Community

அந்தோணியின் நத்தார் பரிசு

அந்தோணியின் நத்தார் பரிசு

       பொன் குலேந்திரன் (கனடா) 

“அம்மா நத்தார் தாத்தா என்பவர் பெரிய பணக்காரரா”?
“ஏன் அப்படிக் கேட்கிறாய் அந்தோணி”?
“இல்லையம்மா என்னோடு படிக்கும் என் ஆருயிர் பணக்காரா நண்பன் அடைக்கலநாதன் (நாதன்) சொன்னான். நத்தார் தினத்துக்கு முதல் இரவு அவன் தூங்கி காலை எழும்போது அவன் கட்டிலில் அவன் விரும்பிய பரிசுகளை நத்தார் தாத்தா வைத்துவிட்டுப் போவாராம் “

“உன் நண்பன் சொல்வது உண்மையாக இருக்கலாம். பெற்றோர் சொற்படி குழப்படி செய்யாமல் நடக்கும் தம்பிள்ளைகளுக்கு பெற்றோர் நத்தார் தாத்தா வேஷம் போட்டு நத்தார் தினமன்று பரிசுகள் கொடுப்பார்கள்”:.
“அப்போ எனக்கு இந்த நத்தாருக்கு நான் விரும்பும் பரிசு கிடைக்குமா அம்மா ’’? அந்தோணி தாயைக் கேட்டான்

“நீ அடிக்கடி உருக்கமாக உன் இனிய குரலில் பாடும் பாடல், கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கும் என்றார் இயேசு
தேடுங்கள் கிடைக்கும் என்றார். அந்தப் பாடல் படி
. நீ கேட்பது உனக்குக் கிடைக்கும் மகன் . நீ தினமும் யேசுவை பிரார்த்தனை செய் . அவர் உன்மேல் கருணை வைப்பார் “ தாய் நேசமணி சொன்னாள்.

“அப்போ நான் விரும்பும் பியானோ கிடைக்குமா அம்மா “
“விலை உயர்ந்த பரிசு கேட்கிறாயே மகன். உன் அப்பா இருந்திருந்தால் சில வேளை கடன் வாங்கியாவது உனக்கு வாங்கி தந்திருப்பார் . இயேசுநாதரின் சித்தம் உன் பாக்கியம் மகன்”

இது நத்தார் தினத்துக்கு சில மாதங்களுக்கு முன் தாயுக்கும் மகனுக்கும் நடந்த உரையாடல்.


அந்தணியின் தந்தை சூசைப்பிள்ளை அரசில் போலீஸ் அதிகாரியாக இருந்தவர் . நேர்மையானவர் . பல கொலை கோசுகளைக் கண்டு பிடித்து குற்றவாளிக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தவர். அவர் போதை மருந்து வியாபாரம் செய்த ஒரு அரசியல்வாதியை ஆதாரத்தோடு பிடித்து வழக்கு தொடர்ந்ததுக்கு, ஒரு கூட்டத்தால் கொலை செய்யப்பட்டவர்.
அதன் பின் நேர்சாக இருந்த அவரின் மனைவி நேசமணியும் மகனும் தனித்து போனார்கள்
அந்தோணி கொழும்பு பரிசுத்த மேரி தேவாலயத்தில் பக்தி பாடகர் குழு உறுப்பினர்களுக்குத் தலைமை தாங்கி பியானோ வாசித்துப் பாடல்கள் பாடுவான் . அவனின் குரலில் மயங்கியவர்கள் பலர். அவனில் இருந்த திறமையைக் கண்ட தேவாலயத்தின் பிரதம போதகர் தேவசகாயம் அவனைத் தேவாலயத்தில் உள்ள பியானோவில் பயிற்சி பெற அனுமதித்தார். அவனின் பியானோ வாசிப்பைக் கேட்டு தேவாலயத்துக்கு வரும் பக்தர்கள் மெய் மறந்து நிற்பார்கள் .
“எங்கள் மறைந்த இன்ஸ்பெக்டர் சூசைபிள்ளையின் மகனுக்கு இவ்வளவு இசை திறமையா” என்று தமக்குள் பேசிக்கொண்டனர். எந்த திறமை இருந்தென்ன சொந்தத்தில் அவன் வீட்டில் பியானோ வைத்திருக்கும் வசதி அவனுக்கு இருக்கவில்லை .
அடிக்கடி அவனுடைய பணக்கார நண்பன் அடைக்கலநாதன் வீட்டில் உள்ள பியானோவில் தன் இசையின் திறமையை காட்ட அவனால் முடிந்தது . அந்தணிக்கு நாள் எதிர்காலம் உண்டு என்று அடைக்கலநாதனின் செல்வந்தரான தந்தை சூசைதாசன் நேசமணிக்கு சொல்லுவார் அவருக்கும் நாதன் ஒரு மகன் மட்டுமே .


காலப்போக்கில் அந்தணி நோய்வாய்பட்டான் மருத்துவ பரிசோதனைகளின் பின் அவனின் இரு சிறுநீரகங்கள் வெகுவாக பழுதடைந்து விட்டது என டாக்டர் அறிவித்தார். அது நேசமணிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
“என்ன டாக்டர் இந்த சிறு வயதில் என் மகனுக்கு நீரக வியாதியா”?
“ பயங்கர விபத்தினால் உடல் பாகங்கள் நசுங்கி, சிதைந்து போகுதல், மற்றும் பாம்பு கடி இரத்தஅழுத்தம் . சர்க்கரை வியாதி. அதிக மருந்து அருந்துதல் அதிகமான தீக்காயம் ஏற்படுதல் முதலிய சமயங்களில் உடல் தசைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு, தசைநார்கள் கூழாகி, சிறுநீரகங்களிலுள்ள பில்டர்களை அடைத்து விடுவதால், சிறுநீரகங்கள் செயல் இழந்து விடுவதும் உண்டு” டாக்டர் மோகன் சொன்னார் …
.
“ இப்பொ எனக்கு நினைவுக்கு வருகிறது டாக்டர் இவனுக்கு ஆறு வயதாக இருக்கும் போது மாடிப் படியில் இருந்து கீழே விழுந்து ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவன் அதோடு எட்டு வயதில் சிறு அம்மை நோய் அவனுக்கு வந்தது “

:”அது மட்டுமல்ல காரணம் இது மரபணு சம்பந்தமாகவும் இருக்கலாம் “
“ எனக்கு நினைவுக்கு வருகிறது டாக்டர் என் கணவர் ஒரு நாள் எனக்குச் சொன்னார் தன் தந்தை சிறு நீரக வியாதியால் இறந்தார் என்று. அந்த காலத்தில் இந்த நோய்க்குத் தகுந்த வைத்தியம் இருக்கவில்லை “

கணவன் இறந்து ஐந்து வருடங்களில் மகனுக்கு நீரக நோய் இருப்பதை அறிந்த தாய் செய்வது அறியாது திகைத்து நின்றாள் இறந்த கணவனின் பென்சனையும் தனது சம்பளத்தையும் நம்பி வாழ்பவள் நேசமணி …
“டாக்டர் எனக்கும் என் கணவருக்கும். பதினாறு வருடங்களுக்கு முன்பு தான் அந்தணி எங்கள் வாழ்வில் அடியெடுத்து வைத்தான். அவன் இந்த உலகிற்கு வந்ததை நினைத்து கொண்டாடினோம். அந்த தருணம் முழுவதும் எங்கள் மனதில் சந்தோஷம் மட்டுமே நிறைந்திருந்தது. இவன் கேட்டதை எல்லாம் இவன் தந்தை வாங்கிக் கொடுத்தார் என் மகனுக்கு இசைக் கருவிகள் என்றால் மிகவும் பிடிக்கும். வாயில் வைத்து இசை மீட்கும் மவுத் ஒர்கன் கருவி ஒன்றை இவன் அப்பா இவனின் ஆறு வயது . பிறந்த தினத்துக்கு வாங்கி கொடுத்தார் அது ஒன்றே இவனிடம் உள்ள இசைக் கருவி அதனால் என்னவோ அவனது கனவும் தான் ஒரு இசைக் கலைஞராக வேண்டும் என்பதாகவே இருந்தது. ஆனால் இப்பொது நீங்கள் சொல்வதைக் கேட்டால் அவன் கனவு நடவாது போல் தெரிகிறது டாக்டர் என் கணவர் இப்போ என் மகனின் தேகநிலை பற்றி அறிய உயிரோடு இல்லை டாக்டர் இந்த சிறு நீரக வியாதி பற்றி சற்று விபரமாக எனக்கு சொல்ல முடியுமா? . டாக்டர் இதற்கு வைத்தியம் இல்லையா”? நேசமணி டாக்டர் மோகனைக் கேட்டாள்

“இடுப்புப் பாகத்தின் கீழ்ப்பகுதியில் கிட்னி என்ற இரண்டு சிறுநீரகங்கள் அமைந்துள்ளன. இவற்றின் பிரதான தொழில் சிறுநீரை உற்பத்தி செய்தல். சரீரத்திலிருந்து அகற்றப்படவேண்டிய நீர், கழிவுப்பொருட்கள் ஆகியன சிறுநீரில் அடங்கியுள்ளன. கழிவுப்பொருட்களை அகற்றுவதுடன் இரத்த அழுத்தம், உப்பு அமிலம், ஈமோகுளோபின் ( Hemoglobin) ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்றன. இரண்டு சிறுநீரகங்களும் தாக்கப்பட்டு 60-70% வரை சிறுநீரகம் வேலை செய்யாது இருந்தால் மட்டுமே ஒரு நோயாளிக்கு சிறுநீரகச் செயலிழப்பு உண்டு என்று நாம் சொல்லுவோம். 90% க்கு மேல் அவை வேலை செய்யாவிடின் அந்த நோயாளிக்குக் கடுமையான சிறுநீரகச் செயலிழப்பு என்று சொல்லுவோம் . உங்கள் மகனுக்குச் சிறுநீரகங்களும் தாக்கப்பட்டு பரிசொதனை அறிக்கை படி 80% வரை சிறுநீரகம் வேலை செய்யாது இருக்கிறது . விரைவில் நிலமை மொசமடைந்து உங்கள் மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படாலம் ”.

“இதற்கு தீர்வு இல்லையா” டாகடர்

“ என் இல்லை. ஒன்று இரத்த சுத்தி செய்யும் டயாலிசிஸ் என்ற முறையைப் பாவிக்கலாம் .ஒரு கிழமைக்கு இது மூன்று நாட்கள் செய்யும் சிகிச்சை இது ஒரு தடவை செய்ய அதிகப் பணம் செலவாகும் உங்கள் மகன் நீண்ட காலம் உயிர் வாழ ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் அவனுக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ததாக வேண்டும். இதற்கு அதிக பணம் செலவாகும் அதோடு யாரவது ஒருவர் தனது ஒரு நீரகத்தை தானம் செய்ய முன் வரவேண்டும் . அதோடு அந்த நீரகம் பொருந்த வேண்டும் ” டாக்டர் மோகன் சொன்னார் .

“நான் அவனை இழக்க தயாராகவில்லை டாக்டர் . அவன் எப்படியும் தன் வாழ்க்கையுடன் போராடி வென்று விடுவான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவனது மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் திரட்ட என்னால் முடியாது . இந்த சிறு வயதிலா இவனுக்கு இந்த வியாதி டாக்டர் “? .
”:சிறு வயது முதல் முதிர் வயது வரை சிறுநீரகச் செயலிழப்பு எவருக்கும் வரக்கூடும். இது ஆண், பெண் இருசாராருக்கும் வரும். ஆனால் முன்பு அடிக்கடி, சிறுநீரக நோய்கள் வந்தவர்களுக்கு வர அதிக வாய்ப்புண்டு.
பிள்ளககளிலும் பெரியவர்களிலும் இந்தக் காரணம் வேறுபடுகிறது. வளர்ந்தவர்களில், சடுதியான சிறுநீரக செயலிழப்புக்குக் காரணமாய் இருப்பவை பாம்புக்கடி, சிறுநீரக அழர்ச்சி, நஞ்சு, போதைப்பொருள், பாரிய சத்திரசிகிச்சை, கடுமையான தொற்று நோய்கள் என்பன. வளர்ந்தோரில் காணப்படும் நாட்பட்ட சிறுநீரசச் செயலிழப்புக்கு பொதுவான காரணம், நீண்ட கால சிறுநீரக அழர்ச்சி, இரத்த அமுக்கம், புறொஸ்ரேற் நோய், சிறுநீரக்தில் உண்டாகும் கல்லு என்பனவும் பொலிசிஸ்ரிக் சிறுநீரக நோயும் ஆகும். சிறுநீரகத் தொற்றுக்கள், சில வேளைகளில் தாமாகவே சிறுநீரகச் செயலிழப்பை உண்டாக்குகின்றன. எப்படியாயினும் சிறுநீரகச் செயலிழப்பு உள்ளவா்களில் சிறுநீரகத் தொற்று, சிறுநீரகத் தொழிற்பாட்டை மிக மோசமாக்கி விடும்.

பிள்ளைகளிலே சிறுநிரகத் தொற்று, சிறுநீரக அழர்ச்சி என்பன அதிகமாகக் காணப்படினும் அவர்களுக்குச் சிறுநீரகச் செயலிழப்பு வருவது மிகவும் அரிது. அநேகருக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்புக்குக் காரணம் கண்டுகொள்வது மிகவும் கடினம்.: டாக்டர் மோகன் விளக்கம் கொடுத்தார்.

***(
நத்தார் தினத்துக்கு முன் தினம் அந்தோணியின் பெயருக்கு ஒரு பதிவு தபால் வந்த்ருந்தது
நேசமணி அந்த கடிதத்தைப் பிரித்து வாசித்தாள்

என் ஆருயிர் நண்பன் அந்தோணிக்கு
நான் நலமாக உள்ளேன். உன் நலம் பற்றி என் அப்பா சொல்லி கேளிவிப் பட்டேன் என்னால் அதை நம்ப முடியவில்லை. இந்த சிறு வதில் உனக்கு நீரக வியாதி எப்படி வந்தது ?. நீ வாழ்ந்து இசை துறையில் எவ்வளவோ சாதனைகள் படைக்க வேண்டும் என்பது எனதும், என் பெற்றோரினதும் விருப்பம். உன் வியாதி பற்றி என் அப்பா எங்கள் குடும்ப டாக்டரோடும் உன், அம்மாவோடும் கலந்து பேசினார். அதன் முடிவை நீ எதிர்பார்க்க மாட்டாய் நான் எழுதினால் நீ நம்ப மாட்டாய் .என் நண்பன் வாழ வேண்டும் என்னுடைய பியானோவில் இசை மீட்க வேண்டும். நான் சாகும் வரை அதைக் கேட்க வீண்டும் இது என் ஆசை அதற்கு என் இரு நீரகங்களில் ஒன்றை உனக்கு தானம் செய்ய என் பெற்றோருடன் கலந்து பேசி முடிவுக்குவந்து விட்டேன் . இந்த சிகிச்சைக்கான முழு செலவையும் என் அப்பா பொறுப்பு ஏற்பார் . நீ சில மாதங்களில் சிகிச்சை பெற்று சுகமக வந்து நான் உனக்கு நத்தார் பரிசான தரும் என் பியானோவில் எனக்கும் :உனக்கு ப்ரியம்மான பாடல் - கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கும் என்றார் இயேசு தேடுங்கள் கிடைக்குமென்ற
பாடலை நான் உன்னைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு நீ வாசித்துக் காட்ட வேண்டும்.

இப்படிக்கு
உனது ஆருயிர் நண்பன்
அடைக்கலநாதன்
அக் கடிதத்தை வாசித்து முடித்த நேசமணியின் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் கடித உறையில் விழுந்தன. தூரத்தில் பரிசுத்த மேரி தேவாலயத்தின் மணி ஓசை காற்றில் மிதந்து வந்தது

( யாவும் உண்மை கலந்த புனைவு)

1 Like

கிறிஸ்துமஸ் தினத்தன்று நல்லதொரு கதையை பதிவிட்டுள்ளீர்கள்.
இனிய கிறிஸ்துமஸ் :church: :christmas_tree: மற்றும் புத்தாண்டு :sparkler: :fireworks: நல்வாழ்த்துக்கள்.

எனது கதைகள் கட்டுரைகள் தொடர்ந்து பதிவிடுகிறேன் எனது துஷ்டகைமுனு என்ற குறு நாவலை பதிவிட முடியுமா? அட்டைப்படத்துடன்

கண்டிப்பாக பதிவிடலாம். உங்களுக்கு அதில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என்னை அணுகவும்.