நினைவு…
இன்றும் உன் நினைவுகள்,
என்னுள் தீம்பிழம்பாய்…
பெற்றோரின்,
ஆசைக்காய் என்மீது
காதலை மறைத்து
நீ செய்து கொண்ட திருமணம்
அதற்காக உன்மீது
எனக்கு கோபமில்லை
உயிரே…
உன்மனம்
இன்றும் அதை
நினைத்துக்
கூனிக்குறுகி
நிற்பதைக் காண்கிறேன்
கண்மணியே…
நம் கடந்த காலங்களில்
நீ நிகழ்த்திய
உன் கண் அசைவே
என்னை இன்றும்
உயிர்ப்புடன்
இருக்கச் செய்வதை
அறிவாயா உயிரே???
உன் கடையிதழ்
சிரிப்பில்,
தொலைந்த நாட்களை
இன்றும் சேமித்துள்ளேன்
மனம் என்னும்
பொக்கிஷ பெட்டகத்தில்…
பெண்ணே நீ
இல்லை என்றபோதிலும்,
உன் நினைவுகள் போதும்
அன்பே…
இந்த ஈரேழு
ஜென்மங்களுக்கும்…
உயிர் துறக்கும்
போதிலும்
உனை காணவே
வேண்டுகிறேன்
என் நினைவுக் காதலியே…
By
R.மோனிகா
- List item