மூன்றாம்கை
அவசரமாக இயங்கும் காலை வேளையில்…
எனது கண்கள் இரண்டும் கண்ணாடியைப் பார்க்கும் வேளையில் சாப்பிடுகிறேன்…
எனது கைகள் இரண்டும் கைபேசியைத் தேடி ஓடும் வேளையில்
சாப்பிடுகிறேன்…
எனது கால்கள் இரண்டும் காலணிகளை
அணியும் வேளையில்
சாப்பிடுகிறேன்…
வேகமாக வெளியே வந்ததும்
வயிறு நிறைந்ததை உணர்ந்தேன்
எப்படி சாப்பிட்டேன்
எப்போது சாப்பிட்டேன்
என்ற கேள்வியோடு !!திரும்பி பார்த்தேன்
ஊட்டிவிட்ட கை கழுவாத நிலையில் என்னைப் பார்த்துக் கையசைத்துக் கொண்டிருந்தது…
ஆம் எனது மூன்றாம் கையாக…
எனது தன்னம்பிக்கையாக …
நின்றாள் என் தாய்…
ஆகாஷ் k
கந்தர்வக்கோட்டை
6382731644