Community

முதல் காதலி இரண்டாவது காதலன்

பரபரப்பான மதுரை இரயில் நிலையத்தில் அமைதியான காலை நேரம்.அரவிந்த் பயணச்சீட்டு வாங்கி விட்டு இரயிலின் வருகைக்காக காத்திருந்தான்…

டீ,காபி…டீ,காபி என்ற சப்தம் ரயில் நிலையம் முழுவதும் எதிரொலித்தது.அப்போது அவன் அவளைக் கண்டான்.பல வருடங்கள் யார் நினைவில் வாழ்கிறானோ அந்த பெண்ணைக் கண்டான்.அவள் வேகமாக அதே நேரத்தில் சோகமாக கண்களில் கண்ணீரோடு வந்து கொண்டிருந்தாள்.

அரவிந்த் அவளை அடையாளம் கண்டு ஆனந்தம் கொணடான்.அவன் ஹாஸ்டலில் படித்த போது அவளே அவன் குரூப் லீடர் .அவள் பெயர் தாரா இருவரும் ஒன்றாக சிறுவயதில் பள்ளியில் படித்தவர்கள்.சிறுவயதிலிருந்து இன்று வரை அவளை ஒருதலையாக காதலிக்கிறான்.

தாராவிடம் பேச முடிவு செய்து அவள் பின்னால் சென்றான் .ஆனால் அவளிடம் பேச அவனுக்கு தைரியம் இல்லை.அவன் செல்லும் இரயிலை மறந்து அவள் செல்லும் இரயிலில் ஏறினான்.

அப்போது இரயில் கிளம்பியது .அரவிந்த் தாராவிற்கு எதிரே உள்ள இருக்கையில் அமர்ந்தான்.தாராவுக்கு அரவிந்தை அடையாளம் தெரியவில்லை .ஆனால் அவள் பெரிய சோகத்தில் இருப்பதை அரவிந்த் புரிந்து கொண்டான்.திடிரென்று தாரா வெளியே செல்லும் வழியை நோக்கிச் சென்றாள்.

இரயில் வாசலில் நின்று அழுதுகொண்டே இரயிலிலிருந்து கீழே விழ முயற்சி செய்தாள்.அப்பொழுது அரவிந்த் உடனே அவளை பிடித்துக்கொண்டு 'தாரா! ஏன் இப்படி பண்ற உனக்கு என்ன ஆச்சு? 'என்று கேட்டான்.

‘என்னை விடுங்க எனக்கு வாழவே பிடிக்கல’,என்ற தாரா ஒரு நிமிடம் சிந்தித்து ஆச்சர்யத்துடன் 'நீங்க யார்?உங்களுக்கு எப்படி என்னைத் தெரியும் ?'என்று கேட்டாள்.

அரவிந்த் மீண்டும் சீட்டிற்க்கு கூட்டிச்சென்றான்.அவளிடம் தன்னைப்பற்றி அறிமுகம் செய்து கொண்டான்.‘நான் உன்னோடு சிறுவயதில் பள்ளியில் படித்தேன்.நீதான் என் குரூப் லீடர் ,இடையில் காதுல அடிபட்டதால நா டீசி வாங்கிட்டு எங்க ஊருக்கே போய்ட்டேன் அதற்கு அப்புறம் நாள் உன்ன இப்போதான் பார்க்கிறேன்’ என்றான்.

தாராவுக்கு அவனை ஞாபகம் வந்துவிட்டது.'டேய் அவனா நீ !!எப்படி இருக்க டா?'என்றாள்.‘நான் நல்லாதான் இருக்கேன் ஆனா நீ ஏன் இப்படி இருக்க ?உனக்கு என்னதான் ஆச்சு?’ என்றான்.

தாரா அழுதுகொண்டே பேசினாள் ,‘நானும் ரவிங்கற பையனும் ஐந்து வருசமா லவ் பண்ணேம்(அரவிந்த் மனதில் பெரும் இடி) இப்போ நான் பணக்காரி இல்லைனு சொல்லிட்டு வேற ஒருத்தியை அவன் லவ் பண்ணறான்.(தற்போது இடியுடன் கூடிய பெருமழை).அதான் எனக்கு வாழவே பிடிக்கல நான் சாகப்போறேன் டா’.

அரவிந்த் சிறுபுன்னகையுடன் பேச ஆரம்பித்தான். ‘இப்படி ஒருத்தன் உன்ன விட்டுட்டு போனதுக்கு நீ தற்கொலை பண்ணிக்கலாமா?உன்னை விட்டுட்டு போனதுக்கு அவன்தான் தற்கொலை பண்ணிக்கணும் ,பணம் வரும் போகும் ஆனா உண்மையான பாசம் வரும் ஆனா போகாது தாரா ,அவன் உன்ன உண்மையா லவ் பண்ணல தாரா அவனுக்காக நீ உன் உயிரை இழக்கக்கூடாது .அவன் முன்னாடி நல்லா வாழ்ந்து அவனை பழி வாங்க வேணும் தாரா.’

சரி,’ நீ தற்கொலை பண்ணியே ஆகணும்னா நா ஒரு வழி சொல்லறேன் ,நீ பேசாம என்னை கல்யாணம் பண்ணிக்கோ தற்கொலைக்கும் அதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை’ என்றதும் தாரா அதிர்ந்தாள்.

'என்ன சொல்லறடா?'என்று தாரா கேட்டாள்.அரவிந்த் நிதானமாக பேசினான் ,'நா உன்ன மட்டும்தான் சின்னவயசுல இருந்து லவ் பண்ணறேன்.என் சின்ன இதயத்துல உன்னைத் தவிர வேற யாருக்கும் இடமில்லை '.

‘நீ இப்பவும் தற்கொலை பண்ணிக்க ஆசைப்பட்டா பண்ணிக்கோ ஆனா நா இனி உன்ன விட்டு பிரிய மாட்டேன் அதனால நானும் உன்னோட சேர்ந்து செத்திருவேன் தாரா’.

தாரா கண்களில் கண்ணீரோடு’ உன்னைக் கல்யாணம் செய்ய எனக்கு முழு சம்மதம்’ என்றாள்.உடனே அரவிந்த் தாராவை அணைத்துக் கொண்டான் .அப்போது அவன் முதுகை தட்டிய டிடிஆர் ‘சார் டிக்கெட் பிளீஸ்’ என்றார்…