கண்ணாமா சின்ன சிறு பெண்தான் அவள் சிறிய கண்ணும் சற்று மெலிந்த உடலும் மின்னும் கல் பதித்த மூக்குத்தியும் அவள் அடையாளம்
காலையில் பம்பரமாக வேலை பார்ப்பாள்
முடக்குவாதம் வந்த தன் அம்மா… காச நோய் தாக்கிய அப்பா… இவர்களை பாதுகாக்க பள்ளி படிப்பு முடிந்தும் கல்லூரி படிப்பு தொடர இயலாமல் புத்தக கடையில் வேலை பார்க்க சென்றாள்… அங்கே முதலாளியின் தம்பி அடிக்கடி இவளை கண்ணடிப்பது சிரிப்பது
இது அவளுக்கு அருவருப்பான செய்கை ஆக தோன்றியது… சிறிய இளம்பருவ பெண் என்பதால் யாரிடமும் சொல்ல முடியவில்லை…
அவள் படிக்க ஆசைபட்டதன் விளைவு கல்லூரி யில் இடம் கிடைத்தது… பட்டதாரி ஆனால்… காச நோய் தாக்கினாலும்… தொடர்ந்து அவள் அப்பா வேலைக்கு சென்றார்… வீட்டுக்கு பணம் தர அல்ல… குடிப்பதற்கு… பாவம் அவள் ஒரு சில மாதங்களில் காற்றின் மூலம் அவளுக்கும் காச நோய் வந்தது… அவள் தொடர்ந்து சிகிச்சை பெற்ற பின் குணமாணல்… ஆனாலும் உடல் எடை குறைந்து… வீட்டில் ஆடு மேய்க்க செல்வாள்… காட்டில் விறகு பொறுக்க போவாள்… வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு இருப்பாள்… காலம் செல்ல வயதானது… 29 வயதாகியும் மணமுடிக்கவில்லை… காரணம் ஐந்து வருட காதலனுக்கு காத்திருந்தால். அவன் வீடு கட்ட பணத்திற்காக வெளிநாட்டு வேலைக்கு சென்றவன்… கோயில் கோயிலாக சாமி கும்பிட செல்வாள் அப்போது ஒருநாள் செல்கையில் பேருந்து ஏறி உடல் நசுங்கி இறந்தும் விட்டாள்…
நம்மை விட துன்பம் பலரை வாட்டுகிறது… இருப்பதை வைத்து வளமுடன் வாழ்வோம்…