Community

எது திமிர்?

பொதுவாகவே பெண்கள் என்றாலே ஒரு ஸ்பெஷல் தான். அழகு அறிவு அடக்கம் கொஞ்சம் திமிர். இதை எழுதி கொண்டு இருப்பவளும் ஒரு பெண்.

திருச்சி மாவட்டத்தின் அருகில் ஒரு மிகவும் அழகான கிராமம். அந்த கிராமத்தில் எல்லாமே பார்த்து பார்த்து ரசிக்கும் அழகே தனி. அங்கு மிகவும் தாழ்த்த பட்டோர் வசிக்கக்கூடிய அருமையான கிராமத்தில வழக்கம் போலவே பெரிய மிராசு என்னும் ஊர் தலைவர், ஊர் பஞ்சாயத்து என்று சகலமும் உண்டு.

இந்த கிராமத்தில் மூன்று அண்ணன் தம்பி. முதலாமவர் பச்சை. இரண்டாமவர் முருகன் மூன்றாமவர் கணகு.

இவங்களுக்கு அம்மா அப்பா ரொம்ப சின்ன வயசிலேயே இறந்து போனார்கள். மூவரும் பிழைப்பு தேடி

வெளியூர் பழனிக்கு செல்கிறார்கள். அவ்வப்போது கிராமத்தில் சொந்த பந்தங்களோடு தீபாவளி பொங்கல் னு போய்ட்டு இருந்து.

பச்சைக்கு திருமண வயதும் வந்தது. தாய் தகப்பன் இல்லாததால் இவர்களுடைய பெரியப்பா பசங்கனு சொல்ல கூடிய லிங்கமும் கக்கனும் இன்னும் சக உறவினர்களும் திருமணம் செய்து வைத்தார்கள். திருமணம் முடிந்ததும் இருவருக்கும் அரசாங்க வேலையும் கிடைத்துவிடுகிறது. பச்சை யின் மனைவி வீரம்மாள் கதையின் மிக முக்கிய பாத்திரம் பெயருக்கு ஏத்தவாறு சற்று வீரம் மிக்கவளாகவும் சற்று முன் கோபக்காரி.கிராமத்தில் இவளுக்கு திமிரு பிடித்தவள்னு பேரு. கிராமத்தில படித்த பெண்ணும் அவளே. ஊரில் அனைவருக்கும் ஓடி ஓடி நல்லது கெட்டதுக்களில் கலந்து கொள்வார்கள். ஆனால் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.

நடு ஆளு முருகனுக்கும் திருமணம் முடிந்தது. முருகனின் மனைவி திலகம். மிகவும் பொறுமை சாலி. இவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லை.

மூணாவது ஆளு கதையின் நாயகன். இவருக்கு சொந்தத்திலேயே மங்கம்மா என்று பெண்ணை திருமணம் முடித்து வைக்கப்பட்டது. இக்கதையின் இன்னொரு கதாநாயகி…அதிகமா யாருகிட்டயும் பேச மாட்டாள். இவர்களுக்கு அகிலா எனும் ரெண்டு வயது பெண் குழந்தை யும், கதிரவன் என்று ஒரு ஆண் குழந்தையும் பிறக் கிறது.ஆண் குழந்தை பிறந்த நாற்பதாவது நாள் குழந்தைகளின் தந்தை கார் விபத்தில் இறந்து விடுகிறார்.குடும்பமே சோகத்தில் ஆழ்ந்து விடுகிறது. செய்வது அறியாமல் இரண்டு குழந்தைகளோடு கலங்கி நிற்க்க. தனது தாய் தந்தையரோடு தனது பிறந்த கிராமத்திற்கு சென்று விடுகிறாள் மங்கம்மாள். கையில் வேலையும் இல்லை. கணவனும் இல்லை. இரண்டு குழந்தை களோடு ஒரு பெண் எவ்வளவு கொடுமை.

மங்கம்மாளுக்கும் பெரிய வயது ஒன்றுமில்லை. 24 வயதே இருந்தது. தனது 24 வயதில் இரண்டு குழந்தைகள் கணவனும் இல்லை. வேலையும் இல்லை. வசதியும் இல்லை. கவலையில் குடும்பமே இருக்க.

என்னதான் பெரியாரின் பூமியாகவும். பாரதி கவி பாடியிருந்தாலும் எத்தனை விதவை திருமணங்கள் சட்டத்தில் இருந்தாலும் ஏதோ ஒரு சில பெண்களுக்கு மட்டுமே மறு வாழ்வு அமைந்து விடுகிறது.

பெரும்பாலான பெண்கள் தனிமையில் இருக்கவே விருப்பம் தெரிவிக்கிறார்கள் .இது ஒரு புறம் கலாச்சாரத்தை காட்டுகிறதா என்ற கேள்வியும் வருகிறது.

ஒரு குழந்தை இருந்தாலே மறு மணம் பற்றி யோசிப்பவர்கள் இரண்டு குழந்தை என்றால் வாய்ப் புகல் கொஞ்சம் கம்மி. அதுவும் கிராமங்களில்.

மங்கம்மா செய்வதறியாது குழந்தை களுக்காக வேளைக்கு செல்ல ஆரம்பித்தாள். குழந்தை கள்ஆடு, மாடுகளுடன் விளையாயாடி கொண்டும் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து கொண்டும் வந்தார்கள் மங்கம்மா அருகில் சித்தாள் வேளைக்கு சென்று வருகிறாள்.

நாட்கள் வேகமாக ஓட குழந்தைகளை , தாய் தந்தை, உடன்பிறப்பு, சொந்த, பந்தம், கணவன் இறப்பு அனைத்தும் மறந்து, சித்தாள் வேளைக்கு வரும் ஒரு ஆண் மகனது துணையை தேடுகிறாள். யாரிடமும் சொல்லாமலே பழகிவிடுகிறாள்.

ஆனால் இந்த இரண்டு குழந்தை களும் தந்தை இல்லாமல் தனது தாயை மட்டுமே நம்பி இருக்கிறார்கள்.

ஓராண்டு முடிந்தது மங்கம்மா விற்கு மூன்றாவதாக ஆண் குழந்தை வீட்டில் பிறந்து விடுகிறது. கணவனை இழந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும். ஊருக்கு தெரியாமல் பச்சிளங் குழந்தையை மங்கம்மாளின் தாய். அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் குழந்தை இல்லாதவருக்கு கொடுத்து விட்டு யாருக்கும் தெரியாமலே இருந்து விடலாம் என்று இருக்க தனது சித்தப்பா சித்தி இருவரும் அந்த குழந்தை யின் தந்தை யாரென்று தேடிஅவளுடன் சேர்த்து வைத்து விடலாம் எண்டிருக்க அவனோ பயந்து போய் ஊரை விட்டு ஓடி விடுகிறான்.

செய்வதறியாது திகைத்து நிற்க குழந்தைகளோ பரிதாபமாக நின்று கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் குழந்தை களுக்கு எதுவும் தெரிந்து விட கூடாது என்பதற்காக அந்த குழந்தகளை உறவினர்கள் வீடுகளில் இங்கும் அங்குமாக விட்டு விடுகிறார்கள். தாயின் அன்பு அரவணைப்பு ஒன்றுமே அந்த குழந்தை களுக்கு கிடைக்கவில்லை.இரண்டு குழந்தை களும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகவும் எப்பொழுதும் அழுது கொண்டும் இருக்கிறார்கள். குழந்தை கள் சிறு வயது சந்தோசம் மொத்தமும் கிடைக்கவில்லை.நண்பர்களோட விளையாட்டு இல்லை. சிரிப்பு இல்லை.ஏதோ உறவினர்கள் சாப்பிடு என்றால் சாப்பிடுவார்கள். போய் தூங்கு எனறால் போய் தூங்குவார்கள். தனக்கு பிடித்த உணவு கிடையாது. கேட்கவும் முடியாது இந்த வயதில் வரக்கூடாத துயரம்.

ஊரே மங்கம்மா மீது கோபமாக இருக்க வீரம் மாலுக்கு பயங்கரமான கோபம் மங்கம்மா மீது. ஏனெனில் ஓர் படி(ஓர வர்த்தி ) அல்லவா. தனது குடும்ப கவ்ரவம் அல்லவா.

நாட்கள் ஓடின. குழந்தைகளின் தாய் மாமன் இந்த இரண்டு குழந்தை களையும் குழந்தை களின் பெரிய அப்பா வான பச்சை மற்றும் வீரம்மாளிடம் கொடுத்து விடலாம் என்று முடிவு எடுக்கிறார்.

ஆனால் வீரம்மாள் மிகவும் திமிரு பிடித்தவர் என்பதனால் அவரிடம் பேச பயந்து போய் முருகனிடம் சொல்லி அனுப்பி வைக்கிறார்கள். குழந்தைகள் எங்க போகிறோம் எண்பது கூட தெரியவில்லை. இருவரும் பயந்து கொண்டும். நடுங்கி கொண்டும் செல்கிறார்கள். தாய் இருந்தும் இல்லாமல் இருக்கும் ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது. இதைவிட கொடுமை எந்த குழந்தை களுக்கும் வரவே கூடாது.
தனது துணி மணி களோடும் புத்தக பை யோடும் அழுகு மூஞ்சி யோடும் செல்கிறது அந்த குழந்தைகள். அன்று அழ ஆரம்பித்தவர்கள் தான்.

ஒரு வழியாக வீரம்மாளிடம் போய் சேர்ந்தார்கள். வீரம்மலோ அக்கம் பக்கத்தினர் இந்த குழந்தை கள் யாரென்று கேட்டால் என்ன வென்று சொல்வேன். அலுவலகத்தில் என்ன சொல்வேன் என்று ஆரவாரம் இட்டாள். கஷ்டம் தான். அவலம் தான். யாரோ செய்த பாவம். நாம் பலி ஆகிறோம் என்று இருந்தவளுக்கு கொஞ்ச நாள் கழித்து தனக்கு குழந்தை இல்லை. ஆகவே இந்த குழந்தைகள் கிடைத்ததில் கொஞ்சம் ஆறுதல் அடைந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளிடம் அன்பு காட்ட ஆரம்பித்தாள். பள்ளி களுக்கு பீஸ் கட்டுவதும் புது துணி மணி வாங்கி கொடுப்பதும் தனது அருகில் உறங்க வைப்பது மாக சற்று ஆனந்தம் கொண்டாள். ஆனால் குழந்தை களிடம் அவ்வப்போது தனது தாய் செய்த செயலை சொல்லி சொல்லி வருவாள். ஏனெனில் அவளை போல் நீங்களும் வளர்ந்து விட கூடாது. அதனால் எனது வளர்ப்பு சரியில்ல என்று யாரும் சொல்லிவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்தாலும் கொஞ்சம் திமிராகவே இருந்தாள். இந்த இரண்டு குழந்தை களுக்கும் நூறு சதவிகிதம் அம்மா வாக மாற தொடங்கி விட்டாள்.

ஊரில் அனைவருக்கும் சந்தோசம். வீரம்மாள் நிறைய சம்பாதிக்கிறாள் குழந்தைகளையும் நன்கு வளர்க்கிறாள். சொத்து முழுவதும் இந்த குழந்தை களுக்கு தான் சேரும் என்று. இந்த நிலையில் சொந்த ஊர்களில் திருவிழா மற்றும் நல்லது கெட்டதுகளில் கலந்தும் கொள்வாள் குழந்தை களுடன்.

குழந்தைகள் மெதுவாக வளர தொடங்கியது. தாய் செய்யவேண்டிய அனைத்தும் பெரிய அம்மா( வீரம்மாள்)செய்துவர அவரை அம்மா என்றே அழைத்தனர். பிச்சை அப்பா என்றும் ஆகினார்.

நாட்கள் நகர்ந்தன. பெண் குழந்தை அகிலா நன்கு படித்து ஆசிரியர் பணிக்கு செல்கிறாள். கதிரவன் படித்து முடித்து கம்பெனி ஒன்றை ஆரம்பிக்கிறான். இதற்கு வீரம்மாள் முழு ஆதரவும் அளிக்கிறாள். இதற்கிடையில் பச்சை இறந்து விட வீரம்மாள் தனிமை படுதத படுகிறாள். இரண்டு குழந்தை களும் ஆதரவாக இருக்கிறார்கள். கதிரவனோ குடும்ப பொறுப்பாளர் ஆகிறார்.

அடுத்து அகிலாவிற்கு திருமண வயது(26) வருகிறது. திருமணம் பற்றி பேசும் போதெல்லாம் எப்படி மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்வது? மாப்பிள்ளை தருவார்களா? இப்படி பட்ட தாயின் குழந்தை என்றதுமே நிறைய வரணும் போய்விட்டார்கள் ஒத்துக்கொள்ள வில்லை. வீரம்மாளுக்கு ஓரே கவலை. தேடி அலைந்து ஒரு வரன் அமைகிறது. அவர்களிடம் மங்கம்மா பற்றி கூறுகிறார்கள்.மணம் இறங்கி வரனும் ஒத்துக்கொள்ள மங்கம்மாள் குல தெய்வத்திடம் கெடா வெட்டுவதாக வேண்டி கொள்கிறாள். வேலைகள் தடபுடலாக நடைபெறுகிறது. திருமணதிர்ற்கு மங்கம்மா வருவது குறித்து பேசப்படுகிறது.

அன்று எழுகிறான் கதிரவன். அமைதியாக இருந்த அவன் ஆவேசம் அடைகிறான். மங்கம்மா இந்த திருமணத்திற்கு வரவே கூடாது. அவர் வந்து வாழ்த்துவதை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள்.

வீரம்மாள் ஆடிப்போகிறாள். பெரிய பிள்ளைகள் ஆகி விடீர்களா? என்கிறாள். இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்தோம். இனி நாங்கள் வளர்ந்து திருமண வயதை அடைந்து விட்டோம் எங்களுக்கு நல்லது கெட்டது அனைத்தும் அறியும் வயதினை அடைந்து விட்டோம். என்று ஆவேசம் அடைகிறார்கள்.

வீரமளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவளும் குழந்தைகளின் விருப்பம் என்று கூறிவிட சொந்த ஊரில் குல தெய்வத்திற்கு பாக்கு வெத்தலை படைப்பது வழக்கம்.
சொந்த ஊருக்கு செல்கிறார்கள் ஊரில் உறவினர்கள் பலபேர் மங்கம்மாவையும் அவரது தாய் தந்தை அண்ணன் (பெண் தாய் மாமன்)அனைவரையும் அழைக்கும் படி கேட்கிறார்கள். கதிரவன் மீண்டும் எழுகிறான் எங்களை (அகிலா, கதிரவன்)தூக்கி எறிந்தவர்களை இப்போது நாங்கள் அவர்களை தூக்கி எறிகிறோம்.நாங்கள் தெளிவாக இருக்கிறோம் எங்களுக்கு அப்படி பட்ட உறவே வேண்டாம் என்று கூற ஊர் மக்கள் அனைவரும் அவன் திமிரு புடித்தவன். வீரம்மாளின் திமிரு அவனுக்கு உள்ளது என்கிறார்கள். எதற்கும் அவன் அசையவில்லை பிடிவாதமாகவே இருந்தான். ஊரில் பஞ்சாயத்து நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

வீரம்மாள்ளோ கணவன் இழந்தவள். குழந்தை களுக்கு யார் முன்னின்று திருமணம் முடிப்பார்கள் என்று இருக்கையில் பச்சையின் பெரியப்பா பசங்கனு சொல்லக்கூடிய கக்கனிடம் பேசுகிறார்கள்.கக்கன் பொதுவாகவே முடிவு சரியாக சொல்பவர். 80 வயதை உடையவர். மனைவி பாக்கியம் 75 வயது உடையவர். இவர்கள் இருவரும் இவர்களை பற்றி அனைத்தும் அறிந்தவர்கள்.

பஞ்சாயத்து கூடுகிறது. ஊரு நாட்டாமை மற்றும் ஊரு சனங்கள் கதிரவன் மங்கம்மா வீரம்மாள் என்று அனைத்து சொந்தங்களுக்கும் கூட
பஞ்சாயத்து தலைவர் வீரமாளிடம் கேட்கிறார்கள் மங்கம்மா மற்றும் அவர்களது தாய் தந்தை சகோதரனை திருமணத்திற்கு அழைக்க வேண்டும் தாய் மாமன் இருக்கும் பொது வேறு யார் வந்து சீர் செனத்தி செய்வார். தப்பு நடந்துவிட்டது. மன்னித்து ஏற்று கொள்ளுங்கள் என்று. அதற்கு வீரம்மளோ தன் மகன் தோளிற்கு மேல் வளர்ந்து விட்டான் அவன் என்ன சொல்கிறானோ அதுதான் எனது முடிவு என்று.
ஊரில் சின்ன வயசிலேர்ந்து வயசானவங்க வரைக்கும் கேட்டு பார்த்திட்டாங்க. கதிரவன் ஒத்துக்கவே இல்லை.

கதிரவன் பேச ஆரம்பித்தான். தாய் என்பவள் பெற்றால் மட்டும் போதாது கஷ்டமோ நஷ்டமோ குழந்தைகளை பிச்சை எடுத்தாவது வளர்க்க வேண்டும். எங்களுக்கு துரோகம் விளைவித்து விட்டாள். ஒரு தாய் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி அவள் இல்லை. எப்படியெல்லாம் இருக்க கூடாதோ அப்படி இருந்தார்
அன்று எங்களை பார்த்துக்கொள்ள முடியாது என்பதனால் தானே அவர்கள் அனைவரும் எங்களை தூக்கி எறிந்தார்கள். எவ்வளவு துன்பங்களை அனுபவித்து இருப்போம். இதுக்கு யார் காரணம். எங்களை அனாதை யாக்கினார்கள்.” எனது அம்மா வீரம்மாள்’ மட்டுமே. வேறு யாரும் எங்களுக்கு தேவை இல்லை. அவர்கள் எங்களை தூக்கி வளர்க்காவிட்டால் எங்களின் நிலைமை எப்படி இருந்திருக்குமோ. அன்று தூக்கி எங்களை எரியும் பொது பஞ்சாயத்து என்ன செய்து கொண்டு இருந்தது. 25 ஆண்டு காலம் எங்களை யாரென்று தெரியாத பஞ்சாயத்து இப்போது தேவையில்லை. இன்று வரை நினைத்து நினைத்து அழுது கொண்டிருக்கிறோம். இதற்கு யார் காரணம்?

நீங்களும் உங்க பஞ்சாயத்தும். என்று கூறிவிட்டு எழுந்து வந்துவிட்டான். பஞ்சாயத்து உடனே இந்த சின்ன பையன் எவ்வளவு திமிராக பேசுகிறான். பெரியர்களுக்கு மரியாதையை கொடுக்களை பஞ்சாயத்தை மதிக்கல. எனவே இந்த ஊர் சனங்க யாருமே இந்த திருமணத்துக்கு போக கூடாது. அப்படியே போறவங்கள இந்த ஊரு ஒதுக்கி வைக்கும். நல்லது கெட்டதுகளில் கலந்து கொள்ள கூடாது. என்று ஆணை இட்டு பஞ்சாயத்து முடிந்தது.

இது வரை அமைதியாக இருந்த கக்கன் எழுந்தார் சின்ன வயசானாலும் எவ்ளோ கருத்தா பேசுகிறான் எவ்ளோ துன்பம் அடைந்திருந்தால் அவன் அப்படி பேசுவான். தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டணை அடைந்தாக வேண்டும். யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. நான் முன்னின்று இந்த திருமணத்தை நடத்தி வைக்கிறேன். யாரும் வந்தால் வாங்க வராட்டி போங்கடா என்று எழுந்து திருமணத்தை சிறப்பாக செய்து வைக்க முடிவு எடுத்தார்கள்.நாம் அனைவரும் வாழ்ந்து முடித்தவர்கள். இந்த குழந்தைகள் இவ்வளவு நாள் தனது விருப்பம் போல வாழாதவர்கள். இனியாவது அவர்கள் விருப்பம் போல வாழ என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்ய போகிறேன் என்று கூறி இவர்களுக்கு என்னை விட்டாள் வேறு யாரும் இல்லை எழுந்து துண்டை உதறி விட்டு திருமண ஏற்பாடுகளை பார்க்க கிளம்பிவிட்டார்.

அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த மங்கம்மா என்னால தானே இவ்வ ளவு கஷ்டம்.

எனக்குத் தான் இந்த கதி ஆகிற்று. என் குழந்தைகளை வளர்க்கும் பாக்கியம் கூட எனக்கு கிடைக்கவில்லையே என்னை மன்னித்து விடுங்கள். குழந்தைகள் பெரியவர்களாகி விட்டார்கள். அவர்கள் முகத்தில் முளிக்கவே எனக்கும் வெட்கமாக உள்ளது என் கஷ்டம் என்னோடு போகட்டும். எனது குழந்தைகள் நலமாக இருக்க நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறேன். என்று அந்த இடத்தில் மங்கம்மா சொல்லி இருந்திருந்தால் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரி இருந்திருந்தால் கல் மணம் கூட கரைந்து இருக்குமே இவள் அதை கூட சொல்ல வில்லையே அழுத்தக் காரி கல்நெஞ்சு காரி என்று கக்கன் மிகவும் வருத்தமடைந்தார். இப்பொழுது சொல்லுங்கள் யாருக்கு திமிரு என்று.

ஊரில் இருப்போர் கக்கனை திமிரு பிடித்தவர் என்றார்கள்.

ஆமாம் அவரு திமிர் பிடித்தவர் தான்.

தனக்கென்று சொந்தமாக எதையுமே சேர்த்து கொள்ள வில்லை. தாங்கள் இருவரும் (கக்கன் மனைவி பாக்கியம்)

மலை காட்டில் சம்பாதித்தவர்கள். தான் சம்பாதித்தது அனைத்தையும் தனது சொந்த ஊரில் நிலம் மாடு ஆடு என்று வாங்கியவர். தனது சகோதரன் குடும்பத்தையும் தனது குழந்தை களை ப்போல பார்த்து அனைவரையும் படிக்க வைத்து தன்னால் முடிந்தவரை அனைத்தும் செய்தவர். பார்த்து கொண்டவர் அவரது கை கொடுத்தும், செய்தும், பழகிய கை. ஆயிரம் பேருக்கு உதவிய கை. அநேகம் பேருக்கு திருமணம் முடித்த கை. யாரிடமும் கையேந்தாத கை. இவ்வளவு வயதாகியும் இன்னும் சம்பாதித்து சாப்பிடும் கை. யாருக்கும் துரோகம் செய்யாத கை. இவர்களை திமிரு பிடித்தவர் என்று சொல்பவர்கள்தான் திமிர் பிடித்தவர்கள்.

இவர்களது கையில் திருமணம் முடிக்க அகிலா கொடுத்து வைத்தவர்
வீரமாள் நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கினாள்.

வீரம்மாள் நினைத்தாள் எனது தாய் தகப்பன் தங்கைகளுக்குகா எனது சம்பாத்தியத்தை கொடுத்தேன். உன் புள்ளைங்களுக்கு தானே செய்தேன்.

உங்களுக்கு மங்கம்மா வேண்டும் மங்காம்மாள் செய்த தவறை நாங்கள் மன்னிக்க வேண்டுமாம்.

நான் செய்த நல்ல காரியங்களை பாராட்ட மாட்டார்களாம்
மங்கம்மாள் பெற்ற குழந்தைகள் வேண்டாமாம்
என்னங்கடா உங்க பஞ்சாயத்து. என்று மனதில் புலம்பிக்கொண்டாள். கடைசியில் இவருக்கு தான் திமிரு ரொம்ப என்றார்கள்.

எப்படியோ ஒருவழியாக திருமணம் நல்ல படியாகவே நடந்து முடிந்தது.
பஞ்சாயத்து சொன்னது போலவே ஊர்சனம் ஒருத்தரும் வரவில்லை.
இன்னமும் தனக்கு சொந்தபுத்தியும் சுய புத்தியும் இன்றி பஞ்சாயத்து சொல்வது தான் சரி என்றும் பஞ்சாயத்து சொல்வதை மட்டுமே கேட்கும் கிராமங்களும் இருக்க தான் செய்கின்றன.

இந்த தாய் தகப்பன் இல்லாத குழந்தைகளின் திருமணத் திற்கு வராதவர்களுக்கு தான் திமிரு என்று சொன்னால் மிகையாகாது.

இந்த பஞ்சாயத்தால் ஒன்றாக இருந்த குடும்பங்கள் இன்று இரண்டாக பிரிந்தது. வாழ்க பஞ்சாயத்து.

1 Like