பெண்மை
பெண் அவளுக்கு நிலா என்று பெயர்
வானிற்கும் அழகை சேர்ப்பாள்
பூமிக்கும் வெளிச்சம் கொடுப்பாள்
கருவுக்கும் கெளரவம் கொடுப்பாள்
விண்வெளியிலும் தன் கால் தடம் பதிப்பாள்
முள் பனியிலும் பவளமாய் ஒளிர்வாள்
வீட்டாலும் பெண்ணிற்கும் - இன்று
நாடாலும் திறமை உண்டு
கற்ப்பில் சிறந்தது பெண்மை
உயிரை கருவில் சுமப்பது பெண்மை
பெண் இன்றி யாதுமின்று
அந்த நிலவுக்கும் பெண்மை உண்டு
தாய் மடியில் உறங்கிப்பாரு அந்த
சொர்கத்தின் சுகத்தை காண்பாய்
சொர்கமே வேண்டாமென்று தாய்மடி நிரந்தரமாக்க
வரம் ஒன்றை கடவுளை கேட்பாய்
பெண்மை அது அழகு
பெண்மை அது கருணை
பெண்மை அது உண்மை
பெண்மை என்றும் பெருமை.