Community

வினுத்ரா சிறுகதை

வினுத்ரா

                               வினுத்ரா

சாரல் மழை காற்று ஜன்னல் வழியே லேசாக முகத்தில் பட விழிப்பு ஏற்பட்டாலும், எந்திரிக்கலாமா? இல்ல இன்னைக்கு லீவ் போட்ரலாமா ? ஒரு வேளை நம்ம ஓவர் பொறுப்பா ஆபிஸ் போக, மழை அதிகமாகி போகுற வழியில பாதி தூரம் போய் மாட்டிக்கிட்டா வீடு கூட இல்ல நின்னு பேகலாம்னா. … என்று ஆழ்ந்த சிந்தனையில் நமது கதாநாயகி படுக்கையை விட்டு எழாமல் புரண்டுக் கொண்டிருக்க, அம்மா லெட்சுமி அடுப்பங்கரையில் இருந்து, ‘இப்ப எழுந்து வெளிய வரலனா தண்ணிய கொண்டு வந்து தலைல ஊத்திடுவண்’ வினு…என்று ஆங்கிரி அம்மாவாக மாறி கத்த…இதுக்குமேல உதை தான் வாங்குவோம் எந்திரிச்சு இன்றைய பாரத போர்க்கு ஆயத்தமாவோம் என்று எழுந்து அலுவலகத்திற்கு தயாராகினால் வினு என்கிற வினுத்ரா( நம்ம ஹுரோயின்)

வினுத்ரா ரெடி ஆகட்டும் நம்ம வினுத்ரா பற்றி சின்னதா ஒரு சிறு குறிப்பு பார்ப்போம். …

வினுத்ரா பிறந்து ஒரு வருடத்திலேயே வினு தந்தை விபத்தில் இறந்துவிட தாயார் லெட்சுமி தான் வினுவிற்க்கு அனைத்தும். லெட்சுமிக்கு கணவர் இறந்த போது 26 வயது மட்டுமே லெட்சுமியின் குடும்பத்தினர் எவ்வளவு வற்புறுத்தியும் மறுதிருமணம் செய்துக்கொள்ள லெட்சுமிக்கு விருப்பம் இல்லை. .வேறு வழியில்லாமல் உறவினர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வந்தனர்.லெட்சுமிக்கு கணவர் செய்துவந்த டெக்ஸ்டைல் தொழிலில் அனுபவம் உண்டு அதையே தொடர்ந்து செய்ய ஆரம்பித்தார். வினுவிற்க்கு குறும்புத்தனம் மிகவும் அதிகம், சந்தோஷமாக இருந்தாலும், தந்தை இல்லை என்ற எண்ணம் எப்போதும் வினுவிற்கு தோன்றிக்கொண்டுதான் இருந்தது…இப்போ நம்ம வினு பெரிய மனுசிங்க… அட, ஆமாங்க! காலேஜ் முடிச்சி வினு ஆடிட்டர் கிட்ட ஜூனியரா சேர்ந்து வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டா…

சரிங்க வினு ரெடி ஆகிட்டா ஆபிஸ் அனுப்பி வச்சுட்டு நம்ம விக்ரம போய் பார்த்துட்டு வருவோம். … அட மறந்துட்டீங்களா ஹுரோயின் க்கு ஹூரோ இல்லனா எப்டி ஆமாங்க நம்ம ஹுரோ பேரு தான் விக்ரம்…

கண்ணாடிக்கு முன் நின்று தன்னை தயார் செய்து கொண்டு, சாம்பல் நிற சட்டை, கருப்பு நிற கோட், கருப்பு நிற பேண்ட், கறுப்பு நிற ஷூ அணிந்து டை சரியாக இருக்கிறதா என சரிபார்த்து விட்டு வாசனை திரவியத்தை தெளித்து வெளியே வந்த விக்ரமை பார்த்த சீத்தாவிற்கு கண்களில் கண்ணீர் வர சட்டென்று கண்ணீரை துடைத்து கொண்டு, வாப்பா, ‘டிபன் சாப்டு போ’, என்று அழைக்க கடமைக்கு சென்று சாப்பிட்டு விட்டு அலுவலக மீட்டங்க்கிற்க்கு சென்றான்.அலுவலகம் சென்ற விக்ரமுக்கு அலுவலகத்தின் அனைத்து பகுதிகளும் மித்ராவை நினைவில் கொண்டு வர சில நிமிடம் மித்ராவின் உருவம் கண்முன் தோன்றி மறைந்தது.சட்டென்று அறை கதவை விக்கரமின் தந்தை ராமசந்தரன் திறக்க மித்ராவின் நினைவில் இருந்து மீண்டு இயல்புக்கு வர முயற்சித்தான். விக்ரமின் எண்ணம் அறிந்த ராமசந்திரன் மீட்டிங் ஹால் ரெடி விக்ரம் வா என்று அழைத்தார்.
விக்ரம், மித்ரா தன் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களில் இருந்து மீள முடியாமல் இயந்திரம் போலவே தன் தாய் தந்தைக்காக வாழ்ந்து கொண்டுருந்தான்.
விக்ரம் குடும்பத்தினருக்கு பூர்வீகம் தமிழ்நாடு தான் பின்னர் தொழில் நிமித்தம் அயல்நாடு சென்றார்கள் அங்கேயே செட்டில் ஆகினர்.விக்ரம் என்னதான் அயல்நாட்டிலேயே வளர்ந்தாலும் தாய் நாட்டு பண்பாடு மேல் மரியாதை உள்ளவன் தன் தாயின் மறு உருவமாக மித்ரா இருப்பாள் என்றே எண்ணினான்.அனைத்தும் இப்படி கற்பனையாக முடியும் என்று எண்ணவில்லை…விக்ரமின் மன மாற்றத்திற்கு இந்தியாவிற்கு சென்று விடலாம் என்று முடிவு செய்து அதற்கான ஆயத்தங்களில் ஈடுப்பட்டனர் விக்ரமின் பெற்றோர்.
வினு அலுவலகத்திற்கு சென்றதில் இருந்து ஒருவித பரபரப்பை உணர்ந்தால் வினுவின் ஹெட் கிருஷ்ணன் வினுவின் தாய்மாமனே அதனால் வினுவிற்க்கு அங்கும் செல்லமே… கிருஷ்ணன், ‘வினு’, என் பிரண்ட் அப்ராட்லந்து அடுத்த வாரம் வருகிறார் அவர் கம்பெனிக்கும் நம்மதான் இனி ஆடிட்டிங் ,சரியா? நீ தான் எல்லாம் பாத்துக்கணும் நான் உதவி பண்றேன், என்று கூறினார். ’ எப்போதும் நான் தானே பாராக்கிறேன் இது என்ன மாம்ஸ் புதுசா? 'என்று வினு கேட்டால்.சும்மா சொன்னேன் என்று கிருஷ்ணன் மனதில் கடவுளை வேண்டிக்கொண்டார்.

வினு வழக்கம் போல இரவு உறங்க சென்றால் ஆழ்ந்த உறக்கத்தில், அழகான மணமேடையில் வினு மணக்கோலத்தில் வீற்றிருக்க அருகில் ,கிருஷ்ணன், லெட்சுமி சந்தோஷமாக அட்சதையை தூவ கை தூக்க, வினு கழுத்தில் ஒரு இளைஞன் தாலி கட்டுகிறான்.லெட்சுமி ஆனந்த கண்ணீருடன் வினுவை பார்க்க வினு திடீரென்று தூக்கத்தில் இருந்து எழுந்தால்.,வினுவிற்கு, தான் திருமணம் ஆகி சென்றுவிட்டாள் தனக்காகவே வாழ்ந்த லெட்சுமி தனித்து விடபடுவாள் என்று திருமணத்தின் மீது ஈடுபாடு இல்லாமல் இருந்தால், ஆனால் கனவில் பார்த்த இளைஞனின் முகம் வினுவின் மனதில் ஒருவித கலக்கத்தை உருவாக்கியது இருந்தாலும் லெட்சுமியை எண்ணி தோன்றிய எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
மறுபுறம் விக்ரமின் குடும்பத்தினர் வினு வீட்டிற்க்கு அடுத்த தெருவில் இருந்த பங்களாவில் குடியேறி கம்பெனி வேலைகளை செட் செய்து கொண்டுருந்தனர். விக்ரமை அழைத்து கொண்டு ராமசந்திரன் கிருஷ்ணன் அலுவலகத்திற்கு சென்றார்.அவர்களை வரவேற்ற கிருஷ்ணனுக்கு விக்ரமை வினுவிற்க்கு திருமணம் செய்தால் என்ன என்ற எண்ணம் சட்டென்று தோன்றியது.விக்கிரமிற்கு அவசர அழைப்பு வர டிரைவரை அனுப்பி வைப்பதாக கூறி கார்ரை எடுத்து கொண்டு கிளம்பினான்.விக்ரமின் தந்தை நீண்டநாள் சென்று தோழனை பார்த்த சந்தோசத்தில் பேசிக்கொண்டிருக்க மாமா என்று அழைத்தவாறே வினு உள்நுழைந்தால், கிருஷ்ணன், ‘வா வினு’ என்று அழைத்தார்,‘வினு போனவாரம் சொன்னேன்ல அப்ராட் கிளைண்ட் மை பிரண்ட் ராமச்சந்திரன்’ என்றார், ராம், இது என் தங்கை மகள் வினுத்ரா என்று கூற, வினுவை பார்த்து ராமச்சந்திரன் அதிர்ச்சியில் மயக்கம் ஆனார்.
சந்திரா மருத்துவமனையில் பதட்டத்துடன் வினுத்ரா, கிருஷ்ணன், நிற்க ராமச்சந்திரன் பர்சில் இருந்த தகவலைக் கொண்டு விக்ரமிற்க்கு தகவல் கொடுத்து இருந்தார்.மருத்துவமனை வந்த விக்ரம் அறை வாசலில் கிருஷ்ணன் அருகில் நின்ற வினுத்ரா வை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓடி வந்து வினுத்ரா வை கட்டி அணைத்து முத்தமிட தொடங்கினான்.சற்றும் எதிர்பாராத வினுத்ரா அதிர்ச்சியில் அவன் பிடியிலிருந்து மீள முடியாமல் ஒரு புறமும் கனவில் பார்த்தவன் எவ்வாறு நேரில் வந்தான் என்று குழப்பத்தில் விக்ரமை பிடித்து தள்ளி விக்கரமை அடிக்க கை ஓங்கினால் விக்ரம், ‘மித்து ஏன் என்ன விட்டு போன?’ என்று மீண்டும் மீண்டும் கூறி வினுவை கட்டுயனைத்தான். அந்த சமயம் அங்கு வந்த விக்ரமின் தாயார் மித்ரா என்று அழைக்க, விக்ரம் ,அம்மா மித்து வந்துட்டா அம்மா என்று தாயை

கட்டியணைத்துக் கொண்டான். 3 வருடங்களாக விக்ரமிடம் இருந்த சோகம் நீங்கி விக்கரமின் மாற்றத்தை கண்டு சந்தோசத்தில் நின்றார் சீத்தா. அப்போது அறையில் இருந்து வெளியேறிய டாக்டர் ராமச்சந்திரன் திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியால் மட்டுமே மயக்கமடைந்தார் கவலைபட தேவையில்லை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூற அனைவரும் நிம்மதி அடைய வினுவும் கிருஷ்ணனும் ஒன்றும் புரியாமல் நின்றனர்.
வினுவின் வீட்டில் அனைவரும் இருக்க ராமச்சந்திரன் மித்ராவை பற்றி கூற ஆரம்பித்தார். மித்ரா அயல்நாட்டில் வளர்ந்த நவநாகரீக யுவதி விக்கரமின் பள்ளி தோழியும் கூட நாளடைவில் விக்ரமும் மித்ராவும் ஒருவரை ஒருவர் விரும்ப தொடங்கினர், நல்லவிதமாக சென்ற அவர்களுடைய வாழ்க்கையில் மித்ரா நடவடிக்கைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட தொடங்கியது.மித்ரா முற்றிலுமாக மாறி விக்ரமை வெறுப்பின் எல்லைக்கு செல்ல வைத்தாள். இறுதியாக ‘இனி உன்னுடன் இருக்க இயலாது’, விக்ரம்’ என்னை தொந்தரவு செய்யாதே’, என்று கூறி சென்றாள்.அவள் மீது ஏற்பட்ட அதீத வெறுப்பினால் விக்ரம் மீண்டும் மித்ராவை சந்திக்கவே இல்லை.ஆறு மாதங்கள் சென்ற பின்னர் மித்ராவின் தாயாரை எதார்த்தமாக பார்க்க அவர் விக்ரமிடம் கூறிய உண்மைகளை தெரிந்து தன் மேலேயே வெறுப்பு அடைந்தான்.மித்ராவிற்கு ஏற்பட்ட சிறு விபத்தில் தலையில் ஏற்பட்ட இரத்த கட்டினால் ஒவ்வாரு உறுப்பாக செயல் இழந்து இறக்கபோவதை அறிந்த மித்ரா விக்ரமின் எதிர்காலத்தை எண்ணியே தன்மீது வெறுப்படைய செய்து பிரிந்து சென்றிருக்கிறாள் என்று அறிந்தவுடன் மித்ரா எங்கிருக்கிறாள் என்று கேட்க மித்ரா இறந்துவிட்டாள் என்பதை அறிந்து கடைசியாக அவள் முகத்தை கூட பார்க்க முடியாத பாவி ஆகி விட்டேனே என்று தன்மீதே வெறுப்புற்று, தாய் தந்தைக்காக நடைபிணமாக வாழ ஆரம்பித்தான்.வினுத்ரா மித்ராவின் மறு உருவமாக இருக்கிறாள் என்றும், விக்கிரமிற்கும் வினுவிற்க்கும் திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்தார் விக்ரமின் தந்தை. வினுத்ரா லெட்சுமியை விட்டு வர முடியாது என்றுக் கூற பக்கத்தில் தானே இருக்க போகிறார் என்று சம்மதிக்க வைத்தனர்.

விக்ரமும் வினுவும் திருமணம் முடிந்து சந்தோஷமாக குடும்பத்தினர் உடன் வாழ்ந்தனர்
முற்றும் …

              எழுத்தாளர் :
      மணிமேகலை சிவக்குமார். M.L.,
      நாகப்பட்டினம் மாவட்டம்
      மின்னஞ்சல் : manimani6832@gmail.com
1 Like