சீக்கிரம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று வேகமாக மோட்டார் வாகனத்தை செலுத்தினார் மருத்துவர் கிருஷ்ணன் . இரவு 8 மணி ஆகியதால் தனக்காக நோயாளிகள் காத்து இருப்பார்கள் என்று எண்ணி கொண்டே போய்கொண்டு இருந்தார் .
சற்றென்று அந்த வாகனம் மீது அடையாளம் தெரியாத ஆள் விழுந்தான்.
இரவு 10 மணி ஆனது அந்த நபரின் அறுவை சிகிச்சை எல்லாம் முடிந்து தன் அறைக்கு வந்தார் . திடீரென்று சிரித்தார் . அங்கு வந்த செவிலியர் மேரி விசித்திரமாக அவரை பார்த்தாள் . அவர் அவளை கவனித்து தன்னிடம் இருந்த சிறு காகிதத்தை தந்தார் அதில்
என் பெயர் முகமத் பார்ஹான் தன் சடலம் கிடைத்தால் கீழ் உள்ள முகவரிக்கு கொண்டு போய் சேர்க்கவும் என்று எழுதி இருந்தது .
இதில் என்ன சிரிக்க உள்ளது❓ என்று கேட்டல் செவிலியர்
அதற்கு அவன் சாக வேண்டும் என்று பாலத்தில் இருந்து குதித்தான் ஆனால் எனக்கு முன்னாள் உள்ள பழ மூட்டை ஏற்றிய லாரியில் விழுந்து பின் தன் வாகனம் மீது விழுந்தான் அவனின் அதிஷ்டம் மற்றும் அவனின் இறப்பு இப்பொழுது இருக்க கூடாது என்று கடவுள் நினைத்துள்ளார் அதனால் தான் மாநிலத்தின் சிறந்த மருத்துவர் ஆகிய என்னிடம் வந்துள்ளான் அதுவும் இல்லாமல் தான் இப்போது எழுதிக்கொண்டு இருக்கும் ஆய்வுக்கட்டுரை தற்கொலை எண்ணங்களை பற்றியது இது போல் உள்ள ஒற்றுமைகளை கண்டு கடவுள் தனக்கு வைத்த சோதனை என்று எண்ணி சிரித்தேன் .
இரண்டு நாட்கள் கடந்தது …
பார்ஹான் கண் திறந்தான் , சற்று நேரத்தில் கிருஷ்ணன் வந்தார் அவனுக்கு உணவு குடுக்க சொல்லி விட்டு சென்றார் .
பின் இரண்டு காவலர்கள் வந்தார்கள் அவர்கள் அவன் உணவு உண்பதை பார்த்து ‘ஏய் தம்பி தற்கொலை பண்ண உனக்கு வேறு இடம் கிடைக்கலையா ஒரு வாரத்தில உன்ன நீதிமன்றத்தில் நிறுத்தி உன்ன ஒரு வருஷமா இல்ல ரெண்டு வருஷமா உள்ளை தள்ளுவாங்க போய் சிறையில் களி திங்க தயாரா இரு’ என்று கூறி சென்றுவிட்டனர்.
சுற்றி உள்ளவர்கள் அவனை ஒரு விதமாக பார்க்க அவனுக்கு அவமானமாக இருந்தது .
பின் இரவு 9 மணி அளவில் கிருஷ்ணன் வந்தார் இப்போ கொஞ்சம் better ஆஹ் feel பண்றியா? என்றார் .
இப்போ பரவலா sir கொஞ்சம் உடம்புல வலி இருக்கு என்றான் .
okay நான் மேரி கிட்ட aspirin கூடுக்க சொல்றேன் நீ நிம்மதியா இரு என்றார்.
மேலும் 1 வாரம் கடந்தது …
நீ இன்னும் 3 நாளா discharge ஆயிடலாம் என்றார். அவர் தன் மனத்துக்குள் அவனிடம் தற்கொலை பற்றி கேக்க வேண்டாம் அப்புறமாக கேப்போம் என்று எண்ணினார் .
அவர் காலையில் தன் வீட்டுக்கு கிளமும்போது மருத்துவமனையில் ஒரு சலசலப்பு என்ன என்று பார்க்க போனார் பார்ஹான் மறுபடியும் தற்கொலை முயற்சி செய்து உள்ளான் பூச்சி மருந்தை குடித்துள்ளான் ஆனால் அது காலவதியானதால் இம்முறையும் தோல்வியே . கிருஷ்ணனுக்கு கோபம் வந்தது தன கோபத்தை அடக்கி கொண்டு சிகிச்சை அளித்து வீட்டுக்கு சென்றார் .
அன்று மறுநாள் அவனிடம் பேச வந்தார் உனக்கு என்ன ப்ரிச்சனை ? ஏன் இப்படி பண்ற நல்லா தான இருக்க இல்ல யாராச்சும் ஏதாச்சோம் சொன்னாங்களா ? மேரி ஏதாச்சோம் ? என்று கேள்வி அடுக்க கொண்டு போக இல்லை sir என்று பதில் வந்தது . அப்பரும் படிச்சேன் வேலை கிடைக்கல, கிடைச்ச வேலை புடிக்கல , சம்பளம் பத்தல, காதலி வேற ஒரு தன் கூட போயிட்டா அப்பா இல்ல, அம்மா பித்து பிடிச்சு அவங்க அண்ணன் வீட்டுல இருக்காங்க, அங்க அவங்கள கேவலமா நடத்துரங்கா இதான் உன் பிரச்னை correct ஆ என்றார் . எப்படி sir ? என்று கேட்டான் . நீ இங்க இருந்த 10 நாளா உன்ன பத்தி மட்டும் தான் நான் யோசிச்சேன் உன்ன பத்தி உன்கிட்ட இருந்த சீட்ல இருக்கிற விலாசத்துக்கு சென்று கேட்டேன் உன் போன் ல உன் நண்பர்கள் கு பேசினேன் நீ இருந்த மேன்ஷன் கு போய் அங்க இருகிறவங்களோட பேசினான் . உன்ன பத்தி எல்லாம் தெரிஞ்சு கிட்டு வரேன் . உன்ன வச்சி ஒரு ஆய்வு கட்டுரை எழுதிட்டு வரேன் என்றார்.
பரவால்ல நான் இதுக்காச்சும் உதவுறேனே என்றான் .
இதோ பார் இந்த உலகத்துல எனக்கு பிடிக்காதது மத்தவங்களுக்கு அட்வைஸ் பன்றது உனக்கு ஒரு 3 கதை சொல்றன் உனக்கு அப்றம் நீ தற்கொலை பன்ன தோணிச்சுத்தன நானே உனக்கு வேஷம் வாங்கி தரேன் . என்று கதை சொல்ல துவங்கினார்.
- ஒரு பெரிய வெள்ளம் வந்தது அந்த ஊரில் உள்ள மாடுகள் ஆடுகள் பயிர்கள் எல்லாம் அடித்து சென்றது அப்போது ஒரு பெரியவர் வெள்ளத்தில் புகுந்து தன வீட்டில் உள்ள தையல் இயந்திரத்தை எடுத்து நீந்தி சென்றார் அவர் முகத்தில் ஒரு கர்வமான சிரிப்பு என் வாழ்க்கை என் குடும்பத்தை நான் பார்த்து பேன் என் மகனை பெரிய ஆளாக்குவேன் முடிஞ்சா மருத்துவர் ஆக்குவேன் என்றார் அவர் கனவு நிறைவேறியது .
- நல்ல சந்தோஷமாக இருந்த ஒரு செவிலியர் குடும்பம் ஒரு கார் விபத்தில் அவர் கணவனும் மகளும் இரக்க தன் வாழ்க்க முழுவதும் மற்ற பிள்ளைகளுக்கும் கல்வி செலவுக்கும் வயதானவர்க்கும் மருத்தவ செலவுக்கும் அர்பணித்தாள் . அவள் பெயர் மேரி
- தன் அப்பாவின் ஆசை நிறை வேற்ற இலவச அறுவை சிகிச்சை ஆசைப்பட்டால் மருத்துவ மாணவி இந்துமதி தன கனவை பற்றி அவள் காதலனோடும் நண்பர்களோடும் சொல்லி கொண்டே இருப்பாள் அவளின் ஆசை நிறைவேற்றுவதுக்குள் அவள் இறைவனடி செல்ல அவள் கனவுக்காக தன வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்து கல்யாணம் செய்து கொள்ளமல் மருத்துவ சேவை செய்கிறார் அவர் பெயர் கிருஷ்ணன் .
இந்த மூன்று பெரும் எப்போதோ தற்கொலை செய்ய எண்ணி கொண்டவர்கள் ஆனால் அவர்களிடம் இருந்தது ஒரு அர்த்தம் ஒரு லட்சியம் . என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார் . சில நாட்கள் கழிந்தது.
தற்கொலை குற்றத்துக்கு நீதிபதி முன் நின்றான் நீ எதாவது சொல்ல விரும்புகிறாயா ? என்றார் மரணம் எனக்கு இரு வாய்ப்பு அளித்தது நீங்கள் ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றான் . நீதி அன்னை புன்னகித்தாள் விடுதலைக்கு கிடைத்தது.