Community

உன்னில் துளைந்த நான்

எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கை நிம்மதியானது தான், ஆனால், அப்படி ஒன்னு யாருக்கு இருக்குனு பார்த்தா இல்லைன்ற பதில் தான் கிடைக்கும். மீனுக்கு நீராட தேவை, தேனிக்கு பூவோட தேவை, மரத்துக்கு வெயிலோட தேவை மனிதனுக்கு ஒரு மனதோட தேவை. இதுல எது கிடைக்கல என்றாலும் அதை தேடி எதிர்பார்ப்பு வரது இயற்கைதான். அப்படி தான் எனக்கு உன்னோட தேவை. உன்னை தேடி ஒரு பயணம்.

நான் உயிர் வாழ நீ தேவையா…? என்றால் இல்லைனு சொல்ல முடியும். ஆனால் நீ இல்லாம இந்த வாழ்க்கை எப்படி இருக்கும்னு நினைச்சு பார்க்க கூட முடியாது. அது மட்டும் இந்த மனசுக்கு தெளிவா புரியுது. பேருந்தில் போய்க்கொண்டிருந்த உன்னை பார்த்தேன். ரொம்ப அழகா இருந்த, பார்த்துகிட்டே இருந்தேன், இன்னும் அழகாகிகிட்டே போன. திடீர்னு பேருந்து கிளம்புணதும், எனக்குள்ள ஏதோ தொலச்சுட்டத போல இருந்தது. என்னமோ புரியாத உணர்வு மொத்தமா விழுங்கிடுச்சு. மந்திரிச்சு விட்ட கொழியா சுதிட்டு இருந்தேன்,
சில நேரம் நானாக பல நேரம் உன் நினைவாக.

ஒருவேளை உன்கிட்ட வந்து பேசியிருந்தால் இப்படி இருந்திருக்க மாட்டனோனு தோன ஆரம்பிச்சுது. அதே நேரம், பேசியிருந்தால் என்ன ஆயிருக்கும். நான் என்னனு சொல்லியிருப்பேன், அதற்கு நீ என்ன சொல்லியிருப்ப, நான் எப்புடியல்லம் சொல்லலாம் அப்படினு ஆயிரம் எண்ணங்கள் தலைய சுத்தி ஓடிட்டே இருந்தது. ஆனால் ஒரு முடிவுல உறுதியா இருந்தேன். உன்கிட்ட சொல்லனும், உன் கூட வாழ ஆசைப்படிரேனு, உன் கூட இந்த உலக்த ரசிக்கணும்னு, உனக்காக மீதி நாட்களை செலவிட தோணுதுனு.

ஆனா பயம், நீ முடியாதுனு சொல்லிட்டா, என்ன பன்ன…? அதுனால கணக்கில்லாத அளவுக்கு திட்டம் போட்டேன். அதில் என் மனச நேரா சொல்றத தவிர பெருசா எனக்கு எதும் தோணல. உன்கிட்ட மனச சொல்லியே ஆகனும் கிளம்பினேன். கால தரையில நிக்க விடாம கண் போன திசை எல்லாம் தேட வைத்தது இந்த மனசு. உன்னை பார்த்த போது உறைந்தது என் உலகம், நீ என்ன பார்த்தபொழுது நிக்காம ஓட ஆரம்பிச்சுடுச்சு. என்னோட இந்த மனச நிறுத்தி கட்டிபோட ஆயிரம் குதிரை பலம்போதுமா, இல்ல நூறு மின்னல்கள் தாக்க நிற்குமா தெரியல. ஆனா உன்னோட ஒரு வார்த்தை நிறுத்திடும்னு தோணுது. எனக்கு கடனா குடுப்பியா உன் வாழ்க்கைய, இதுவரைக்கும் நான் யோசிச்ச எல்லா முறையிலும் என் காதலை சொல்ல, உன் கூட இந்த வாழ்க்கைய பகிர.

இவ்வளவு நேரம் சொன்னது எல்லாமே உன்ன தேடுன தவிப்பும், என் மனசுல உன்ன பார்த்த உடனே ஏற்பட்ட உணர்வும் தான். ஏனென்றால், “நான் உன்ன காதலிக்கிறேன், உன்னோட பதிலுக்காக காத்திருப்பேன்”. பெருமூச்சு விட்டேன். கவிஞா் யாரோ சொல்லிட்டு போயுடாரு, " காதலியின் கடைக்கண் பார்வை பட்டால் காதலனுக்கு மாமலையும் சிறு கடுகாம்" அப்படினு. அர்த்தம் இப்போ புரியுது, உன் கண்ண பார்த்து பேசினதுக்க்கு அப்பறம் உலகமே லேசா தெரியுது. உன்னை கடைசி வரைக்கும் கதலிப்பேனா, யாரோ உலருறானு நீ நினைக்கலாம். ஆனால் உன்னை மறந்தாலும், எனக்கு திரும்ப திரும்ப உன் மேல காதல் வந்துடே இருக்கும் என்று தோணுது. அதான் நேரா வந்துடேன்.

அப்படினு சொல்லும்போது, பொடனி மேலயே ஒரு அடி, திரும்பி பார்த்தா என் நண்பன். காதல் சொல்ல கண்ணாடி பார்த்து பழகுடானா ஓலரிகுட்டு இருக்கனு, சொன்னான். நீ என்ன காதலிக்க போறியா இல்ல தொடர்கதை எழுத போறியா. இவளோ இழுத்தா ஒரு பக்கமா வாங்கிக்க போதுனு திட்டி தீர்த்தான்.

காதல் போதையில் இரும்பும் கரும்பு தானே. இவன் என்ன பில்லக்கா பையன். காதல் ஆழ் கடல்ல இருக்க கரை மாதிரி, பார்க்கதவனுக்கு கற்பனை பார்த்தவனுக்கு சொர்கம். நான் அந்த சொர்கதோட நடுல ஆடும் போது தொந்தரவு பண்ணாத, போயு உன் பொழப்ப பாரென்று சொன்னேன். பட்டுனு அதுக்கு வீதில ஆடிருந்தா நாலு காசாவது கிடைச்சிருக்குனு சொல்லிப்புட்டான்.

அது எப்படிதானு தெரில ஒருத்தனாள ஒன்னு முடியல அப்படினு தெரிஞ்சுட்டா தானா சுத்தி இருக்கவங்க ஞானி ஆய்டுறாங்க. கிளம்பின என்ன உக்கார வச்சு, அறிவுரை சொல்ல ஆரம்பிச்சான். நீ இப்படி போய்ச் சொன்னா, சொல்லி முடிக்குறதுகுள்ள அவளுக்கு கல்யாணமே ஆயுடும். ஒழுங்கா தெளிவா சொல்லுடா. கமல் மாதிரி பேசி கொலப்பி விட்டுடாத, அது இதுனு சொல்லிட்டே இருந்தான். இன்னைக்கு சிக்கன் பிரியாணி நல்லா சாப்புடனும்னு இருக்கவன்கிட்ட பருப்பு சாதம் உடம்புக்கு நல்லதுஎன்று சொன்னா காதில் விழுமா…? என் எண்ணம் எல்லாம் அவள சுத்திட்டு இருந்துச்சு.

அப்படியே, அவன டீலில்ல விட்டுட்டு அவள பார்க்க பொறப்புடேன். பேருந்து நிறுத்தத்தில் அவள் வரும் வண்டிக்காக காத்திருந்தேன். பொறுமையாக பேருந்து வந்து நின்றது. சன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தாள். கண் இமைக்காமல் அவளை ரசித்தேன். அவள் இமைக்கும் தாளதுக்கு இதயம் துடித்தது. தனி உலகமாய் மாறியது அந்த 8 அடி இடைவெளி. சில்லென்று தென்றல் மோத, மொத்தமாய் சரிந்தேன். பேருந்து கிளம்பியது. கண் மட்டும் வேளை செய்தது, உடல் உறைந்தது. மற்றும் ஒரு நாள் போனது, அவளிடம் என்னை துளைத்து.

3 Likes

Aarambam sariyaaga illai… aadhalal kadhaiyai naan padikkala… manikkavum

Poluthu pogaatha pothu… paduthu paarungal… oru velai pidikkalam…

Analogy, enaku seriyaga pulan pada villai… adhai dhaan sonnen… nandri