Community

எழுந்து வா உலகமே எதிர்காலம் இனிதாய் அமையுமே

“எழுந்து வா உலகமே எதிர்காலம் இனிதாய் அமையுமே”

செம்மன் நிற மேனியில் பச்சை நிற ஆடை போத்தி
அன்று பகுமானமாய் வாழ்ந்த என் பூமி தாய்
இன்று தீப்பிழம்பெல்லாம் தீர்த்தமாய் பொழிய
தீக்கிரையானது யாராலே?
அய்யோ!
கொள்ளை கொல்லும் அழகை
கொள்ளை இட்டு சென்றவன் யார்?

அடே மானிடா
வளர்ச்சி வளர்ச்சி என்ற பெயரில்
அடி மரத்தை அறுத்து விட்டு
நுனி மரத்தில் ஏறி நின்று
உச்சி அடைந்து விட்டேன் என்று உளறல் இட்டாயே
பார்த்தாயா?

அண்டை நாட்டில் நடந்ததையும்
அன்னை நாட்டில் நடப்பதையும் கண்டு அடுத்த நொடி என்னவாகுமோ என்ற அளறல் சத்தம் கேக்குதா.

அய்யகோ!
அகிலமே நடுங்குது - ஆங்காங்கே
அன்றாடம் பல ஆயிரம் உயிர்கள் மடியிது.
வானளவு வளர வேண்டிய வர்த்தகம்
வங்கக் கடலில் மூழ்குது.
வைத்தியசாலை ஒன்றை தவிர
வையகத்தில் அத்தனையும் அடங்கி ஒடுங்கி கிடக்குது.

தாய் ஒரு அறையில்,. தந்தை ஒரு அறையில், மகன், மகள்… என ஒட்டி பிறந்த உறவுகளும் ஒதுங்கி செல்கின்றனர்
ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளலாமல்.
தொட்டால் ஒட்டி கொள்ளுமாம்.
ஒட்டி கொண்டால்
ஒரேயடியாக உயிரைக் கொள்ளுமாம் என்று…

உயிர் கொள்ளி நோய் வந்து உலகத்தை ஆட்கொள்ள
ஊரடங்கு உத்தரவு ஒவ்வொரு நாளும் அமலாகுது.
ஆடம்பர வாழ்க்கை எல்லாம்
ஐந்தாறு நாளில் முடிவாக
அத்தியாவசிய பொருட்கள் தேடி மக்கள் அங்கும் இங்கும் அலைமோதுது.

இது இயற்கையின் மூலம் இறைவன் வித்திட்டதா.
இல்லை செயற்க்கையாய்
சீனாவால் தொத்திவிட்டதோ.
என்னவென்று தெரியாமல்
அரண்டு போய் கிடக்கிறார்கள் அத்துனை பேரும்.
உன்பதும் உறங்குவதும் என ஒவ்வொரு நாளும் நகக்கணு போல் நடைபோட்டு கொண்டு.

வானுர்தி பறக்கவில்லை
எந்த வாகனங்களும் இயங்கவில்லை.
இயந்திர வாழ்க்கை எல்லாம் இயங்காமல் உறைந்து நிற்க
இயற்க்கை வாழ்வு மட்டும் இன்றியமையாத ஒன்றாய் நிமிர்ந்து நிற்க்கிறது.

மருந்தை படைத்தல் தொழிலைச் மருத்துவரும்,
கள்வர்களிடமிருந்து காத்தல் தொழிலை காவலரும்,
கிருமிகளை அழித்தல் தொழிலை
தூய்மை பணியாளரும், என தூக்கம் இன்றி அவர்கள் செயலாற்ற
நாம் துயில் கொள்கிறோம் நிம்மதியாக.‌‌…

தொலைகாட்சி தொடரோடும்
தொலைதொடர்பு உதவியில்
தொலைபேசியில் உரையாடல் பலவோடும்.
சினிமா, சமையல் என குறும்புகள் செய்து நாளும் பொழுதை போக்குகிறோம்…

இயல்புநிலை மாறாதா
இன்னல்கள் தீராதா
என
இமைகளில் ஏக்கத்துடன்…

அடே மதிகெட்டா மானிடா

இது வரை…

இயற்க்கைக்கும் இவ்வுலகிற்க்கும் நாம் செய்த இன்னல்கள் போதும்.
இல்லையெனில் எதிர்காலத்தில் இன்னும் நீ அனுபவிக்க கூடும் …
எனவே ஆடம்பர வாழ்க்கையை குறைத்து கொண்டு .
அத்தியாவசியத்தை மட்டும் அமைத்து கொண்டு
இயன்றதை இவ்வுலகிற்கு தந்து விட்டு
இறைவனடி சேர்வோம் இன்பத்தோடு…

மதங்களை கொன்று
மரனத்தை வென்று
புது மானுடம் படைப்போம் வா!
சாதியம் கொன்று
சமத்துவம் வென்று
புது சரித்திரம் படைப்போம் வா !!
செயற்கையை கொன்று
செங்கோல் வென்று
இயற்க்கையோடு இனிமை காண்போம் வா !!!

“எழுந்து வா உலகமே எதிர்காலம் இனிதாய் அமையுமே”

எண்ணமும் எழுத்தும்

கவிஞர் . துளசி விக்னேஷ்BE.,:rose::dove:

1 Like