Community

இப்படிக்கு உன் அன்பு மகள்

வாசகர்களுக்கு என் வணக்கங்கள் :pray: :pray:

ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவள் அனு. சிறு வயதிலேயே தன் அம்மாவை இழந்து அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்தவள். அனுவிற்கு எவ்வித குறைகளும் வராதவாறு கண்ணன் அவளை நன்றாக வளர்தது வந்தார். கண்ணன் ஒரு வக்கீல். கோர்ட் நேரம் போக தன் மகளுக்கு புத்தகங்களை வாசித்துக் காட்டுவார். இருவருக்கும் செய்திகளையும், புத்தகங்களையும் தேடத்தேடிப் படிப்பதில் ஆர்வம் அதிகம். புத்தகத்தை விட ஓர் சிறந்த வழிகாட்டி நம் வாழ்வில் இருக்க முடியாது என்று கண்ணன் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். அவ்வப்போது மகளுக்கும், தந்தைக்கும் சிறு சிறு சண்டைகள் வரும். ஆனால் அது அடுத்த நொடியே தீர்ந்துவிடும். அனு தன் அம்மாவை இழந்ததில் இருந்து டைரி எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். ஒரு அப்பா தன் மகளை அன்பு காட்டி வளர்த்தாலும் அம்மாவின் அரவணைப்பிற்கு ஈடாகாது. அதனாலேயே அவள் தன் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை டைரியில் எழுதப் பழகினாள். அதை தன் அம்மாவிடம் தான் மனம் விட்டுப் பேசுவதாகவே எண்ணினாள்…

ஒரு ஞாயிற்றுக்கிழமை அவளும், கண்ணனும் தொலைக்காட்சியில் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஓர் இளம்பெண் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்ததாக செய்தி வந்தது. அதைக் கேட்ட கண்ணன் தழதழத்துப் போனார். அவர் ஏதேதோ சொல்லிக் கொண்டே போனார். ஒரு அப்பாவாக, வக்கீலாக இருப்பதினால் மட்டும் அவருக்கு கோபமும், ஆத்திரமும் வர வில்லை. ஒரு பெண்ணிற்கு நடந்த அநியாயம் கண்டு மனம் உடைந்தார். அனுவிற்கும் அச்செய்தி வருத்தத்தை தந்தது. சட்டென்று போன் அடிக்க கண்ணன் அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் அனு தன் கல்லூரி பாட வேலைகளை செய்யத் தொடங்கி விட்டாள். ஆனால் அவள் மனம் மட்டும் அந்த செய்தியை விட்டு விலகவில்லை. முன் கேட்ட செய்திகளெல்லாம் நினைவிற்கு வந்தது. இதற்கு தண்டனைதான் என்ன? என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது. உடனே அவள் பல பத்திரிக்கைகளிலும்,இணையதளத்திலும் இதற்கான தீர்வை தேடத் தொடங்கினாள். அன்று அவள் தூக்கம் தொலைந்தது. அம்மா விடம் பேச நினைத்தாள். அவளுக்கு அம்மா டைரிதானே…அதில் வன்கொடுமை பற்றிய தன் எண்ணத்தை ஒரு கட்டுரையாய் எழுதினாள். நீண்ட நேரம் எழுதி முடித்து தன் அம்மாவின் மடியின்(டைரி) மீது தலை சாய்த்து அயர்ந்து உறங்கி விட்டாள். மறுநாள் காலையில் அவள் அறைக்கு வந்த கண்ணனுக்கு அவள் டைரியின் மேலே அயர்ந்து உறங்குவதை கண்டு சிறு கோபம் வந்தது. ஒரு அப்பாவாக தன் மகள் நேரத்திற்கு உறங்காமல் ஏன் இப்படி நீண்ட நேரம் எழுதி கஷ்டப் படுகிறாள் என்று. அவள் அருகில் வந்து அக்கட்டுரையை பார்த்தார். “சட்டங்கள் அறிவோம்” என்னும் தலைப்பில் அவள் எழுதியவை…

இத்தொகுப்பு நம் சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படுகின்ற பாலியல் வன்கொடுமை பற்றியதும், அதுசார்ந்த பாதுகாப்பு சட்டங்களைப் பற்றியதும் ஆகும். முற்காலத்தில் பெற்றோர்கள் பெண் குழந்தையினால் ஏற்படுகின்ற செலவுகளுக்காக பெண்குழந்தை பிறப்பு பற்றிய பயம் கொண்டனர். ஆனால் இன்று அவர்களுடைய பாதுகாப்பிற்காக மட்டும் அச்சப்பட வேண்டியுள்ளது. இந்நிலை மாறவேண்டுமானால் ஆண்களுக்கு நிகரான சம உரிமையை எல்லா துறைகளிலும் பெண்களுக்கு அளிப்பதோடு அல்லாமல் பெண்களின் பாதுகாப்பிற்கான சட்டங்களைப் பற்றிய அறிவு சார்ந்த தெளிவினை ஏற்படுத்துவதே சாலச் சிறந்தது.

பெண்ணை இந்த சமூகம் மென்மையானவள், எளிமையானவர், அமைதியான வளாகவே சித்தரிக்கிறது. தென்றல் அமைதியானது, ஆனால் அதுவே சூறாவளியானால் எதிர்படும் அனைத்தையும் தவிடுபொடியாக்கிடும் வலிமை கொண்டது. அதேபோல் பெண்ணும் தான் மனதளவிலும், உடலளவிலும் வலிமையானவள் என்ற உணர்வு மாறாமல் எல்லா காலகட்டத்திலும் செயல்பட வேண்டும். ஒரு பெண்ணின் மன வலிமையை அவளுடைய பிரசவத்தின் மூலம் அறியலாம். அப்படிப்பட்ட பெண்ணால் பாலியல் வன்கொடுமையால் இருந்து தங்களை காத்து எதிர்கொள்வது என்பது இயலாத காரியமா என்ன?
இந்திய தண்டனை சட்டத்தில் பிரிவுகள் 96 முதல் 106 வரை தற்காப்பு உரிமைகள் விளக்கப்பட்டுள்ளன. இதில் பிரிவு 100-ல் எதிர்தரப்பினர் நம் உடன்பாடு இன்றி சீண்டும் போது தற்காப்பு உரிமை எவ்வாறு செயல்படும் என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ஒருவர் நம்மை தாக்கி கொலை செய்ய / பாலியல் ரீதியாக தாக்கும் போது / கடத்திச் செல்ல முயலும் போது / நமது உடலில் கொடுங்காயங்கள் ஏற்படும் சூழ்நிலையில், சட்டப்பூர்வ அதிகாரிகளை அணுக முடியாத நிலையில் நம்மை காத்துக் கொள்ளும் போது எதிரிக்கு எவ்வித அசம்பாவிதங்கள் நேர்ந்தாலும் அதனைக் குற்றமாக கருதப்படாது என்னும் சில வரையறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் POSH, NCW போன்ற சட்டங்களும் பெண்களுக்கான சட்டங்களாகும்.

இச்சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வு வகுப்புகள் அனைத்து பள்ளிகளிலும் கட்டாய பாடமாக்கப்பட வேண்டும். மற்றும் எதிர்பாராத விதமாக பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் அதை துணிந்து பெற்றோரிடமோ / காவல் துறையினரிடமோ தெரிவிக்க தயங்கக் கூடாது. உங்களுடைய தயக்கமே எதிரியின் பெரிய ஆயுதமாகிறது.

பெண் என்ற ஒரே காரணத்தினால் வயது வித்தியாசமின்றி இத்தகைய வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை செயலிகள் மூலம் பெரிதாக்குவதற்கு பதிலாக செவி சாய்க்காமல் இருந்தாலே போதுமானது. இன்றைய இளம் தலைமுறையினர் தங்களால் இயன்றவரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆண்களைப் போலவே பெண்ணும் ஒரு படைப்பு என்ற உணர்வை பெற்றோர்கள் தங்கள் ஆண்பிள்ளைகளுக்கு குழந்தை பருவம் முதல் உணர்த்த வேண்டும். காவல்துறை எண்ணற்ற பாதுகாப்பு செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும் எந்த ஒரு செயலும் வீட்டிலிருந்து துவக்கப்பட்டால் எது நிச்சயமாக இந்த சமூகத்தை ஒரு நல்ல வழிக்கு கொண்டு செல்லும். ஒரு மரத்திற்கு வேரே மூலாதாரம். அதேபோல் ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் வீடே முதல் பள்ளியாகும். இதை அனைவரும் உணரவேண்டும்.

அவர் அக்காகிதத்தை எடுத்தபோது கனம் தெரியவில்லை ஆனால் படித்ததும் அவ்வரிகளின் கனத்தை உணர்ந்தார். கண் கலங்கினார். பெருமிதம் கொண்டார். அவளை வாழ்த்த நினைத்தார். சட்டென்று என்ன தோன்றியதோ அக்கட்டுரையை எடுத்துக் கொண்டு தன் அறைக்கு சென்று விட்டார். சிறிது நேரத்தில் அனுவே எழுந்துவிட்டாள். தாய்மடி தந்த புத்துணர்ச்சியில் அவள் நாள் தொடங்கியது.

(5 நாட்கள் கழித்து)

அன்று அவள் அம்மாவின் நினைவு நாள். வழக்கம்போல் கோயிலுக்கு சென்று தெய்வமாய் மாறிய அம்மா தம்மை காக்க வேண்டுமென்று பூஜை செய்துவிட்டு மதியம் வீடு திரும்பினாள். அவள் வீடு திரும்பியதும் கேட்டது தொலைபேசி வாழ்த்தையே. அவளின் “சட்டங்கள் அறிவோம்”-கான வாழ்த்தே அது. அனுவிற்கு வியப்பும், மகிழ்ச்சியும் ஒரு சேர வந்தது. அப்பா…!!அப்பா…!!என்று கத்தியபடியே ஓடினாள். அவள் வருகையை அறிந்த கண்ணன் வாழ்த்துகள் அனு வாழ்த்துகள்!! என்றார். “அப்பா நீங்களா பத்திரிக்கைக்கு அனுப்பினிர்கள்!?” என்று வியப்புடன் கேட்ட அனு அவரை கட்டித் தழுவினாள். கண்ணன் அப்பத்திரிக்கை பதிவை அவளிடம் காட்டினார். இதுவரை அவளது அப்பாவாக இருந்தவர் இப்பொழுது அனுவின் கண்களுக்கு தாயுமானவராக தெரிந்தார்.

நன்றி :family_man_girl: :heart:

Story by

Roshini

7 Likes

Migavum nandraaga ulladhu… needhi kadhai… endru therigiradhu… aadhalal kadhai dhaan pesa vendum… namma vaasagaruku instructions thara koodathu… varungaalathil nalla ezhthalaraaga vaaipugal adhigam… Puthagangal mattum podhadhu… vaazhkai tharum paadathaiyum karka vendum… nandri… magizhchi…

1 Like

Innum surukki ezhudha muyarchi seiyungal… ungalal mudiyum… nandri…

2 Likes

நன்றி. உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்.

1 Like