கனல் அடுப்பு ஊதி
என் பசித்தீ
அனைத்தவளே…
புனல் மட்டும் மீதி
உண்டு என் புன்னகையே
புசித்தவளே…
தாது காக்கும் தேனீ
போல என்னை
தத்தி தத்தி
நடக்க வச்ச…
என் பால்வாசம்
நீ ருசிக்க
முத்தமிட்டு
மூச்சு விட்ட…
புடிச்சா என்று நீ
சொல்லும் போது
என் கண்ணு
உன்ன ரசிக்கும்…
எனை விட்டு நீ
தூரம் சென்றால்
என் அழுகை
உன்ன அழைக்கும்…
கரும்பா நா மொழி
பேச தினம்
எறும்பா நீ உழச்ச…
இரும்பா என் தேகம்
மாற துரும்பா
நீ இளச்ச…
அடிக்கும் காற்றுகும்
வேலியானது தாயே
உன்னோட சேலை…
நான் படிக்கும்
கல்விக்கு கூலியானது
நீ பாத்த வேலை…
ஊர் பிரச்சனையில்
என் பெயரும்
சேர்ந்து இருக்கும்…
என் மகன் உத்தமன்
என்று கூட்டத்தில்
உன் குரலு
உசந்து நிக்கும்…