Community

என் அப்பாவின் கனவு

எதற்காகனு தெரியாம, நண்பர்கள் கூட பொறியியல் படிச்சுட்டு, ஊர் சுத்துற ஒருவன். தினமும் காலைல எழுந்திருக்கிறதே ஒரு வேளையா இருக்கே, அப்படினு உதிக்குற சூரியனை பாக்காம, நேரா உச்சி பொழுதுக்கு நாள ஆரம்பிக்கிற சோம்பேறி. அதுல என்ன பெருமை இருக்குனு நீங்க கேட்கலாம். உழைச்சு சம்பாதிக்கிற வரை தினமும் ஒரு வேளை சோற மிச்சம் பண்ணனும்னு கொள்கையோடு வாழ்றவன் நானு.

என் கொள்கையை மீர வேண்டிய கட்டாயத்துக்கு ஒரு நாள் தள்ளப்பட்டேன். அன்னைக்கு சீக்கிரம் எழுந்திரிக்க வச்சுட்டாங்க. ஏதோ வீட்ல யாரலையும் செய்ய முடியாதாம், என்னால்தான் முடியும்னு கெஞ்சி கேட்டதால சரினு ஒத்துகிட்டேன். ஒத்துகுறேன், நம்புர மாதிரி இல்லதான், என்ன பன்ன படம் காட்டியே பழகிடேன். தண்ணி புடிக்குறியா இல்ல கோயம்பேடு போய் என் நண்பனை கூட்டிட்டு வரியானு அப்பா கேட்டாரு. தண்ணி புடிக்கணும்னா உடம்பு வலயனும், இதுக்கு டக்குனு வண்டில போயிட்டு வந்துடலாம் பாருங்க, அதான் கோயம்பேடு கிளம்பிட்டேன்.

இவரு எங்க அப்பாவோட பள்ளிக்கூட நண்பனாம். இவரோட பையன், நாளை வெளி நாட்டுல இருந்து விடுமுறைக்காக வராராம். பெரிய இடத்தில வேளை செய்ராரம். இன்னைக்கு சென்னைல அப்பா கூட சுத்தி பாத்துட்டு, நாளைக்கு பையன் கூட ஊருக்கு போக திட்டமாம். என் அப்பாவும் என்னென்ன பண்ணலாம்னு திட்டம் போட்டுட்டு இருக்காரு.

காரில் பொறுமையா போனேன், என்ன விட பொறுமையா பேருந்து வந்தது. அவர கூட்டிட்டு கிளம்பினேன். அவரு என்ன படிக்கிற என்ன வேளை செய்யுரணு பிடிக்காத விசியமாவே கேட்டுட்டு வந்தாரு. ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தோம். ரொம்ப நேரம் திட்டம் போட்டு என் அப்பா என்ன பன்னாருனு பாத்தா, என் அம்மா கிட்ட கால்ல விழுந்து இரவு வீட்டில சரக்கு அடிக்க அனுமதி வாங்கிருக்காறு.

நான் கோழி கறி வருவல்லுக்காக கூட உட்கார்ந்திருந்தேன். என் அப்பா ஆரம்பிச்சாரு “என் பையன மாதிரியா உன் பையன் உருப்புடாம இருக்கான். வெளி நாட்டில் நல்லா சம்பாதிக்கிறான். அங்கேயே இருக்க ஆசை படுறான். உன்னையும் கூப்புடிரான், ஏண்டா போக மாட்டேனு சொல்ற” அப்படினு கேட்டாரு. நாம தான் வெட்டியா இருந்தே பழக்க பட்டவங்களாச்சே உள்ள ஒரு குரல் ஓட ஆம்பித்தது. எதுக்கு இந்த வயசுல போயி, புது இடம், புது ஆளுங்க, தெரியாத மொழி அது இதுனு அவரோட பதில்கள் என் மனசுல கேட்டுது.

ஆனால், அவரு பதில் எதும் சொல்லல. என் அப்பாகிட்ட கேள்வி கேட்டாரு "உருப்படாத உன் பையனுக்கு எதுக்கு தினமும் சோறு போட்டு வீட்ல வச்சிருக்க…? அப்படின்னு கேட்டுப்புடாரு. சரக்குல பொசுக்குனு வெளிய துரத்திடுவாங்களோனு பயந்துட்டேன். என் அப்பா, என் புள்ளைய நான் தான பாத்துகனும் அப்படினு சொன்னாரு. எவ்ளோ பிரச்சனை வந்தாலும், அவன் கூட நிக்கலனா அப்பறம் நான் என்ன அப்பனு சொன்னாரு.

அப்படியே சூரியவம்சம் “லா லா லா லால லாலா” ஓட ஆரம்பிச்சுடுச்சு. அதுக்கும் நான் கேட்டதுக்கும் என்ன சம்பந்தம் பேச்ச மாத்தாதனு திரும்ப கேட்டாரு. அவரு சிரிச்சிட்டே நீ சொன்னது தான் என் பதில்னு சொன்னாரு. என் பையன் வெளி நாட்டில நல்லா சம்பாதிக்கிறான். அங்க இருக்க ஆசைப்பட்ரான். என்ன அங்க கூட்டிட்டு போக நினைக்கிறான். ஆனா, நான் அங்க போயுட்டா இங்க இருக்கிறத எல்லாம் யார் பாக்குறது.

நான், இங்க இருக்கிறது நான் சம்பாதிச்சது, இல்ல அங்க போனா இதே மாதிரி வாழ முடியாது அப்படியெல்லாம் யோசிக்கவில்லை. அவன் அங்க பெரிய இடத்தில வேளை செய்யுறான். வேளை பலு நிறைய இருக்கும். சில வருடங்கள் கழிச்சு வேளைய விடலாம் அப்படினு நினைச்சா, அப்ப அவனை தாங்கி பிடிக்க என்கிட்ட ஏதாவது இருக்கனும்ல. அவன் கீழ விழுந்துடுவானு சொல்லல, விழுந்தாலும் தாங்கி பிடிக்க நான் இருக்கணும்னு பாக்குறேன், அப்படினு சொன்னாரு. இருந்தாலும் எனக்கும் வெளி நாடுகள் போக ஆசை இருக்கு ஆனா, அதை விட பெரியது என் பையனுக்கு நான் இருக்கிறதுனு சொன்னாரு.

அன்னைக்கு இரவு நிறைய சிந்தனைகள். அப்பாக்கள் எல்லாரும் இப்படித்தான் இருப்பாங்களா…? இது வரைக்கும் எவ்வளவு ஆசைகள் தொலைசிருப்பரு என் அப்பா…? எத்தனை முறை நான் அவர் கனவை உடைச்சிருப்பேன்…? என்னால அப்படி இருக்க முடியுமா…? பல கேள்விகள் எழுந்தது. இதற்கான பதில்கள் என் அப்பாகிட்டதான் இருக்குனு தெரியும். ஆனால், அதை கேக்குற நிலையில நான் இருக்கனானு என்னை நானே கேட்டுகிட்டேன்.

அடுத்த நாள், சூரியன் உதிக்குறதுக்கு முன்னாடி நாளை தொடங்கினேன். ஏதாவது பண்ணனும்னு மட்டும் தோணுது, ஆன என்னனு முடிவெடுக்க முடியல. என் அப்பாகிட்ட போயி கேட்டேன். எனக்கு வாழ்க்கையில என்ன பண்ணனும்னு தெரியல, ஆனால் பெருசா பண்ணனும்னு துடிக்குரதா சொன்னேன். என் அப்பா சிரிச்சுட்டாரு.

பெருசா பண்ணனும்னு யோசிக்காத, யாருக்காவது உபயோகப்படுற மாதிரி என்ன பண்ணலாம்னு யோசி. நான் என்ன பண்ணலாம்னு யோசிச்ச அப்போ எனக்கு தோனுனது ஒன்னு தான், என் பையன் என்ன ஆகனும்னு ஆசை படுறானோ அதுக்கு வழி ஏற்படுத்துற அளவுக்கு சம்பாதிக்கணும். நான் சம்பாதிச்சுடன், இப்போ உன் ஆசை மட்டும் தான் மீதி. நீ என்ன ஆக்னும்னு ஆசை படுறேனு கேட்டாரு.

எனக்கு பேச்சு வரல, என்ன ஆகனும்னு தோணல. ஆனா என் அப்பாவ பெருமை பட வைக்கணும்னு முடிவெடுத்தேன். அந்த ஆசையை நோக்கி பயணத்தை தொடர்ந்தேன்…

3 Likes

Kadhai pesa vendum… neengal pesakoodadhu… sindhithu ezhudhunga… vaazhthukal…

புரிந்தது, மாற்றிகொல்கிறேன்.