ஏழை
என் வீட்டில் இங்கே,
இலவசமாக மின்சாரம்
சூரியனின் உதவியால்!
முத்துத் துளிகள் சிந்துகிறது,
என் ஓட்டை குடிலில் மழையாக!
இரவில் ஒளிரும் விண்மீன்கள்,
என் வீட்டு ஓட்டையின் மேல் கோலமிடுகிறது!
ஒரு வேளை உணவைத் தேடி ,
தினமும் போராடும் வயிறும்…!
பாதி வயிறு நிறைந்த பின் ,
மீதியாக நிறையும் நீரும்!
பிள்ளைகளுக்குக் கொடுத்து விட்டு ,
முழு வயிறு நீருடன் உறங்கும்,
பெற்ற தெய்வங்கள்!
கால்வயிற்கே பஞ்சம் இங்கே,
கல்யாண கனவு காணும் பெண்கள் இங்கே!
கண்ணீர் துளிகளை மட்டுமே வைத்துக் கொண்டு ,
கரையேர தெரியாமல் தவிக்கும் எம் வீட்டு கன்னியர்கள்…!
அப்படியே கடன் வாங்கி செய்த மனத்தால்
கடன் கட்ட முடியாமல் தவிக்கும் பெற்றவர்கள்…!
தட்சனை பற்றாமல் தந்தையைத் தேடி வரும் பெண் பிள்ளைகள்…!
சமாதானம் செய்து ,
பெண்ணை புகுந்த வீட்டில் விட்டு வர,
வெடிக்கும் மண்ணணை அடுப்புகள்,
உதிரத்தில் உதித்த பிள்ளையை
உலையில் எரித்த வேதனை…!
வீட்டுச் சுமையால் வயதை தொலைத்து,
வாழ்க்கையை இழந்து அயல்நாட்டில்,
போராடும் ஆண் பிள்ளைகள்…!
இன்னும் எத்தனை போராட்டங்கள்
ஆனால் சுருக்கமாக எங்களை, அழைக்கின்றனர்
ஏழை என்று…!
-மீனு ஜெய்