவிடம் திறமை ஏதும் இல்லை. “நம்மிடம் திறமை இல்லை பின் நம் வாழ்ந்து என்ன பயன்” என்னவென்று எண்ணினான். எனினும் அவ்வப்போது தமிழில் சிறு சிறு கவிதை மற்றும் கதை எழுதுவான்.

மூன்றாண்டு கல்லூரி நாட்க்கள் கழிந்தது. இறுதி வருடம் துவங்கியது,
கல்லூரியில் சூரியாவை பிடிக்காத சிலர் அவனை ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்க வைக்க திட்டம் தீட்டினர். பெண் தோழியாக இருந்த சங்கீதாவும் அதே கல்லூரியில் தான் பயின்று வந்தாள். ஆதலால் சூரியாவையும் சங்கீதாவையும் வைத்து தவறாக பேசி, போலியான படங்களை தயாரித்து கல்லூரி மற்றும் இருவரின் குடும்பத்திற்கு தெரிய வைத்தனர்.

இதனை அறிந்த கல்லூரி நிர்வாகம் சூரியாவை காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அன்று அவனுடைய நண்பன் கல்லூரி வரவில்லை. தன் நண்பன் எழுதிய கதை மற்றும் கவிதைகளை ஒரு எழுத்தாளரிடம் கொடுக்க சென்றுவிட்டான். சூரியாவின் குடும்பத்தினர் நடந்தது அனைத்தும் போலி என்று அறியாமல் அவனை வீட்டை விட்டு வெளியேற செய்தனர்.

காவல் நிலையத்தில் அவனை காவலர்கள் சரமாரியாக தாக்கி அடித்து இனி இது போல் செய்யக்கூடாது என்று கூறி அனுப்பினர். குருதி நிறைந்த உடலோடு காவல் நிலையம் விட்டு நீங்கிய அவன் உண்ண உணவும் தங்க இடம் ஏதுமின்றி கிழிந்த ஆடையுடன் தவித்து கொண்டிருந்தான். உயிர் அவனை விட்டு பிரியாமல் ஊசல் ஆடிக்கொண்டிருந்து.

‘செய்யாத தவறுக்கு எனக்கு ஏன் இந்த நிலை’ என்று கண்ணீர் நிறைந்த கண்களுடனும் மனதில் குருதி கொதித்து கொண்டிருக்கும் வேதனையுடனும் மூன்று நாட்கள் அவ்வாறு திரிந்த அவன், “பருகுவதற்க்கு நீர் கிடைக்காத நிலையில் இருக்கிறேன், இனி நான் வாழ்வதில் பயனில்லை, நாம் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்ளளாம்” என்று முடிவு செய்தான்.

அவனை ஊர் முழுவதும் மூன்று நாட்கள் தேடிய அவனுடைய நண்பன் சுபாஷ், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தன் நண்பனை காபாற்றினான். தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து உணவும் தங்க இடமும் அளித்தான்.

விபரம் அனைத்தையும் அறிந்த பின்னர் சூரியாவிடம் தற்கொலை முயற்சிக்கு காரணம் என்னவென்று கேட்டான் சுபாஷ். அதற்கு அவன் “வாழ்நாளின் இன்று வரை ஏதும் சாதிக்கவில்லை அதற்க்கான திறமையும் என்னிடம் இல்லை, இன்று உலகமே என்னை தூற்றும் நிலையில் இருக்கிறேன், இதற்கு மேல் வாழ்ந்து என்ன பயன் என்று கூறினான்”.

அதற்கு சுபாஷ் அவனிடம் அறிவுரை கூறினான்…
“வாழ்க்கை எனில் அதில் வெற்றியும் தோல்வியும் இருந்தால் மட்டுமே சுவாரசியமாக இருக்கும் இல்லையெனில் சளித்துவிடும். பிரச்சினை அனைத்திற்கும் தற்கொலை தீர்வு அல்ல, இவற்றை தவிற வாழ்வில் எண்ணற்ற விஷயங்கள் உள்ளன”.

“தாயின் கருவறையில் உள்ள கருவை அடைவதற்க்காக ஆயிரக்கணக்கான விந்துகளில் முதலாவதாக வந்ததன் காரணமே இன்று நீ பிறந்திருக்கிறாய். ஒரு வேளை தோல்வி அடைந்திருந்தால் இன்று பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கமாட்டாய். அன்றே வெற்றி பெற்ற நீ பிறகு ஏன் தோல்வியை கண்டு வாழ்க்கையை தியாகம் செய்ய முயற்சித்தாய்” என்று சூரியாவிடம் எடுத்துரைத்தான்.

“உடலுறுப்பு இல்லாத நேரத்தில் வெற்றி பெற்ற நீ இன்று அனைத்தும் பெற்று ஏன் வெற்றியை கண்டு அஞ்சுகிறாய்…?” என்று சூரியாவிடம் கேட்டான்.

காலங்கள் கடத்து சென்றது… இருவரும் ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தார்கள்…

சில நாட்களுக்கு பிறகு அந்த எழுத்தாளர் சூரியா எழுதிய வரிகளை கண்டு வியந்து, அவனை அழைத்து பாராட்டினார். அவன் எழுதிய அனைத்து கதை மற்றும் கவிதைகளை புத்தகமாக வெளியிட்டு வெற்றி விழா நடத்தினார்.
பல்வேறு மடல்களும் பரிசுகளும் சூரியாவை அடைந்தது.
பிறகு அவனை அவன் குடும்பத்தினர்கள் தாங்கள் செய்தது தவறு என்று எண்ணி அவனை ஏற்றுக் கொண்டனர்.

கதையின் நோக்கம்:
நம் வாழ்நாளில் எச்சூழ்நிலையிலும் நம்முடன் இருக்கும் அளவிற்கு ஒரு நண்பன் அவசியம் தேவை. அது ஒன்றே நம்மை பலம்படுத்தும் கருவி.
மற்றொன்று எல்லோரிடமும் திறமை நிச்சயம் உண்டு அவற்றை அனைவரும் தங்கள் விழிகளை திறந்து கண்டுவிட்டால் பின்பு வாழ்க்கை நம் கையில்…!!

3 Likes

Nice super da…

1 Like