Community

திருவள்ளுவர்க்கு தெரியாமல் பார்த்துக்கிருங்க....

திருவள்ளுவர்க்கு தெரியாமல்
பார்த்துக்கிருங்க…

சத்தமில்லாமல்" பூனைபோல் மெதுவாய் வீட்டுக்குள் நுழைந்தான்.

ஹாலில் யாருமில்லை" ஒரு கணம் சுற்றும் முற்றும் பார்த்தான்.

சமையலறையில் மட்டும் சத்தம் கேட்டது மெதுவாய்" அடி மீது அடி எடுத்து வைத்து சமையலறைக்கு நடந்து சென்றான்.

அடுப்பில் இருந்த பாத்திரத்தில் கரண்டியால் கிளறிக் கொண்டிருந்தாள்.

அவன்" சத்தமின்றி அவள் அருகில் சென்று “அவள்” தலையில் கொட்டு வைத்தான்.

ஆ… என்று தலையைத் தேய்த்துக் கொண்டு திரும்பினாள்.
எரும… எரும… வலிக்குதுடா லூசு தலையை தேய்த்துக்கொண்டு அவனை திட்டினாள்.

என்னடா சொல்லாம கொள்ளாம வந்து நிற்கிற"

(சிரித்துக்கொண்டே)
நீதான் அம்மா கிட்ட புலம்பிக்கிட்டு இருந்தியாமே"

தேங்காய் இல்ல, 25 "ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியது இருக்கு தம்பி கிட்ட தேங்காய் அஞ்சு ஆறு காயி கொடுத்துவிடு “னு” சொன்னியாமே
அதான் கொண்டு வந்தேன்.

எங்க மாமா"

அவரு ஆபீஸ் போயிட்டாரு.
அப்பா அம்மா நல்ல இருக்கிறங்கல

ம்ம்…எல்லாரும் நல்லதான் இருக்காங்க.
நீ நல்ல இருக்கிறல்ல
எங்க? குட்டிமா ஆளையே காணோம்.

அவளுக்கு இன்னைக்கு ஸ்கூல் டா ஸ்கூல் போயிட்டா
ஸ்கூல் வேன் வர டைம் மணி வேற ஆச்சு
டேய்… தம்பி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நீ போய் அவளை கூட்டிட்டு வந்துறியா

நான் போய் கூட்டிட்டு வர்றேன் நீ முதல்ல அந்த பைய எடுத்து உள்ள வையி

டேய்… மஞ்சக் கலர் வேன்
டான் பாஸ்கோ டா…

எல்லாம் எனக்குத் தெரியும் நீ ஓ… வேலையை பாரு,
வாசலில் கிடந்த தன் செப்பலை மாட்டிக்கொண்டு காம்பவுண்ட் கேட்டு வரை வந்தான்.

தலையை சொரிந்து கொண்டே மறந்து வைத்து வந்த பைக் சாவியை திரும்பி சென்று எடுத்து வந்தான்.

பைக்கை ஸ்டார்ட் செய்து ஒரே திருகில் காற்றாக சென்றான்.

நான்கு சாலைகள் பிரிகின்ற இடம்.

சாலையின் ஓரமாய் பைக்கை
சைடு ஸ்டாண்ட் போட்டு வண்டியை நிறுத்தினான்.

வண்டியின் மீது அமர்ந்தான்.

சாலையில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தது அதை அவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

தன் சட்டைப் பையில் இருந்து செல் போனை எடுத்து நேரத்தைப் பார்த்தான் .
பின் வாட்ஸ் அப் பார்த்துக்கொண்டிருந்தான் .

அவனைக் கடந்து வேன் சிறிது தூரம் சென்று நின்றது.

நிமிர்ந்து வேனைப் பார்த்தான் வேன் கதவு திறந்து நாற்பத்தி ஐந்து வயது உடையவர் இறங்கினார்.

பின்னர் ஒரு பையனை இறக்கினார்.

பைக்கில் இருந்து இறங்கி “வேன்” அருகே வந்தான்.

வேனில் இருந்து அவன் அக்கா மகள் இறங்கினாள்.

அவனைப் பார்த்ததும் மாமா… என்று அழைத்தாள் அப்போது அவள் கையைப்பிடித்து. என்ன அம்மு நாளைக்கு மறக்காம சொல்லிடுவிய
என்று டீச்சர் கேட்டவுடன்.
ம்… என்று திரு திருவேன்று முழித்துக் கொண்டு தலையை ஆட்டினாள்.

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
என்று டீச்சர் சொல்ல அம்முவும் பின்பாட்டு பாடினாள்.
"குட் "மறக்காம நாளைக்கு சொல்லனும் என்றாள் டீச்சர்.

திடீரென்று ஒரு குரல்""
டீச்சர் நீங்களும் திருவள்ளுவர்க்கு தெரியாமல்
பார்த்துக்கிருங்க என்று

அவள் நிமிர்ந்து யாரென்று
பார்த்தாள்.
ஆனால் அவள் சிந்தனை எல்லாம்
நாம் சொன்னா குறள் சரிதானா
என்று தனக்குள் ஒருமுறை சொல்லிப் பார்த்தாள்.
சரிதான் என்று சுயநினை விற்கு வந்தாள்.

அவனைப் பார்த்தாள் அதற்குள்
அவன் நீண்ட தூரத்தில் சென்றுக் கொண்டிருந்தான்.

அவள் அந்த குழப்பத்திலே
வீட்டிற்கு சொன்னறாள்.
வீட்டின் வாசலில் அங்குகொன்றும் இங்கொன்றுமாய் காலில் மட்டிருந்த செப்பலை வீசிவிட்டு .
வீட்டிற்குள் நுழைந்தாள்
கையில் இருந்த பேக்கை பெஞ்சியின் மீது வைத்து விட்டு நேரக சென்று அலமாரியில் இருந்த திருக்குறள் புத்தகத்தை எடுத்தாள் . அந்த குறளை சரிப்பார்த்தாள் குறள் சரியாத்தான் இருந்தது.
பின் ஏன் அவன் அப்படிச் சொன்னான்
என்ற குழப்பம் அன்று இரவு முழுவதும்
அவளை உறங்க விடவில்லை

புதிய கவி சுரேந்தர்