நிலவின் புன்னகையோ இரவின் ஒளியிலே!
கடலின் புன்னகையோ மோதும் அலையிலே!
மேகத்தின் புன்னகையோ சிந்தும் மழையிலே!
மலரின் புன்னகையோ வீசும் மணத்திலே!
மண்ணின் புன்னகையோ விதைக்கும்
விதையிலே!
மலையின் புன்னகையோ ஆர்ப்பரிக்கும்
அருவியிலே!
வெயிலின் புன்னகையோ நிழலின் பிம்பத்திலே!
நீரின் புன்னகையோ தாகத்தின் தணிவிலே!
வைரத்தின் புன்னகையோ தீட்டும் பட்டையிலே!
இசையின் புன்னகையோ பாடும் ராகத்திலே!
மரத்தின் புன்னகையோ கூடிவாழும் கூட்டிலே!
சிலையின் புன்னகையோ சிற்பியின் உளியிலே!
புடவையின் புன்னகையோ உடுத்தும் அழகிலே!
வானவில் புன்னகையோ ஏழுவண்ண நிறத்திலே!
பணத்தின் புன்னகையோ ஏழையின் முகத்திலே!
காதலின் புன்னகையோ கரம்பிடிக்கும்
தினத்திலே!
கண்ணின் புன்னகையோ சிமிட்டும் இமையிலே!
வினாவின் புன்னகையோ விடையின்
பொருளிலே!
இனிப்பின் புன்னகையோ தித்திக்கும்
சுவையிலே!
கவியின் புன்னகையோ மெய்சிலிர்க்கும்
நொடியிலே!
வேம்பின் புன்னகையோ மருத்துவ குணத்திலே!
வெட்கத்தின் புன்னகையோ முத்தத்தின்
முடிவிலே!
மௌனத்தின் புன்னகையோ கருத்தின்
அர்த்தத்திலே!
கல்வியின் புன்னகையோ அறிவின் விளைவிலே!
குடும்பத்தின் புன்னகையோ உறவின் புரிதலிலே!
தாயின் புன்னகையோ பிள்ளையின் உதட்டிலே!
தமிழின் புன்னகையோ உச்சரிக்கும் விதத்திலே!
வாழ்வின் புன்னகையோ விதிசெல்லும் வழியிலே!!!
— கவிகௌரி✍🏻
gowrimarimuthu2@gmail.com