கிடைக்காத தொட்டில்
ஏங்கி தவிக்கிறேன்
மழலை மொழிக்காக
நித்தம் எண்ணி நிற்கிறேன்
மழலை நினைவாக
மாதர் என்ற
பெரும் தவத்தை
முழுமை அடைய
காத்திருக்கிறேன்
உயிர் சுமக்கும்
வரம் பெற
என் உயிரை
நான் சுமந்திருக்கிறேன்
உயிர் போகும்
வலி எனினும்
உயிர் பெறுவது
வரம் அல்லவா
என்னை அணைத்திட
பிஞ்சு கரங்கள்
என்னை அழைத்திட
பிஞ்சு மொழிகள்
என் கன்னம்
கொய்ய பால்வண்ணப்பற்கள்
என்னையே சுற்றிவர
பிஞ்சு கால்கள்
என்று எண்ணியே
நான் காத்திருக்கிறேன்
ஏங்கி ஏங்கி
நான் அழுதாலும்
ஏங்கலாகுமோ சேலையில்
கட்டிய தொட்டில்
ஆறாகுமோ என்
கண்ணீர் தொட்டில்
என்று கிட்டுமோ
கிடைக்காத தொட்டில்
- ஜீவா நாராயணன்