Community

பல நாள்... ஒரு கனவு

வயசு 25 ஆச்சு, ஒரு சின்ன குடும்பம், நான் அம்மா அப்பா ஒரு தம்பி செல்ல குட்டி நாய் சுக்கு. அப்பறம் என்னை பிறியாம என் கூடவே இருக்க என் மன அழுத்தம். 25 வயசுல அப்படி என்னனு நீங்க கேக்கலாம். நிறைவேறாதுனு தெரிஞ்ச கனவுகள், ஆனாலும் ஆசை பட மறக்காத மனசு, கூடவே ரொம்ப பெரிய இலகுன மனசு. மத்தவங்க பிரட்சணய தன்னோடதா நினைக்கிற அதிகம் யோசிக்கிற மனசு. இப்படி நிறைய பேருக்கு பழக்க பட்ட வாழ்க்கை தான். அப்படி வாழ்க்கை பிடிக்காம தன் கடமைகளுக்காக தினம் ஓடுற தொழில் நுட்ப நிறுவன தொழிலாளி. இன்னைக்கும் வேளைக்கு போயிட்டு வந்து சப்புடேன். இன்றைய நாள் ஒரு வழியா முடிஞ்சது. மணி இரவு 9 ஆயிடுச்சு, சீக்கிரம் தூங்க போகனும். எனக்கு தூக்கம் ரொம்ப பிடிக்கும். எனக்கு மட்டுமல்ல இந்த நிஜத்தில் இருந்து தப்பிக்க நினைக்கிற, தன்னோட வாழ்க்கை தன் கையில இல்லாதவங்க எல்லாருக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன். நமக்கு பிடிச்ச மாதிரி வாழ்க்கை மாருமானு தெரியாது, ஆன ஆசைபடுற வாழ்க்கை கனவாக வரும்போது ஒரு நிம்மதி கிடைக்கும் பாருங்க. தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் காணல் நீர் கொடுக்குற நம்பிக்கை மாதிரி தான் இந்த கனவுகள். அது கற்பனை தான் உண்மை இல்லனு தெரிஞ்சாலும், ஓட ஓட குறையாத தூரமா வாழ்க்கை தெரியுறப்போ கனவில கிடைக்கிற ரெக்கைக்கு மனசு ஆசைப்பட தான செய்யும்.

ரொம்ப நிம்மதியான தூக்கம், காலைல நிறைவாக எழுந்திறிச்சேன். எப்பவும் போல சிரிச்ச முகத்தோட வேளைக்கு புறப்புட்டேன். என் வாழ்ககையில நான் விரும்புகிற இன்னொன்னு, என் பவித்ரா.

“முன் அந்திசாரல் நீ, முன் ஜென்ம தேடல் நீ… நான் தூங்கும் நேரத்தில் விழி ஓரத்தில் வரும் கனவு நீ” இப்படித்தான் அவள நினைக்கும்போது பாட்டு ஓடும். என் தேவதை அவ.

அவதான் நான் நேரம் தவிராம வேளைக்கு போக காரணம். இன்னைக்கு அவ பிறந்த நாள். என் காதலை சொல்லலாம்னு இருக்கேன் இன்னைக்கு. ரெண்டு பேரும் தினமும் பேசிக்குற நல்ல நண்பர்கள் தான். ஆனால், காதல் சொல்ல போரப்போ பல உணர்வுகள், மகிழ்ச்சி, நெருடல், பயம் இன்னும் எத்தனையோ. காலைல இருந்து போராடி ஒரு வழியா சாய்ந்தரம் கிளம்பும்போது அவ கையில அவள நினைச்சு எழுதுன கவிதைய கொடுத்து கேட்டேன், நான் உன்ன கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். பொருமையா யோசிச்சு ஒரு பதில் சொல்லுனு.

ஒரு வாரம் கண்கள் மட்டும் பேசிட்டு இருந்துச்சு, இப்படி கேட்டு நட்பையும் துளைச்சுடமேனு தோணுச்சு. நானே திரும்ப போயி கேட்டேன். "பேசாம இருக்காத, நான் கேட்டது "னு சொல்லும்போது என்ன நிறுத்தி, ஒரு வாரம் நான் இல்லாம இருந்துடல்லனு கேட்டா. எனக்கு அந்த வார்த்தைகள் தந்தது காதலிக்கிறேன்னு சொல்லிருந்தா கூட கிடைசிருக்குமானு தெறில.

இப்போ கனவ விட கண்கள் பார்த்தத ரசிக்கிற மாதிரி வாழ்க்கை மாருச்சு. கனவுகள் இல்லாத தூக்கம், எதிர்பார்ப்புகள் நிரைய கண் விழிக்கும் காலைனு, எதும் இல்லாம இருந்த என் உலகம் வர்ணங்களா நிரஞ்சுது. தினமும் பொய்யான சிரிப்போட வீட்ட விட்டு கிளம்பும் நான், இப்போ என் அம்மா அப்பாகிட்ட காலைல உட்காந்து கொஞ்ச நேரம் பேசிட்டு, என் நாய் கூட விளையாடிட்டு கிளம்பினேன் தினமும்.

வாழ்க்கைய ரசிக்க வைச்சது எனக்கு கிடைச்ச காதல். ஒரு மாதம் ரொம்ப அழகான நாட்கள், பெத்தவங்க எப்படிதான் கண்டுபிடிக்கராங்களோ. என் அம்மா என்கிட்ட யாரு அந்த பொண்ணுன்னு கேட்டாங்க. பவித்ரா, என் கூட வேளை செய்யுற பொண்ணுமானு சொன்னேன். கூட்டிட்டு வர சொன்னாங்க. அடுத்த ஞாயித்து கிழமையில் கூட்டிட்டு வந்தேன். எங்க அம்மா அப்பா ரெண்டு பேரும் பேசினாங்க, என்ன சேர்துகள. என்னனு தெரியாம மாடில உட்கார்ந்திருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு கீழவாடானு என் அம்மா குரல் கேட்டுச்சு. கீழ போனா, போயி விட்டுட்டு வானு வழியனுப்பி வச்சாங்க.

என்னதான் நடந்ததுனு தெரியாம, தலை பிச்சிக்கிச்சு. பவித்ரா என் காது கிட்ட வந்து ரெண்டு மாசத்துல தயாரா இரு நெறய உதை வாங்குவேனு சொன்னா. அப்படியே வண்டிய ஓரம் கட்டுனேன். எங்க வீட்ல என்ன சொன்னங்கனு புரியாம இருந்த என்கிட்ட “போன வாரம் எங்க வீட்ல நான் பேசினேன். எங்க வீட்ல பச்சை கொடி காமிச்சுடாங்க” அப்படினு சொன்னா.

வாழ்க்கை நாம நினைக்கிற மாதிரி ஒரு நாள் மாறும் தான் போல. பவித்ரா வீட்டுக்கு போயி பேசினேன். அடுத்த வாரமே பேசி திருமண நிச்சியம் பண்ணாங்க. ரெண்டு மாசத்துல கல்யாணம். அந்த மாதங்கள் எப்படி போச்சுன்னு தெரியல. நாளைக்கு விடிஞ்சா கல்யாணம்.

“காதலியின் கரம் பிடிக்க கடவுளாக ஆனேன், என் உலகிற்கு”

அப்படி ஒரு மகிழ்ச்சி. நாளைய நாளை நினைச்சுட்டு தூங்க போனேன்.

கண் விழிக்கும்போது மருத்துவமனையில் இருந்தேன். என்ன சுத்தி அம்மா அப்பா தம்பி எல்லாரும் இருந்தாங்க. என்ன ஆச்சு நான் எப்படி இங்கனு கேட்டேன். மூணு மாசமா நான் கோமால இருந்ததாக சொன்னாங்க. ஒரு நாள் நான் தூங்க போனேன், அடுத்த நாள் எவ்வளவு எழுப்பியும் கண் முழிக்கவே இல்லனு சொன்னாங்க. என்ன பரிசோதனை பன்ன மருத்துவர் மன அழுத்த்தால கோமாக்கு போயுட்டதா சொன்னாரு. எல்லாரும் ரொம்ப சந்தோசமா இருந்தாங்க. எனக்கு இன்னும் ஒரு நாள் நான் கோமால இருந்திருக்கக் கூடாதானு இருந்தது.

அப்போ என்கூட வேளை செய்றவங்க எல்லாம் என்ன பார்க வந்திருந்தாங்க, பவித்ராவும் வந்திருந்தாள். எல்லாரும், உடம்ப பாத்துகோனு சொல்லும்போது, பவித்ரா மட்டும் எதும் பேசல. எல்லாரும் போன பிறகு, என் கிட்ட வந்து திட்டினா. கண்ணா பின்னான்னு திட்டினா. என்ன பிரச்சினை உனக்கு என்கிட்ட சொல்ல வேண்டியது தாணனு கேட்டா. இதற்கு முன்னாடி உள்ளவன்னா சிரிச்சிருப்பேன். இப்ப சொல்லாததுக்கு மன்னிச்சிடு, உன் கிட்ட மட்டும் வாழ்க்கை முழுக்க சொல்ல ஆசைபடுறேன்னு சொன்னேன். என் கைகளை பிடிச்சுட்டு என்ன பார்த்து சொன்னா, உனக்காக இருப்பேன்னு. அப்போ ஒன்னு புரிஞ்சுது கனவு எவ்ளோ பலமானதுனு. இந்த நாள் சொல்ல முடியாம இருந்தத இப்போ சொல்ல வைச்சது, இந்த நீளமான கனவு நான் ஆசைப்படுற வாழ்க்கை எப்படி இருக்கும்னு காட்டி.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினேன். இந்த அனுபவம் நிரைய கொடுத்துச்சு, முக்கியமா மனச பேச கத்து கொடுத்துச்சு. மனசுக்கு தோனுறத வெளிபடுத்த ஆரம்பிச்சேன் எனக்காகவும் என்ன சுத்தி இருக்கவங்களுக்காகவும். இப்போ இந்த மனசு ரொம்ப லேசா இருக்கு. தேவை இல்லாதது எதுவும் சுமக்காம, சந்தோசங்கள் சேர்த்து வைக்க நிரைய இடத்தோட.

பல நாள் தொடர்ந்த அந்த ஒரு கனவு என் வாழ்க்கையில நிஜமாச்சு…ஒருநாள் நாம நினைக்கிற மாதிரி வாழ்க்கை மாறுமானு தெரியல, ஆன நம்மால மாத்திக்க முடியும்…

1 Like

Kadhai Pol illai… aanaal swarasiyamaaga irukiradhu

1 Like

Nalla intresting reading ah irundhuchu

1 Like

நன்றிகள்… மேலும் எழுத முயற்ச்சிக்கின்றேன்

1 Like

நன்றிகள் Prasana… கதை நடை கொண்டு வர முயற்சிக்கிறேன்