கொரோனா.
நாம் நமது பாரம்பரியத்தை தொலைத்து ,
நம்மை நாமே சிறைப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்,
கொரோனாவால்!
வேப்பிலையை அரைத்து
பத்து போட்டால்
கொடிய நச்சு கூட நசிந்து விடும்,
ஆனால்,
நாமோ இன்று
உடலை அறுத்து எடுக்கும் பயங்கரமான,
வேதிக் கலவையை
கைகழுவ உபயோகிக்கிறோம்!
மஞ்சளும் உப்பும் கலந்த நீர் தொண்டையில் ,
தேங்கிய விஷத்தைமுறிக்கும் என்பதை கூட மறந்து நிற்கிறோம் இன்று!
மிளகு கொண்டு வெற்றிலையை மென்றால்
கடும் விஷம் கூட,
காணாமல் போகும் என்றார்,
நம் முன்னோர்!
ஆனால் அதை மறந்து,
நம் பாரம்பரியத்தை,
காணாமல் போகச் செய்தோம்!
முற்றத்தில் தீபமேற்ற துளசியையும்,
வெளியே தெய்வமாய் நின்ற வேப்பிலையும்,
பிராணவாயு கொடுக்கும்
ஒரு அற்புதம்
என்பதை மறந்து,
மரத்தை அளித்தோம்!
மரணம் தாண்டி
மானுடத்தை காக்கும்
மரத்தையும் காட்டையும்
அழித்து நின்றோம்!
மல்லி சுக்கு இன்னும் எத்தனையோ பொருட்கள்,
வைரஸை அழிக்கும்,
அடுப்பங்கரையில் உள்ள
அருமருந்து என்பதையும் மறந்து,
அந்நியரிடம் கையேந்துகிறோம்,
மருந்துக்காக!
என்ன கொடுமை!
நம் பாட்டன் பூட்டன் கண்டெடுத்த ,
சித்த முறையும்
மறந்து கலப்படமான
மருந்தை உண்டு,
நோயிற்கு இனாமாக,
இன்னொரு நோயை வாங்குகிறோம்!
இனிமேலாவது விழித்திருப்போம்!
வரப்போகும் சந்ததிகளுக்கு,
நம் முன்னோர்கள்
விட்டுச் சென்ற,
பாரம்பரியத்தை கொடுத்து,
நமது இனத்தை காப்போம்!
- மீனுஜெய்