Community

புள்ளதாச்சி மங்களம்

(எழுத்து

-சக்திவேல் கோவிந்தசாமி
மைத்தூறல்கள்)

எழுத்துப் போட்டிகாக (அட்மின் அண்ணா ஓகே வா)

            புள்ளதாச்சி - மங்களம்

என்றும் போல அவளுக்கு அது பேருந்து பயணம் தான் ஆனால் அவள் இப்பொழுது மூன்று மாதம் கர்ப்பிணி. அவ்வளவு தான் வித்தியாசம்.

அவள் கணவன் கருப்பையா கரும்பு வெட்ட காரைக்குடி சென்று விட்டான். அவள் மங்களம் மதுரையில் இருக்கிறாள்.

நாட்கள் பல கழிந்து நேற்று தான் அவள் கணவன் கரும்பு வெட்ட சென்றான்.

மங்களத்துக்கு நீண்ட நாள் கரு ஒழுங்கா தங்கல, இந்த முறையாவது கரு தங்கனும் சொல்லி அவ ஏறாத கோவில் இல்ல சுத்தாத மரம் இல்ல, எப்படியோ கடவுள் புண்ணியமோ இரண்டு லட்சம் வாங்கிட்டு வைத்தியம் பண்ண டாக்டர் புண்ணியமோ இவளுக்கு இப்போ தான் கரு தங்கி மூணு மாசம்.

புருசன் கருப்பையா படிக்கல மங்களம் ஓரளவு படிச்சிவ, ஆனா சின்ன வயசுல பண்ண கலியாணம் கரு சரிவர நிக்கல,

வருசம் ரெண்டா ஆகல மங்களம் பட்டம் வாங்கிடான், இது அவ படிச்சிருந்தா கூட வாங்கி இருக்க மாட்டான்.

ஆன கருப்பையாவுக்கு அவள மனதார நேசிக்கிறான், அதனாலே இங்க இருந்தா பேசிய கொலை பண்ணிட்டுவாங்கனு அவள இதுல இருந்து காப்பாற்ற தனி குடித்தனம் போனான். நல்லது நடக்கும்னு நம்மி சேர்த்து வச்ச பணத்தை எல்லாம் டாக்டர் கையில கொடுத்தான்.

ஆறு மாசம் சோறு தண்ணி பாதி, திண்ண மாத்திரை மீதி. அவ மட்டும் இல்ல அவனும் தான், ஏதோ ஏழாவது மாசம் அவ வீட்டுக்கு தூரம் போகல, மங்களம் நிம்மதி ஆனாள்.

ஆனாலும் கருப்பையா மனசுல பயம் இன்னும் அதிகமாச்சு ஏனா அக்கம் பக்கம் அது ரெண்டு நாள் மூணு நாள் தள்ளி கூட போகும் பொறுத்தது தான் பாக்கணும்னு , சொன்னது தான் அந்த பயம்.

இப்படியே ஒருவாரம் ஆச்சு மனசுல தெம்பு வந்தது. அப்றம் ஒருமாதம் ஆச்சி, சரினு டாக்டர் கிட்ட போனாங்க டாக்டரும் சொன்ன பின்னாடி தான் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

“உங்க மனைவி மாசமா இருக்கா கரு நின்னு இருக்கு பாத்திரமாக பார்த்துகோங்க” இத கேட்ட உடனே அவன் மகிழ்ச்சியா பத்தி நான் எழுத தேவ இல்ல வாசிப்பவர்கள் புரிந்து கொள்வீர்கள்.

ஆனாலும் கருப்பையா அவங்க குடும்பத்துக்கு சொல்ல கூடாதுனு முடிவு பண்ண.

அவனோ இதுவர பண்ண செலவ நினைத்து பார்க்கல, மனைவி கரு உண்டான பிறகு, அவனுக்கு செலவு பத்தின பயம்.

ஆறு, ஏழு மாசம் ஆனா அவ கூடவே இருக்கனும், அவள பத்திரமா பார்த்துகனும், இப்போ மாசம் ரெண்டு தான் ஆகுது, நாலு மாசம் வேலைக்கு போனா ஒரு நாளைக்கு கரும்பு வெட்டூன 350, அப்படி இப்படி கையில 30,000 நிக்கும், அவ பிரசவ செலவு குழந்தைக்கு எல்லாம் ஏதோ ஒரளவு அட கட்டும், இப்படி மனகணக்கு போட்டான்.

“மங்களம் நான் நாளைக்கு காரைக்குடிக்கு கரும்பு வெட்ட போரேன், பின்னாடி செலவுக்கு பணம் தேவைப்படும்”

“சரிங்க”

“நான் மட்டும் தனியா” , என ஆரம்பிக்கும் போதே,

“அது என்ன பண்ண முடியும் மா தனியா தான் இருக்கனும்”

“நான் வேணும்னா அத்த வீட்டுக்கு போகட்டுமா”

“எப்படி மங்களம் இப்படி இருக்க அவங்க உன்ன எவ்வளவு அசிங்கபடுத்துனாங்க”

“இல்லங்க தனியா இருக்க பயமாக இருக்கு”

“தனியால இல்ல நாளைக்கு ஊருல இருந்து எங்கப்பத்தா வருவாங்க”

அப்றம் அவங்க சொல்லுரத கேட்டுக்கோ எத சாப்பிடனும் சாப்பிட கூடாதுனு. நான் வாரம் வாரம் ஞாயித்து கிழம ஒரு எட்டு பாத்துட்டு போரேன்.

இப்படி ஆறுதல் சொல்லிட்டு கருப்பையா கரும்பு வெட்ட கிளம்பிவிட்டான்.

அவன் சொன்ன மாதிரியே ஊருல இருந்து அவன் பாட்டி வந்துட்டாங்க, வயசான காலத்துல அவளுக்கு இவ துணையா இவளுக்கு அவ துணையா.

யாருமில்லமா தனியா இருந்திருப்பேன், இந்த கிளவி யாச்சும் வந்தாலேனு சந்தோஷம் பட வேண்டியது தான்.

மூணு மாசம் இதுவர சாப்பிட்ட மாத்திரை தீந்து போச்சு புதுசா மாத்திர வாங்க ஆஸ்பத்திரிக்கு தான் கிளம்பிவிட்டாள் மங்களம், வழக்கம் போல் தான் பஸ்ல சீட்டுக்கு அதிகமா ஆளுங்க உள்ள, தெரியாம ஏறிட்டா.

படியில நின்னவ ரெண்டு ஸ்டாப் தள்ளி ரெண்டு ஸ்டெப் உள்ள போனா, கூட்டம் நெரிசல் ஒத்துகல, கொஞ்ச நேரத்துல பின்னாடி இருந்து ஒரு கை பட்டுச்சு, என்னனு திரும்பி பார்த்தே

ஒரு ஆம்பள, குடிச்சுட்டு இருந்தான்,

அவளும் பொறுமையா கொஞ்சம் முன்னாடி போனா.

அடுத்து ஸ்டாப் வந்துச்சு சீட்டுல உக்காந்து இருந்த ஒருத்தர் இறங்க, அந்த சீட்டுக்கு யார்னு ஒரு கேள்வி,

அந்த குடிகாரன் மறுபடியும் மேல கை வச்சான்

“பாப்பா இந்த சீட்டுல நீ உக்காந்துகோ”

“இல்ல வேணா”

அவன் “இல்ல நீயே உக்காந்துகோங்கமா, நான் நின்னுகிறேன்”

அவள் மறுபடியும் கேக்கல

ஏனா ஆம்பளை புத்திய பத்தி தான் இந்த உலகத்துக்கே நல்ல படியா சொல்லி வெச்சி இருக்கோமே

மங்களத்த அவனே இழுத்து உக்கார வச்சான்.

மகளே என்ன தப்பா நினைச்சியாமா நான் உனக்கு அப்பா மாதிரி மா,

நீ துணி போட மறந்துட்டியாமா

பின்னடி ஃபுல்லா இரத்தமா இருக்குமா

… முற்றும்…

2 Likes

அட்மின் அண்ணா, சிறுகதை, எழுத்துப் போட்டிகாக, இந்த தளத்திற்கு புதிது நான் பதிவு செய்ததை ஏற்று கொ‌ள்ளு‌ங்க‌ள், :pray::pray::pray: